Pages

Thursday, July 17, 2025

Today rasi palan - 17.07.2025

 


Today rasi palan - 17.07.2025

இன்றைய ராசிப்பலன் -  17.07.2025

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

17-07-2025, ஆடி 01, வியாழக்கிழமை, சப்தமி திதி இரவு 07.09 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி. ரேவதி நட்சத்திரம் பின்இரவு 03.39 வரை பின்பு அஸ்வினி. சித்தயோகம் பின்இரவு 03.39 வரை பின்பு அமிர்தயோகம். பைரவர் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் - மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.

 

சனி (வ)

சந்தி

 

சுக்கி

குரு

 

ராகு

 

17.07.2025

சூரிய புதன்

 

செவ் கேது

 

 

 

 

 

இன்றைய ராசிப்பலன் - 17.07.2025

மேஷம்

இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் எதிர்பாராத நெருக்கடிகள் ஏற்படலாம். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். தொழில் ரீதியாக செல்லும் பயணங்களில் அனுகூலப்பலன் கிட்டும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.

ரிஷபம்

இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். வேலையில் முழு ஈடுபாட்டுடனும், தெம்புடனும் செயல்படுவீர்கள். பொன்பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியம் சீராகும்.

மிதுனம்

இன்று உங்களுக்கு அதிகாலையிலேயே ஆனந்தமான செய்தி வந்து சேரும். திருமண சுப முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். பொன்பொருள் சேர்க்கை மனதிற்கு மகிழ்ச்சி தரும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும்.

கடகம்

இன்று உங்களுக்கு எளிதில் முடியக்கூடிய காரியங்கள் கூட தாமதமாக முடியும். எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை தரலாம். வியாபாரத்தில் கூட்டாளிகளோடு சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். உங்கள் முயற்சிகளுக்கு உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். தெய்வ வழிபாடு நல்லது.

சிம்மம்

இன்று உங்கள் உடல்நிலையில் சோர்வும் சுறுசுறுப்பின்மையும் நிலவும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த ஒரு வேலையிலும் ஈடுபாடின்றி செயல்படுவீர்கள். மற்றவர்கள் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது, தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. வேலையில் கவனம் தேவை.

கன்னி

இன்று பிள்ளைகளால் மனமகிழும் நிகழ்ச்சிகள் நடக்கும். உறவினர்களிடம் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். புதிய வண்டி, வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். நண்பர்களின் ஆலோசனைகள் வியாபார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிடைக்கும்.

துலாம்

இன்று உங்களுக்கு பணவரவு சிறப்பாக இருக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். வேலையில் எதிர்பாராத மகிழ்ச்சி உண்டாகும். வம்பு, வழக்கு போன்ற விஷயங்களில் வெற்றி வாய்ப்பு அமையும். சுபகாரியங்கள் கைகூடும்.

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைவுகள் ஏற்படலாம். உத்தியோக ரீதியாக அலைச்சலும் டென்ஷனும் உண்டாகும். நினைத்த காரியம் நிறைவேற உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களின் சந்திப்பால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும்.

தனுசு

இன்று தொழில் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். வீண் செலவுகளை சமாளிக்க கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து சென்றால் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம்-. உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். நண்பர்களின் ஆதரவு கிட்டும்.

மகரம்

இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். சிலருக்கு புதிய பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவர். வியாபாரத்தில் கூட்டாளிகளால் அனுகூலம் ஏற்படும்.

கும்பம்

இன்று நீங்கள் எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிக்க உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் சற்று இழுபறி நிலை உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் சற்று நிதானம் தேவை. உறவினர்கள் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.

மீனம்

இன்று நீங்கள் தொட்ட காரியம் அனைத்தும் வெற்றியை தரும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

No comments:

Post a Comment