Pages

Saturday, August 2, 2025

Today rasi palan - 02.08.2025

 


Today rasi palan -
02.08.2025

இன்றைய ராசிப்பலன் -  02.08.2025

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

02-08-2025, ஆடி 17, சனிக்கிழமை, அஷ்டமி திதி காலை 07.24 வரை பின்பு வளர்பிறை நவமி. நாள் முழுவதும் விசாகம் நட்சத்திரம். நாள் முழுவதும் சித்தயோகம். புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.

இராகு காலம் - காலை 09.00-10.30,  எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

 

சனி (வ)

 

 

குரு சுக்கி

ராகு

 

02.08.2025

சூரிய புதன் (வ)

 

கேது

 

 

 சந்தி

செவ்

 

இன்றைய ராசிப்பலன் -  02.08.2025

மேஷம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிடைக்கும். தொழில் சம்பந்தமாக எடுக்கும் புதிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிட்டும்.

ரிஷபம்

இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். குடும்பத்தில் பெண்கள் ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். வேலையில் உங்களுக்கு இருந்த போட்டி பொறாமைகள் விலகும். சுபகாரிய முயற்சிகள் நற்பலனை கொடுக்கும்.

மிதுனம்

இன்று நீங்கள் செய்யும் காரியங்கள் மற்றவர்கள் தலையீட்டால் தடைப்படும். எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை அளிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக செயல்பட்டால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும்.

கடகம்

இன்று உத்தியோகத்தில் எதிர்பாராத வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் நல்ல லாபத்தை அடையலாம். தெய்வ தரிசனம் மனதிற்கு நிம்மதியை தரும். நண்பர்களின் ஆதரவு கிட்டும்.

சிம்மம்

இன்று வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அமோகமாக இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பையும், ஆதரவையும் பெறுவீர்கள். குடும்பத்தில் புத்திர வழியில் சுபசெய்திகள் வந்து சேரும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.

கன்னி

இன்று நீங்கள் எந்த காரியத்திலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். வெளி வேலைகளால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும்.  உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழிலில் ஓரளவு லாபம் கிட்டும்.

துலாம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களின் ஆலோசனைகள் வியாபார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். சிலருக்கு புதிய பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.

விருச்சிகம்

இன்று பிள்ளைகளால் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படலாம். நண்பர்களின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் கிட்டும்.

தனுசு

இன்று பணவரவு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் இதுவரை இருந்த டென்ஷன்கள் விலகி நிம்மதி ஏற்படும். சுபகாரியங்கள் கைகூடும். உறவினர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் குறையும்.

மகரம்

இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். வேலையில் சக ஊழியர்களால் அனுகூலப் பலன் உண்டாகும். தொழில் ரீதியான வம்பு, வழக்குகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அமையும். நினைத்தது நிறைவேறும்.

கும்பம்

இன்று நீங்கள் நினைத்த காரியம் நிறைவேற உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோக ரீதியான பயணங்களால் வீண் அலைச்சல் உண்டாகும். பெரியவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சுமூக உறவு ஏற்படும். உடல் ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனம் தேவை.

மீனம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் சில இடையூறுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்பு ஏற்படும். புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. வண்டி, வாகனங்களில் செல்கின்ற போது கவனம் தேவை. பேச்சில் பொறுமையாக இருப்பது உத்தமம்.

No comments:

Post a Comment