Showing posts with label இன்று - 02.02.2017. Show all posts
Showing posts with label இன்று - 02.02.2017. Show all posts

Thursday, February 2, 2017

இன்று - 02.02.2017


கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com


இன்றைய  பஞ்சாங்கம்
02.02.2017, தை 20, வியாழக்கிழமை, சஷ்டி திதி இரவு 12.42 வரை பின்பு வளர்பிறை சப்தமி, ரேவதி நட்சத்திரம் இரவு 09.11 வரை பின்பு அஸ்வினி, சித்தயோகம் இரவு 09.11 வரை பின்பு அமிர்தயோகம், நேத்திரம் 1, ஜீவன் 1/2, சஷ்டி விரதம், முருக வழிபாடு நல்லது, சுபமுகூர்த்த நாள் சகல சுப முயற்சிகளுக்கும் ஏற்ற நாள்.
இராகு காலம் - மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.

செவ் சந்தி
சுக்கி  



கேது 
திருக்கணித கிரக நிலை
02.02.2017




சூரிய
ராகு
புதன் சனி 


               
குரு 


இன்றைய ராசிப்பலன் -  02.02.2017
மேஷம்  
இன்று உங்களுக்கு குடும்பத்தில் வீண் செலவுகள் செய்ய நேரிடும். திருமண சுபமுயற்சிகளில் தாமதநிலை உண்டாகும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் உங்களுடன் பணிபுரிபவர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். புதிய முயற்ச்சிகளை தவிர்ப்பது நல்லது.
ரிஷபம்
உங்களுக்கு இன்று மன அமைதி ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
மிதுனம்
இன்று உங்களுக்கு உடல் நிலை மிக சிறப்பாக அமையும். சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். புதிய நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றி தரும். பணி புரிபவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும்.
கடகம்
இன்று தேவையற்ற மனக்குழப்பங்கள் உண்டாகும். உறவினர்களுக்கிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். பணிபுரிபவர்க்கு வேலைபளு சற்று அதிகரிக்கும். எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் சற்றே குறையும்.
சிம்மம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. அறிமுகம் இல்லாத நபர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடனும், நிதானத்துடனும் செல்ல வேண்டும்.
கன்னி
இன்று நீங்கள் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். அரசு வழியில் எதிர்பார்க்கும் கடன் உதவி கிட்டும். புதிய நபரின் அறிமுகம் ஏற்படும். சுப முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். ஆன்மீக காரியங்களில் ஈடுபட்டு மன அமைதி அடைவீர்கள்.
துலாம்
இன்று எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் ஆற்றல் உண்டாகும். பணிபுரிபவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றி தரும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக அமைந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து செல்வது நல்லது. வாகனங்களில் செல்லும் பொழுது சற்று எச்சரிக்கையுடன் செல்வது உத்தமம். உடன் பிறந்தவர்கள் இன்று உறுதுனையாக இருப்பார்கள்.
தனுசு
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் கூடும். குடும்பத்தில் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சனைகளை தவிர்க்கலாம். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதியை தரும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.
மகரம்
உங்களுக்கு இன்று சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள், ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள், பூர்வீக சொத்துக்களை வழியில் லாபம் கிட்டும், அரசு வழியில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த உதவி இன்று கிடைக்கப்பெறும். பழைய கடன்கள் வசூலாகும்.
கும்பம்
இன்று நீங்கள் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் வீண் பிரச்சனைகள் உருவாகும். தேவையில்லாத செலவுகளால் கடன்கள் வாங்க வேண்டிய நிலை வரும். புத்திரர்கள் அனுகூலமாக இருப்பார்கள். பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு புது தெம்பை கொடுக்கும்.
மீனம்

நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். எதிரிகளின் பலம் குறைந்து உங்கள் பலம் கூடும். பெரிய மனிதர்களின் ஆதரவால் நன்மை கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அவர்கள் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும்.