Pages

Tuesday, May 5, 2026

Today rasi palan - 05.05.2026

 


Today rasi palan -
05.05.2026

இன்றைய ராசிப்பலன் -  05.05.2026

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

05-05-2026, சித்திரை 22, செவ்வாய்க்கிழமை, நாள் முழுவதும் தேய்பிறை சதுர்த்தி திதி. கேட்டை நட்சத்திரம் பகல் 12.54 வரை பின்பு மூலம். மரணயோகம் பகல் 12.54 வரை பின்பு அமிர்தயோகம். சங்கடஹர சதுர்த்தி விரதம். விநாயகர் வழிபாடு நல்லது.

இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

 

சனி செவ்

சூரிய புதன்

சுக்கி

குரு

ராகு

 

05.05.2026

 

 

கேது

 

சந்தி

  

 

 

இன்றைய ராசிப்பலன் -  05.05.2026

மேஷம்

இன்று குடும்பத்தில் உள்ளவர்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது. உங்கள் ராசிக்கு பகல் 12.54 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகளையும் சுபகாரியங்களையும் மதியத்திற்கு பிறகு மேற்கொள்வது உத்தமம். இதுவரை இருந்த ஆரோக்கிய பாதிப்புகள் படிப்படியாக குறையும்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படும். உங்கள் ராசிக்கு பகல் 12.54 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் நிம்மதியில்லாத நிலை தோன்றும். வரவேண்டிய தொகை கைக்கு கிடைப்பதில் கால தாமதமா-கும். எந்த செயலையும் நிதானமாக செய்வது நல்லது.

மிதுனம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். பிள்ளைகள் வழியில் மனம் மகிழும் செய்திகள் வந்து சேரும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப் பலன் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

கடகம்

இன்று அதிகாலையிலே ஆனந்தமான செய்திகள் வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.

சிம்மம்

இன்று குடும்பத்தில் வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். சிக்கனமாக செயல்பட்டால் பணபிரச்சினையை தவிர்க்கலாம். உத்தியோகத்தில் ஏற்படும் பணிச்சுமையை உடன் பணிபுரிபவர்கள் பகிர்ந்து கொள்வார்கள்.

கன்னி

இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து அதில் வெற்றியும் காண்பீர்கள். வேலையில் உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். பெரிய மனிதர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். வருமானம் பெருகும்.

துலாம்

இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். தொழில் ரீதியாக எதிர்பார்த்த அரசு வழி உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வருமானம் பெருகும்.

விருச்சிகம்

இன்று எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். தொழில் சம்பந்தமான வெளிவட்டார தொடர்பு கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சுபகாரியங்கள் கைகூடும்.

தனுசு

இன்று குடும்பத்தினருடன் வெளியூர் பயணங்கள் செல்லும் வாய்ப்பு அமையும். செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் சேமிக்க முடியும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தொழிலில் புதிய மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் நல்ல முன்னேற்றத்தை அடையலாம். பிள்ளைகளின் விருப்பங்கள் நிறைவேறும்.

மகரம்

இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படும். ஆரோக்கியத்திற்காக சிறு சிறு மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் ரீதியான பயணங்களில் அலைச்சலுக்கேற்ப ஆதாயங்கள் உண்டு.

கும்பம்

இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் இருந்த தடங்கல்கள் நீங்கும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். வேலையில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும்.

மீனம்

இன்று நீங்கள் நினைத்த காரியம் எளிதில் நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். ஆடை ஆபரணம் சேர்க்கை ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். நீண்ட நாள் எதிர்பார்த்திருந்த வங்கி கடன் கிடைக்கும். உடல்நிலை சீராகும்.

No comments:

Post a Comment