Pages

Thursday, April 24, 2025

Today rasi palan - 25.04.2025

 


Today rasi palan -
25.04.2025

இன்றைய ராசிப்பலன் -  25.04.2025

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

25-04-2025, சித்திரை 12, வெள்ளிக்கிழமை, துவாதசி திதி பகல் 11.45 வரை பின்பு தேய்பிறை திரியோதசி. பூரட்டாதி நட்சத்திரம் காலை 08.53 வரை பின்பு உத்திரட்டாதி. நாள் முழுவதும் சித்தயோகம். பிரதோஷ விரதம். சிவ வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் - பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00  

 

ராகு புதன் சுக்கி சனி சந்தி

சூரிய

குரு

 

 

 

25.04.2025

செவ்

 

 

 

 

 

கேது

 

இன்றைய ராசிப்பலன் -  25.04.2025

மேஷம்

இன்று பிள்ளைகளால் வீண் செலவுகள் செய்ய நேரிடும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் சிறு மனகசப்பு ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேலையில் ஏற்படும் பணிச்சுமையை உடன் பணிபுரிபவர்கள் பகிர்ந்து கொள்வர். நண்பர்கள் ஆதரவு கிட்டும். கடன் பிரச்சினை குறையும்.

ரிஷபம்

இன்று புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வீட்டில் பெண்கள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். உற்றார் உறவினர்கள் மூலம் அனுகூலப் பலன்கள் கிட்டும். புதிய பொருட்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும்.

மிதுனம்

இன்று வீட்டில் சுபசெலவுகள் ஏற்படும். அரசுத் துறையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். பிள்ளைகளால் பெருமை வந்து சேரும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆதரவான செயல்பாடுகளால் லாபம் அடைவீர்கள்.

கடகம்

இன்று உங்களின் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். குடும்பத்தில் கணவன்-& மனைவியிடையே சிறு சிறு மன ஸ்தாபங்கள் ஏற்படலாம். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். உத்தியோகஸ்தர்களுக்கு வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் அமையும்.

சிம்மம்

இன்று உங்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுபாடு தேவை.  வியாபாரத்தில் பணம் சம்பந்தமான கொடுக்கல்& வாங்கலில் கவனத்துடன் செயல்பட வேண்டும்.

கன்னி

இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். இது வரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

துலாம்

இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து முடிப்பீர்கள். வெளியூர் பயணங்களால் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உத்தியோக ரீதியாக வெளிவட்டார தொடர்பு ஏற்படும். குடும்பத்தில் புத்திர வழியில் சுபசெய்திகள் வந்து சேரும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

விருச்சிகம்

இன்று எதிர்பாராத திடீர் செலவுகள் உண்டாகும். குடும்பத்தினருடன் சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். பிள்ளைகள் வகையில் ஒருசில அனுகூலங்கள் உண்டாகும். வேலையில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது.

தனுசு

இன்று குடும்பத்தில் வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறையக்கூடிய சூழ்நிலை உருவாகும். வியாபாரத்தில் பிரச்சினைகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.

மகரம்

இன்று இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் நற்பலனைத் தரும். தொழில் வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

கும்பம்

இன்று பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படும். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணிச்சுமை அதிகரிக்கலாம். உறவினர்கள் மூலம் உதவி கிடைக்கும். பெரிய மனிதர்களின் நட்பு தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். செலவுகள் குறையும்.

மீனம்

இன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நற்பலனை தரும். ஒரு சிலர் பொன் பொருள் வாங்கி மகிழ்வர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும்.

No comments:

Post a Comment