Showing posts with label இன்று - 02.03.2017. Show all posts
Showing posts with label இன்று - 02.03.2017. Show all posts

Thursday, March 2, 2017

இன்று - 02.03.2017


கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com

இன்றைய  பஞ்சாங்கம்
02.03.2017, மாசி 18, வியாழக்கிழமை, சதுர்த்தி திதி பகல் 01.03 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி, அஸ்வினி நட்சத்திரம் பின்இரவு 01.41 வரை பின்பு பரணி, அமிர்தயோகம் பின்இரவு 01.41 வரை பின்பு சித்தயோகம், நேத்திரம்  1, ஜீவன்   1/2, மாத சதுர்த்தி விநாயக வழிபாடு நல்லது, சுபமுகூர்த்த நாள் சகல சுப முயற்சிகளுக்கும் ஏற்ற நாள்.
இராகு காலம் - மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.

சுக்கி  
செவ் சந்தி


சூரிய கேது 
புதன் 
திருக்கணித கிரக நிலை
02.03.2017




ராகு
சனி
 

               
குரு  (வ)


இன்றைய ராசிப்பலன் -  02.03.2017

மேஷம்
இன்று இல்லத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மகிழ்ச்சி கூடும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் லாபம் கிட்டும். உத்தியோக ரீதியான முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகமாகும்.
ரிஷபம்
இன்று தொழில் ரீதியாக எடுக்கும் முயற்ச்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். எதிரிகளின் பலம் குறைந்து உங்கள் பலம் கூடும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே இருந்த மனசங்கடங்கள் மறையும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
மிதுனம்
இன்று எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் பணிபுரிபவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
கடகம்
இன்று எந்த வேலையிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் வீண் பிரச்சனைகள் உருவாகும். தேவையில்லாத செலவுகளால் கடன்கள் வாங்க நேரிடும். எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் சற்றே குறையும்.
சிம்மம்
இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படும். திருமண சுபமுயற்சிகளில் தாமதநிலை உண்டாகும். வாகன பராமரிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரிடும். உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் தொழிலில் லாபம் கிடைக்கும். உறவினர்கள் உறுதுனையாக இருப்பார்கள்.
கன்னி
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகையை முதலீடு செய்யாதிருப்பது நல்லது. வேலையில் மேலதிகாரிகளிடம் தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். வாகனங்களில் செல்லும் பொழுது நிதானத்துடன் செல்ல வேண்டும்.
துலாம்
இன்று உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக அமையும். சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். புதிய பொருள் சேரும்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு மன அமைதி ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். புதிய நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றி தரும். பணி புரிபவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். சேமிப்பு உயரும்.
தனுசு
இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக அமைந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் இருக்கும். தொழில் சம்பந்தமான பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். குடும்பத்தினரிடம் விட்டு கொடுத்து செல்வது நல்லது. வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். தெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதியை தரும்.
மகரம்
இன்று தேவையற்ற மனக்குழப்பங்கள் உண்டாகும். உறவினர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றும். பணிபுரிபவர்களுக்கு வேலைபளு சற்று அதிகரிக்கும். சேமிப்பு குறையும். புத்திரர்கள் அனுகூலமாக இருப்பார்கள். பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு புது தெம்பை கொடுக்கும்.
கும்பம்
இன்று நீங்கள் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக அமையும். அரசு வழியில் எதிர்பார்க்கும் கடன் உதவி எளிதில் கிட்டும். புதிய நபரின் அறிமுகம் ஏற்படும். குடும்பத்தில் பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். வராத பழைய கடன்கள் வசூலாகும்.
மீனம்

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் கூடும். குடும்பத்தில் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சனைகளை தவிர்க்கலாம். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது.