Pages

Sunday, June 7, 2026

Today rasi palan - 07.06.2026

 


Today rasi palan -
07.06.2026

இன்றைய ராசிப்பலன் -  07.06.2026

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

07-06-2026, வைகாசி 24, ஞாயிற்றுக்கிழமை, சப்தமி திதி பின்இரவு 03.25 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி. அவிட்டம் நட்சத்திரம் காலை 07.55 வரை பின்பு சதயம். மரணயோகம் காலை 07.55 வரை பின்பு சித்தயோகம். சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் - மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் -  பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00,  மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00.

 

சனி

செவ்

சூரிய

புதன் சுக்கி

சந்தி ராகு

 

07.06.2026

குரு

 

கேது

 

 

  

 

 

இன்றைய ராசிப்பலன் -  07.06.2026

மேஷம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். அனுபவமுள்ளவர்களின் அறிவுரையால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகளின் விருப்பங்கள் எளிதில் நிறைவேறி மகிழ்ச்சியை அளிக்கும்.

ரிஷபம்

இன்று பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் மீண்டும் தொடரும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உற்றார் உறவினர்கள் வழியில் சுப செய்திகள் வந்து சேரும்.

மிதுனம்

இன்று எந்த செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் உங்களின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பார்கள். உடன் பிறந்தவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். குடும்பத்தில் பெண்கள் சிக்கனமாக செயல்படுவார்கள். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும்.

கடகம்

இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையில்லாத மன கஷ்டமும், குழப்பமும் உண்டாகும். எந்த செயலிலும் பொறுமையாக இருப்பது நல்லது. உற்றார் உறவினர்களிடம் பேசும் பொழுது நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.

சிம்மம்

இன்று உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை அதிகமாகும். வீட்டில் சுப பேச்சுகள் நற்பலனை தரும். வியாபாரம் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களின் உதவியால் கடன் பிரச்சினைகள் தீரும்.

கன்னி

இன்று பணவரவு அமோகமாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் குறைவில்லாமல் இருக்கும். பிள்ளைகள் கலைத்துறையில் ஆர்வத்துடன் ஈடுபடுவர். வியாபாரத்தின் முன்னேற்றத்திற்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். இதுவரை வராத கடன்கள் வசூலாகும்.

துலாம்

இன்று பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். உறவினர்களால் குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். பெரியவர்களின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு நம்பிக்கையை தரும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வீட்டில் பெண்களின் பணி சுமை குறையும்.

விருச்சிகம்

இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளின் உதவியால் நல்ல லாபம் கிடைக்கும். இதுவரை இருந்த போட்டி பொறாமைகள் குறையும். எந்த வேலையிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சிகள் நடைபெறும். சுபகாரியங்கள் கைகூடும். உடல் ஆரோக்கியம் சீராகும்.

தனுசு

இன்று உங்களுக்கு சுபசெலவுகள் உண்டாகும். சகோதர, சகோதரிகள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு பல போட்டிகளுக்கு இடையே வெற்றி ஏற்படும். எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று லாபங்கள் அதிகரிக்கும். ஆரோக்கியம் சீராகும்.

மகரம்

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் அனுகூலப் பலன் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் மறைந்து ஒற்றுமை நிலவும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தினர் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். கடன்கள் குறையும்.

கும்பம்

இன்று எந்த செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் உங்களின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பார்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும்.

மீனம்

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகும். நெருங்கியவர்களால் மன சங்கடங்கள் ஏற்படலாம். தொழில் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். எதிர்பாராத உதவிகளால் நெருக்கடிகள் விலகி தேவைகள் பூர்த்தியாகும்.

No comments:

Post a Comment