Showing posts with label இன்று - 02.04.2017. Show all posts
Showing posts with label இன்று - 02.04.2017. Show all posts

Sunday, April 2, 2017

இன்று - 02.04.2017

இன்று -  02.04.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com

இன்றைய  பஞ்சாங்கம்
02.04.2017, பங்குனி - 20, ஞாயிற்றுக்கிழமை, சஷ்டி திதி பகல் 03.16 வரை பின்பு வளர்பிறை சப்தமி, மிருகசீரிஷம் நட்சத்திரம் பின்இரவு 01.14 வரை பின்பு திருவாதிரை, நாள் முழுவதும் சித்தயோகம், நேத்திரம் 1, ஜீவன் 1/2, சஷ்டி விரதம், முருக வழிபாடு உத்தமம், சுபமுகூர்த்த நாள் சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.   

இராகு காலம் - மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் -  பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00,  மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00,

சூரிய
சுக்கி   (வ)
செவ்
புதன்
சந்தி

கேது 
திருக்கணித கிரக நிலை
02.04.2017



ராகு
சனி


               
குரு  (வ)

இன்றைய ராசிப்பலன் -  02.04.2017

மேஷம்
இன்று பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி காணப்படும். பிள்ளைகள் படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வராத கடன்கள் வசூலாகும். சுபகாரிய முயற்சிகள் வெற்றியை தரும்.
ரிஷபம்
இன்று வீட்டின் ஒற்றுமை குறையும் சூழ்நிலை உருவாகும். திருமண பேச்சுவார்த்தைகள் கைகூடும் நேரத்தில் இடையூறுகள் ஏற்படும். பிள்ளைகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள். குடும்பத்தோடு தெய்வ தரிசனத்திற்காக மேற்கொள்ளும் பயணங்கள் மனதிற்கு நிம்மதியை தரும்.
மிதுனம்
இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். விலை உயர்ந்த பொருள்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடன்பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.
கடகம்
இன்று பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தில் பணப்பிரச்சனைகள் ஏற்படக்கூடும். உடல்நிலையில் சிறு பாதிப்புகள் உண்டாகும். வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். பூர்வீக சொத்துக்களில் அலைச்சலுக்கேற்ற அனுகூலப்பலன் இருக்கும்.
சிம்மம்
இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷமான விஷயங்கள் நடைபெறும். பிள்ளைகள் அனுகூலமாக அமைவார்கள். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். நண்பர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். பொன் பொருள் சேரும்.
கன்னி
இன்று குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி கூடும். பெரிய மனிதர்களுடன் நட்பு உண்டாகும். பெற்றோருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் சற்று குறையும். புதிய பொருள் சேரும்.
துலாம்
இன்று உங்கள் உடல்நிலையில் சோர்வும், சுறுசுறுப்பின்மையும் உண்டாகும். உங்கள் ராசிக்கு பகல் 02.02 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் முடிந்த வரை அமைதியாக இருப்பது நல்லது. சுபகாரிய நிகழ்ச்சிகள் மற்றும் வெளியூர் பயணங்களை தவிர்ப்பது உத்தமம். எதிலும் கவனம் தேவை.
விருச்சிகம்
இன்று குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படும். எதிலும் நிம்மதியில்லாத நிலை தோன்றும். வெளியிலிருந்து வர வேண்டிய தொகை கைக்கு கிடைப்பதில் காலதாமதமா-கும். உங்கள் ராசிக்கு பகல் 02.02 பிறகு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது.
தனுசு
இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கி ஒற்றுமை நிலவும். பெண்கள் வீட்டு தேவையை பூர்த்தி செய்வார்கள். நண்பர்களோடு தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பணவரவு தாராளமாக இருக்கும். புதிய பொருட்கள் விற்க அனுகூலமான நாளாகும். சேமிப்பு உயரும்.
மகரம்
இன்று உறவினர் வருகையால் மகிழ்ச்சி கூடினாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்காக சிறு தொகையை செலவிட நேரிடும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன் பிரச்சனைகள் ஓரளவு குறையும். குடும்பத்தில் பெண்கள் தம் பொறுப்பறிந்து செயல்படுவார்கள்.
கும்பம்
இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படும். பெரியோர்களின் மன கஷ்டத்திற்கு ஆளாவீர்கள். பணப்பிரச்சனையிலிருந்து விடுபட கடன் வாங்க நேரிடும். கூட்டாளிகளின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
மீனம்

இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உங்களின் புதிய முயற்சிகளுக்கு உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பண உதவிகள் வந்து சேறும். தர்ம காரியங்கள் செய்து மனமகிழ்ச்சி அடைவீர்கள். திருமண பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.