Pages

Monday, May 25, 2026

Today rasi palan - 25.05.2026

 


Today rasi palan -
25.05.2026

இன்றைய ராசிப்பலன் -  25.05.2026

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

25-05-2026, வைகாசி 11, திங்கட்கிழமை, தசமி திதி பின்இரவு 05.11 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி. உத்திரம் நட்சத்திரம் பின்இரவு 04.09 வரை பின்பு அஸ்தம். நாள் முழுவதும் சித்தயோகம். சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.

 

சனி

செவ்

சூரிய புதன்

குரு சுக்கி

ராகு

 

25.05.2026

 

 

சந்தி கேது

 

 

  

 

 

இன்றைய ராசிப்பலன் - 25.05.2026

மேஷம்

இன்று வீட்டில் சுபசெலவுகள் ஏற்படும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு இருக்கும். வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு பணி சுமையை குறைக்கும். தொழில் வளர்ச்சிக்காக அரசு வழி உதவிகள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.

ரிஷபம்

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் நிதானம் தேவை. வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலங்கள் உண்டாகும். சுபகாரியங்கள் கைகூடும். வியாபாரத்தில் இதுவரை எதிரிகளால் இருந்த தொல்லைகள் குறையும்.

மிதுனம்

இன்று பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படும். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உண்டாகும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். எந்த காரியத்தையும் சிந்தித்து செயல்பட்டால் வெற்றி பெறலாம். தெய்வ வழிபாடு நன்மையை தரும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

கடகம்

இன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நற்பலன்களை தரும். பெண்கள் வகையில் ஒருசில அனுகூலங்கள் உண்டாகும். பொன் பொருள் வாங்கி மகிழ்வீர்கள்.

சிம்மம்

இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் மனகசப்பு உண்டாகலாம். குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். வேலையில் ஏற்படும் பணிச்சுமையை உடன் பணிபுரிபவர்கள் பகிர்ந்து கொள்வர். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை

கன்னி

இன்று இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகள் வழியில் பெருமை சேரும். தொழிலில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் நற்பலன்கள் கிட்டும். வேலையில் சக ஊழியர்கள் ஆதுரவாக செயல்படுவார்கள்.

துலாம்

இன்று எதிர்பாராத வகையில் திடீர் செலவுகள் உண்டாகும். வீட்டில் பெரியவர்களுடன் சிறு சிறு மனசங்கடங்கள் தோன்றும். முயற்சி செய்தால் எடுக்கும் காரியத்தில் முன்னேற்றம் அடையலாம். உத்தியோகத்தில் புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும்.

விருச்சிகம்

இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். வியாபாரத்தில் கூட்டாளிகளோடு ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். வருமானம் இரட்டிப்பாகும். தேவைகள் பூர்த்தியாகும்.

தனுசு

இன்று குடும்பத்தில் சுப செலவுகள் உண்டாகும். உடன்பிறந்தவர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் மறையும். அனுபவம் உள்ளவர்களின் அறிவுரைகளால் தொழில் வியாபாரத்தில் லாபம் ஏற்படும்.  வேலையில் சக ஊழியர்களுடன் இருந்த பிரச்சினைகள் தீரும். பயணங்களால் அனுகூலம் கிட்டும்.

மகரம்

இன்று உங்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும். சகோதர சகோதரிகளுடன் வீண் மனஸ்தாபங்கள் தோன்றும். உங்கள் ராசிக்கு காலை 09.07 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் பொறுமையுடன் இருப்பது நல்லது. வியாபார ரீதியான பிரச்சினைகள் படிப்படியாக குறையும்.

கும்பம்

இன்று உங்கள் ராசிக்கு காலை 09.07 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் செய்ய நினைக்கும் காரியங்களில் காலதாமதம் உண்டாகும். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி புதிய முயற்சிகளை செய்யாமல் இருப்பது நல்லது. வெளியூர் பயணங்களை தவிர்ப்பது உத்தமம். பணியில் கவனம் தேவை.

மீனம்

இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து அதில் வெற்றி காண்பீர்கள். குடும்பத்தில் பிள்ளைகளால் பெருமை சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய பொருட்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும்.

No comments:

Post a Comment