Pages

Friday, March 6, 2026

Today rasi palan - 06.03.2026

 


Today rasi palan -
06.03.2026

இன்றைய ராசிப்பலன் -  06.03.2026

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

06-03-2026, மாசி 22, வெள்ளிக்கிழமை, திரிதியை திதி மாலை 05.54 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி. அஸ்தம் நட்சத்திரம் காலை 09.30 வரை பின்பு சித்திரை. அமிர்தயோகம் காலை 09.30 வரை பின்பு சித்தயோகம். சங்கடஹர சதுர்த்தி விரதம். விநாயகர் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். வாஸ்து நாள் 10.30 மணி முதல் 11.06 மணி வரை.

இராகு காலம் - பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00  

 

சனி சுக்கி

 

 

குரு (வ)

சூரிய புதன்(வ) செவ் ராகு

 

06.03.2026

 

 

கேது

 

 

  

சந்தி

 

இன்றைய ராசிப்பலன் -  06.03.2026

மேஷம்

இன்று உறவினர்களால் குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளின் விருப்பங்கள் நிறைவேறும். தொழில் சம்பந்தமான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும். பணப்புழக்கம் அதிகமாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும்.

ரிஷபம்

இன்று வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தில் பெற்றோரிடம் வீண் மனஸ்தாபங்கள் உண்டாகும். மன அமைதி குறையும். உத்தியோகத்தில் வெளியூர் தொடர்புகள் மூலம் அனுகூலப்பலன்கள் உண்டாகும். பெரிய மனிதர்களின் ஆலோசனைகள் புது நம்பிக்கையை தரும்.

மிதுனம்

இன்று நீங்கள் பலவீனமாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை ஏற்படலாம். தொழில் ரீதியாக சில தடைகள் இருந்தாலும் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் பிரச்சினைகள் ஓரளவுக்கு குறையும். உறவினர்களிடம் வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது.

கடகம்

இன்று உடல் ஆரோக்கியம் சிறப்படைந்து சுறுசுறுப்புடன் இருப்பீர்கள். உடன்பிறந்தவர்களுடன் இருந்த பிரச்சினைகள் நீங்கும். சுபகாரிய முயற்சிகள் வெற்றியை தரும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவு கிட்டும். தொழில் சம்பந்தமான புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். வருமானம் பெருகும்.

சிம்மம்

இன்று பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படலாம். புதிய பொருட்கள் வாங்குவதன் மூலம் செலவுகள் அதிகரிக்கும். சிக்கனமாக செயல்பட்டால் கடன் பிரச்சினைகளை குறைக்கலாம். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். சிலருக்கு உத்தியோகத்தில் உயர்வு கிட்டும்.

கன்னி

இன்று உங்களுக்கு தடைப்பட்ட பணவரவுகள் கைக்கு வந்து சேரும். குடும்பத்தில் மனமகிழும் நிகழ்ச்சிகள் நடைபெறும். சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோக ரீதியாக வெளிவட்டார நட்பு ஏற்படும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.

துலாம்

இன்று உங்களுக்கு வண்டி வாகனங்கள் மூலமாக வீண் விரயங்கள் ஏற்படும். ஆடம்பர செலவுகளால் கையிருப்பு குறையும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்பட்டால் அனு-கூலப் பலன் கிட்டும்.

விருச்சிகம்

இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்துடன் வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். பெரிய மனிதர்களின் உதவியால் எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். உடன் பிறப்புகளால் அனுகூலம் உண்டாகும்.

தனுசு

இன்று நீங்கள் எந்த காரியத்தையும் துணிவுடன் செய்து முடிப்பீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். கொடுத்த கடன்கள் வசூலாகும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும்.

மகரம்

இன்று செய்யும் செயல்களில் சற்று மந்த நிலை காணப்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்ப-டும். மனஉறுதியோடு பிரச்சினைகளை எதிர்கொள்வீர்கள். உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். கடன் பிரச்சினை தீரும். தொழிலில் சிறுசிறு மாற்றங்கள் செய்து லாபம் அடைவீர்கள்.

கும்பம்

இன்று நீங்கள் எந்த விஷயத்திலும் கவனமுடன் செயல்பட வேண்டும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பொறுமையுடன் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றும். புதிய முயற்சிகளை தவிர்ப்பது உத்தமம். வாகனங்களில் செல்லும் போது நிதானம் தேவை.

மீனம்

இன்று உங்களுக்கு தனவரவு தாராளமாக இருக்கும். உற்றார் உறவினர்கள் வழியில் சுபசெலவுகள் ஏற்படும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். கொடுக்கல் வாங்கல் லாபம் தரும். பொன் பொருள் வாங்கும் யோகம் அமையும்.

No comments:

Post a Comment