Pages

Wednesday, May 6, 2026

Today rasi palan - 06.05.2026

 


Today rasi palan -
06.05.2026

இன்றைய ராசிப்பலன் -  06.05.2026

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

06-05-2026, சித்திரை 23, புதன்கிழமை, சதுர்த்தி திதி காலை 07.51 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி. மூலம் நட்சத்திரம் பகல் 03.53 வரை பின்பு பூராடம். மரணயோகம் பகல் 03.53 வரை பின்பு அமிர்தயோகம். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00

 

சனி செவ்

சூரிய புதன்

சுக்கி

குரு

ராகு

 

06.05.2026

 

 

கேது

சந்தி

 

  

 

 

இன்றைய ராசிப்பலன் -  06.05.2026

மேஷம்

இன்று வீட்டில் ஒற்றுமை குறையும் சூழ்நிலை உருவாகும். திருமண பேச்சுவார்த்தைகள் கைகூடும் நேரத்தில் இடையூறுகள் ஏற்படலாம். பிள்ளைகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள். வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும்.

ரிஷபம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் அலைச்சல் டென்ஷன் உண்டாகும். எந்த ஒரு சுப காரியத்தையும், தொழில் சம்பந்தமாக எடுக்கப்படும் புதிய முயற்சிகளையும் தள்ளி வைப்பது நல்லது. வெளி இடங்களில் அமைதியாக இருந்தால் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

மிதுனம்

இன்று நீங்கள் எந்த காரியத்தையும் சிறப்புடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். பொருளாதார தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடும்.

கடகம்

இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக ஏற்றங்கள் உண்டாகும். நண்பர்கள் உதவியுடன் எடுத்த காரியத்தை சிறப்புடன் செய்து முடிப்பீர்கள். ஆரோக்கிய பாதிப்புகள் குறையும், கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் கிடைக்கும். சேமிப்பு உயரும்.

சிம்மம்

இன்று உங்களுக்கு பணப்புழக்கம் சற்று குறைவாக இருக்கும். உத்தியோகத்தில் எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படலாம். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பண சிக்கலை தவிர்க்கலாம். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும்.

கன்னி

இன்று உங்களுக்கு பயணங்களால் அதிக அலைச்சல் ஏற்படும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். பெரியவர்களின் ஆலோசனைகளால் வாழ்வில் புதிய மாற்றங்கள் உண்டாகும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

துலாம்

இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். புதிய முயற்சிகளில் ஆர்வம் அதிகமாகும். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். கொடுத்த வாக்கை காப்பற்ற முடியும்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிள்ளைகள் வழியில் சிறுசிறு மனசங்கடங்கள் உண்டாகும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும்.

தனுசு

இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும். சிலருக்கு புதிய பொருள், வண்டி, வாகனம் வாங்கும் யோகம் கிட்டும்.

மகரம்

இன்று வேலையில் எதிர்பாராத பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். குடும்பத்தில் வரவை காட்டிலும் செலவுகள் அதிகரிக்கும். மனைவி வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். தொழிலில் இருந்த தேக்க நிலை பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பால் மாறும். சுபகாரியங்கள் கைகூடும்.

கும்பம்

இன்று உத்தியோகஸ்தர்களின் திறமைகள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். உற்றார் உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தொழில் சம்பந்தபட்ட வழக்கு விஷயங்களில் வெற்றி உண்டாகும். பணவரவு தாராளமாக இருக்கும்.

மீனம்

இன்று உங்களுக்கு திடீர் பணவரவுகள் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். கடன் பிரச்சினை தீரும்.

No comments:

Post a Comment