Showing posts with label இன்று - 19.02.2017. Show all posts
Showing posts with label இன்று - 19.02.2017. Show all posts

Sunday, February 19, 2017

இன்று - 19.02.2017


கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com


இன்றைய  பஞ்சாங்கம்
19.02.2017, மாசி 7, ஞாயிற்றுக்கிழமை, அஷ்டமி திதி பகல் 02.18 வரை பின்பு தேய்பிறை நவமி, அனுஷம் நட்சத்திரம் இரவு 10.06 வரை பின்பு கேட்டை, நாள் முழுவதும் மரணயோகம், நேத்திரம் 1, ஜீவன் 1/2, சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் - மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் -  பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00,  மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00,

செவ்
சுக்கி



சூரிய
கேது 
திருக்கணித
கிரக நிலை
19.02.2017


புதன்
ராகு
சனி

  சந்தி

               
குரு  (வ)


இன்றைய ராசிப்பலன் -  19.02.2017

மேஷம்
இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையில்லாத மன கஷ்டமும், குழப்பமும் உண்டாகும். எந்த செயலிலும் பொறுமையாக இருப்பது நல்லது. அலுவலகத்தில் பணிபுரிவோர் தங்கள் மேலதிகாரிகளுடன் பேசும் பொழுது நிதானத்தை கடை பிடிக்க வேண்டும்.

ரிஷபம்
இன்று எந்த செயலையும் மன துணிவோடு செய்து முடிப்பீர்கள். வேலையில் மற்றவர்களிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம். பிள்ளைகளால் மனம் மகிழும் செய்திகள் வந்து சேரும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகளின் அறிமுகம் ஏற்படும். சேமிப்பு உயரும்.
மிதுனம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உறவினர்கள் உங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். தொழில் முன்னேற்றத்திற்காக போட்ட திட்டங்கள் நிறைவேறும். புதிய பொருட்கள் வாங்க அனுகூலமான நாளாகும். உடல்நிலை சீராக இருக்கும். வேலையில் பணிச்சுமை குறையும்.
கடகம்
இன்று எந்த செயலையும் பொறுமையோடு செய்ய வேண்டும். உடன் பிறந்தவர்களால் வீண் பிரச்சனைகள் வரலாம். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் பிரச்சனைகள் குறையும். அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
சிம்மம்
இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகும். பிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வம் குறையும். நண்பர்களின் சந்திப்பு மனநிம்மதியை தரும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சுமாராக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கடன்கள் குறையும்.
கன்னி
இன்று எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் சந்தோஷம் உருவாகும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். உடன் பிறந்தவர்களிடம் சுமூக உறவு ஏற்படும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
துலாம்
இன்று கடின உழைப்பால் மட்டுமே எதிலும் வெற்றி காண முடியும். குடும்பத்தில் சாதகமற்ற நிலை உருவாகும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சனைகளை தவிர்ககலாம். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றம் காணலாம். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.
விருச்சிகம்
இன்று பணவரவு அமோகமாக இருக்கும். நண்பர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பூர்வீக சொத்துக்களால் நல்ல லாபம் கிடைக்கும். தொழில் விஷயமாக வெளிமாநிலத்தவர் நட்பு ஏற்படும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். கடன் பிரச்சனைகள் குறையும்.
தனுசு
இன்று பிள்ளைகளால் மன அமைதி குலையும். வெளியூர் பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படும். வீண் செலவுகளால் சேமிப்பு குறையும். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் ஒற்றுமை நிலவும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்தால் நல்ல லாபம் கிட்டும்.
மகரம்
இன்று நீங்கள் எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பால் நல்லது நடைபெறும். பிள்ளைகள் படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். வெளியூர் பயணங்களால் தொழிலில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபகாரியங்கள் கைக்கூடும்.
கும்பம்
இன்று மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். ஆடம்பர பொருள் வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும். வியாபாரத்தில் வருமானம் பெருகும்.
மீனம்

இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் நிம்மதி குறையும்வாகன பராமரிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரிடும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பண உதவிகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமான முயற்சிகளுக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.