Showing posts with label இன்று - 01.04.2017. Show all posts
Showing posts with label இன்று - 01.04.2017. Show all posts

Saturday, April 1, 2017

இன்று - 01.04.2017

இன்று -  01.04.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com



 வாங்கி படிக்க தவறாதீர்கள்
இந்த வார ஜோதிடம் இதழில்

மின் சாதனங்களை எங்கு அமைக்கலாம்?-  -முனைவர் முருகு பாலமுருகன்

அரசுப் பணியில் சேர ஜாதக அமைப்புகள்!-  -சரவணன் Gendral Sec ICAS


வார ராசிபலன் (02-04-2017 முதல் 08-04-2017 வரை) பங்குனி 20 முதல் 26 வரை 
முனைவர் முருகு பாலமுருகன்

இந்த வார பஞ்சாங்கம்!--                  முனைவர் முருகு பாலமுருகன்

உன்னதப் பலன்களை உடனடியாகத் தரும் 30 வகை பரிகாரங்கள்!-
ஜோதிட ஞானி சிரோன்மணி கடகம் இராமசாமி

குறியீடுகளின் தத்துவம்! –                  சித்தயோகி சிவதாசன் ரவி

உத்திராடத்தினரின் உயர்வு பெறும் வழிகள்! நட்சத்திரப் பரிகாரங்கள்!
ஜோதிஷண்முகம்

ராகு காலத்திலும் நல்ல நேரம்!
-மன்னை ஸ்ரீமதி விஅகிலாண்டேஸ்வரி ஐயர் M.Phil Astro

மருத்துவ ஜோதிடத்தின் மகத்துவங்கள்!-- -  -டாக்டர் இராரகு M,Sc Astro

ஆபரண்ங்களை அள்ளிச் சேர்க்கும் ஆறுமுகன்! (வாரம் ஒரு பரிகாரம்)-                                                -விசு அய்யர்

ஒளிமயமான எதிர்காலம் மூவரிடத்தில்!
சிவஸ்ரீ குருஜி ஜி.கே. முத்து குருக்கள்

பாலாரிட்டங்கள்! குமார சுவாமியம் கூறும் பன்னிரு பாவப் பலன்கள்!
                                    -பிராஜசேகரன் M.Phil Astro

உங்கள் எதிர்கால ஜோதிட வழிகாட்டி! -     
-முனைவர் முருகு பாலமுருகன்
இன்றைய  பஞ்சாங்கம்
01.04.2017, பங்குனி -19,சனிக்கிழமை,     பஞ்சமி திதி மாலை 05.50 வரை பின்பு வளர்பிறை சஷ்டி, ரோகிணி நட்சத்திரம் பின்இரவு 02.53 வரை பின்பு மிருகசீரிஷம், அமிர்தயோகம் பின்இரவு 02.53 வரை பின்பு சித்தயோகம், நேத்திரம் 1, ஜீவன் 1/2, கரிநாள், புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் - காலை 09.00-10.30,  எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள்- காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு09.00-10.00.

சூரிய சுக்கி(வ)
செவ் புதன்
சந்தி

கேது 
திருக்கணித கிரக நிலை
01.04.2017



ராகு
சனி
 

               
குரு  (வ)

இன்றைய ராசிப்பலன் -  01.04.2017
மேஷம்
இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். வேலை விஷயமாக வீண் அலைச்சல்கள் உண்டாகும். பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் கிட்டும். பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும்.
ரிஷபம்
இன்று உங்களுக்கு திடீர் பணவரவுகள் உண்டாகும். உடன்பிறப்புக்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கப்பெறும். ஆடம்பர பொருள் வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளால் பெருமை சேரும். வேலையில் பணிபுரிபவர்களுக்கு தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் பெருகும்.
மிதுனம்
இன்று வேலையில் உங்கள் திறமைகளுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். உற்றார் உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பழைய பாக்கிகள் வசூலாகும். சேமிப்பு உயரும்.
கடகம்
இன்று குடும்பத்தில் அமைதி நிலவும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சொத்துக்களை வாங்கவும் விற்கவும் அனுகூலமான நாளாகும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகமாகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
சிம்மம்
இன்று நீங்கள் எந்த காரியத்தையும் சிறப்புடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் நல்ல பலனைத் தரும். உத்தியோகத்தில் புதிய நபரின் அறிமுகம் ஏற்படும்.
கன்னி
உங்களுக்கு இன்று பணவரவு சுமாராகத்தான் இருக்கும். உறவினர்கள் முலம் எதிர்பார்த்த காரியங்கள் ஏமாற்றத்தை அளிக்கும். உடலில் சிறுசிறு உபாதைகள் ஏற்படும், ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிக்கனமாக செயல்பட்டால் பண பிரச்சனையை தவிர்க்கலாம். நண்பர்களால் அனுகூலம் கிட்டும்.
துலாம்
நீங்கள் சோர்வுடனும் மன உளைச்சலுடனும் காணப்படுவீர்கள். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலிலும் தடை தாமதம் ஏற்படும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது உத்தமம். தொழில் ரீதியான புதிய முயற்சிகளை தவிர்க்கவும். மன அமைதி குறைவும்
விருச்சிகம்
இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வேலை சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். பிள்ளைகளின் உடல்நிலை சீராக இருக்கும். கடன் பிரச்சனை தீரும்.
தனுசு
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் அனுகூலமாக அமைவார்கள். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் மூலம் அனுகூலம் கிட்டும். பொருளாதார தேவைகள் பூர்த்தியாகும்.
மகரம்
இன்று குடும்பத்தில் சுப செலவுகள் உண்டாகும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கும். வெளியூர் பயணங்களால் அனுகூலப்பலன் கிட்டும். பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் சம்பந்தபட்ட வழக்குகளில் வெற்றி உண்டாகும். பெரியவர்களின் மதிப்பை பெறுவீர்கள்.
கும்பம்
இன்று தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அலைச்சல் உண்டாகும். சுப முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படும். தேவையற்ற செலவுகளால் கடன் வாங்க நேரிடும். உத்தியோகஸ்தர்கள் பணிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தினர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.
மீனம்

இன்று உங்களுக்கு பணப்புழக்கம் தாராளமா£ இருக்கும். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழிலில் சிறுசிறு மாறுதல்களை செய்தால் நல்ல லாபத்தை அடைய முடியும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.