Showing posts with label இன்று - 03.01.2017. Show all posts
Showing posts with label இன்று - 03.01.2017. Show all posts

Tuesday, January 3, 2017

இன்று - 03.01.2017


இன்று -  03.01.2017

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com

இன்றைய  பஞ்சாங்கம்
03.01.2017, மார்கழி 19, செவ்வாய்கிழமை, பஞ்சமி திதி மதியம் 03.42 வரை பின்பு வளர்பிறை சஷ்டி, சதயம் நட்சத்திரம் மாலை 05.17 வரை பின்பு பூரட்டாதி, நாள் முழுவதும் மரணயோகம்,   நேத்திரம் 1, ஜீவன் 1/2, இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00. முருக வழிபாடு நல்லது, சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.





கேது  செவ்
சுக்கி சந்தி  
               
திருக்கணித கிரக நிலை
03.01.2017





ராகு
புதன் (வ)
சூரிய
சனி 

               
குரு 


இன்றைய ராசிப்பலன் -  03.01.2017
மேஷம் இன்று குடும்பத்தில் உள்ளவர்கள் ஒற்றுமையாக இருப்பார்கள். வெளிநாட்டிலுள்ள உறவினர்கள் வழியாக மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். நண்பர்களின் மூலமாக நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு இன்று அனுகூலமான பலன் நடக்கும்.
ரிஷபம் உங்களுக்கு இன்று குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். சிலருக்கு புத்திர வழியில் அனுகூலம் உண்டாகும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் அமையும். தொழில் புரிபவர்க்கு தொழிலில் இருந்த போட்டிகள் விலகும். ஒரு சிலருக்கு வெளிநாடுகளில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும்.
மிதுனம் இன்று உங்களுக்கு பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். சிலருக்கு தெய்வ தரிசனத்திற்காக தூர பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். தொழில் புரிவோர் தனது கிளைகளை வெளியூர்களில் விரிவுபடுத்தும் நோக்கம் வெற்றியை தரும்பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.
கடகம் நீங்கள் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பணிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது, வாகனங்களில் செல்லும் பொழுது சற்று எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. மற்றவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது உத்தமம்.
சிம்மம் நீங்கள் எதிர்பார்த்த உதவி இன்று உங்களுக்கு தாமதமின்றி கிடைக்கும், திருமண சுப முயற்சிகளில் நீங்கள் எதிர்பார்க்கும் அனுகூலப் பலன்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு  வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.
கன்னி இன்று உங்கள் உடல் ஆரோக்கியம் சீராக அமையும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு தெம்பை கொடுக்கும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல பலன் கிடைக்கும். பணவரவு தாரளமாக இருக்கும்.
துலாம் இன்று உங்களுக்கு அதிகாலையிலே ஆனந்தமான செய்தி வந்து சேரும். உறவினர்களால் உதவி கிடைக்கும். பொன்பொருள் சேர்க்கை மனதிற்கு மகிழ்சி தரும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். தொழில் புரிவோர்க்கு வெளிநாட்டு தொடர்பு கிடைக்கும்.
விருச்சிகம் உங்களுக்கு நீங்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்வீர்கள். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்பட்டாலும் சுப செய்தி கிடைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் உடனிருப்பவர்கள் ஒத்துழைப்பு தருவார்கள்.
தனுசு இன்று உங்களுக்கு கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். ஒரு சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். இதுவரை இருந்த பிரச்சனைகள் சுமூகமாக முடியும். வியாபாரத்தில் கூட்டாளிகளிடம் ஒற்றுமையாக செயல்பட்டால் லாபம் அடையலாம். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.
மகரம் இன்று உங்களுக்கு வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும். தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். உற்றார் உறவினர்களுக்கிடையே ஏற்படும் தேவையற்ற கருத்து வேறுபாடுகளால் பிரிய நேரிடும். வேலை செய்யும் இடங்களில் வீண் பிரச்சனைகள் ஏற்படும்.
கும்பம் இன்று உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வழக்கு சம்பந்தங்களில் வெற்றி உண்டாகும். பிறமொழியை சேர்ந்தவர்களால் எதிர்பாராத உதவி கிடைக்கும்.

மீனம் இன்று உங்கள் உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மை ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் உண்டாகாது. குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகளை தவிர்த்தால் ஒற்றுமையாக இருக்கலாம். மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.