Showing posts with label இன்று - 01.01.2017. Show all posts
Showing posts with label இன்று - 01.01.2017. Show all posts

Sunday, January 1, 2017

இன்று - 01.01.2017


இன்று -  01.01.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com

இன்றைய  பஞ்சாங்கம்
01.01.2017, மார்கழி 17, ஞாயிறுக்கிழமை, திரிதியை திதி பகல் 03.33 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி, திருவோணம் நட்சத்திரம் மாலை 04.01 வரை பின்பு அவிட்டம், அமிர்தயோகம் மாலை 04.01 வரை பின்பு மரணயோகம், நேத்திரம் - 0, ஜீவன் - 1/2,  சுப நாள் சகல சுபமுயற்சிகளுக்கும் ஏற்ற நாள். இராகு காலம் - மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் -  பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00,  மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00,





கேது  செவ்
சுக்கி
               
திருக்கணித கிரக நிலை




சந்தி  
ராகு
புதன் (வ)
சூரிய
சனி 

               
குரு 


இன்றைய ராசிப்பலன்  -  01.01.2017

மேஷம் இன்று நீங்கள் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பணவரவுகள்  சிறப்பாக அமையும். பணி புரிபவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். உடன் பணி புரிபவர்களும் அனுகூலமாக அமைவார்கள். புதிய நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றி தரும். சேமிக்க முடியும்.
ரிஷபம் உங்களுக்கு இன்று மன அமைதி ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். பணியில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும், புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றி தரும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும்
மிதுனம் இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டம தினம் என்பதால் தேவையற்ற பிரச்சனைகளில் தலையீடு செய்யாமல் இருப்பது நல்லது. எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. பிறரிடம் வாக்குவாதம் செய்வதை தவிர்க்கவும். தேவையற்ற மனக்குழப்பங்கள் உண்டாகும்.
கடகம் உடல் நிலை மிக சிறப்பாக அமையும். சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். போட்டி பொறாமைகள் சற்றே குறையும்.
சிம்மம் உங்கள் குடும்பத்தில் இன்று மகிழ்ச்சி நிலவும். புத்திரர்கள் அனுகூலமாக இருப்பார்கள், பூர்வீக சொத்துக்களை விற்பதில் லாபம் கிட்டும், அரசு வழியில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த உதவி இன்று கிடைக்கப்பெறும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபட்டு மன அமைதி அடைவீர்கள்.
கன்னி எதிலும் மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். மிக கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் ஆற்றல் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்க்கும் கடன் உதவி கிட்டும். புதிய நபரின் அறிமுகம் ஏற்படும். சுப முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும்.
துலாம் இன்று உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்த நிலையும் உண்டாகும். உற்றார் உறவினர்களுக்கிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். வாகனங்களில் செல்லும் பொழுது சற்று எச்சரிக்கையுடன் செல்வது உத்தமம். புதிய முயற்ச்சிகளை தவிர்ப்பது நல்லது.
விருச்சிகம் உங்களுக்கு இன்று சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று நீங்கள் மனமகிழ்ச்சி அடைவீர்கள், ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள், தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். பணி புரிவோர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். பொன்பொருள் சேரும்.
தனுசு நீங்கள் குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் உங்களுடன் பணிபுரிபவர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். தனவரவு தாரளமாக அமைந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் இருக்கும்.
மகரம் உங்கள் பொருளாதாரம் இன்று சிறப்பாக அமையும். சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். தொழில் புரிவோர்க்கு வியாபாரம் சிறப்பாக நடைபெறும். வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன்கள் ஏற்படும். உங்கள் மனதிற்கு தெம்பும், சுறுசுறுப்பும் கிடைக்கும். சுபசெலவுகள் உண்டாகும்.
கும்பம் இன்று நீங்கள் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் சில பிரச்சனைகள் உருவாகும் சூழ்நிலை ஏற்படும். திருமண சுபமுயற்ச்சிகளில் தாமதநிலை உண்டாகும். தேவையில்லாத செலவுகளால் கடன்கள் வாங்க வேண்டிய நிலை வரும். பணிபுரிபவர்க்கு வேலைபளு சற்று அதிகரிக்கும்.
மீனம் நீங்கள் எடுக்கும் முயற்ச்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். எதிரிகளின் பலம் குறைந்து உங்கள் பலம் கூடும். பெரிய மனிதர்களின் ஆதரவால் நன்மை கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் இன்று உறுதுனையாக இருப்பார்கள். சிலருக்கு அவர்கள் தகுதிக்கேற்ற பதவி உயர்வு உண்டாகும்.