Showing posts with label இன்று - 03.04.2017. Show all posts
Showing posts with label இன்று - 03.04.2017. Show all posts

Monday, April 3, 2017

இன்று - 03.04.2017

இன்று -  03.04.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com


வாங்கி படிக்க தவறாதீர்கள்
இந்த வார ஜோதிடம் இதழில்

ராஜா, எஸ்.பி.பி மோதல் ஏன்?-             அம்சி விவேகானந்தன்

கும்பிட வேண்டிய குலதெய்வம் எது? (வாரம் ஒரு பரிகாரம்)-     விசு அய்யர்

உங்கள் எதிர்கால ஜோதிட வழிகாட்டி! -     -முனைவர் முருகு பாலமுருகன்

மருத்துவ ஜோதிடத்தின் மகத்துவங்கள்!---டாக்டர் இரா. ரகு M,Sc Astro

கல்விக்கு ஜோதிடம் அவசியம்!-       சிவஸ்ரீ குருஜி ஜி.கே. முத்து குருக்கள்

அரிட்டமும் ஆயுளும்! குமார சுவாமியம் கூறும் பன்னிரு பாவப் பலன்கள்!
                                    -பி. ராஜசேகரன் M.Phil Astro

வேண்டுதல்களை நிறைவேற்றும் முத்திரைகள்! – சித்தயோகி சிவதாசன் ரவி

எமகண்டம், குளிகை காலம்!
-மன்னை ஸ்ரீமதி வி. அகிலாண்டேஸ்வரி ஐயர் M.Phil Astro

அரசுப் பணியில் சேர ஜாதக அமைப்புகள்!-  -. சரவணன் Gendral Sec ICAS

சித்திரை 1-ல் மலரும் “ஹேவிளம்பி” புத்தாண்டுப் பலன்கள்!-     -
முனைவர் முருகு பாலமுருகன்

திருவோணத்தினரின் திறன் பெருக்கும் பரிகாரங்கள்! நட்சத்திரப் பரிகாரங்கள்!
ஜோதிஷண்முகம்

இந்த வார பஞ்சாங்கம்!--                      முனைவர் முருகு பாலமுருகன்

வெளிநாடு செல்லும் யோகமுடையவர் யார்?- ஜோதிடச்சுடர் ந. ஞானரதம்

வார ராசிபலன் (09-04-2017 முதல் 15-04-2017 வரை) பங்குனி 27 முதல் சித்திரை 2 வரை

முனைவர் முருகு பாலமுருகன்

இன்றைய  பஞ்சாங்கம்
03.04.2017, பங்குனி - 21, திங்கட்கிழமை, சப்தமி திதி பகல் 01.05 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி, திருவாதிரை நட்சத்திரம் இரவு 11.59 வரை பின்பு புனர்பூசம், சித்தயோகம் இரவு 11.59 வரை பின்பு அமிர்தயோகம், நேத்திரம் 1, ஜீவன் ½.

இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.

சூரிய
சுக்கி   (வ)
செவ்
புதன்

சந்தி
கேது 
திருக்கணித கிரக நிலை
03.04.2017



ராகு
சனி
 

               
குரு  (வ)

இன்றைய ராசிப்பலன் -  03.04.2017

மேஷம்
இன்று உங்களுக்கு திடீர் பணவரவுகள் உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கப்பெறும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். சிலருக்கு வேலை சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.
ரிஷபம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் சிறுசிறு மாறுதல்களை செய்து லாபத்தை அடைவீர்கள். பணவரவு தாராளமாக இருப்பதால் கடன்பிரச்சனை குறையும். உடன்பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
மிதுனம்
உங்கள் குடும்பத்தில் தாராள தன வரவும், லஷ்மிகடாட்சமும் உண்டாகும். கடன் பிரச்சனைகள் தீரும்திருமண சுபமுயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். சொத்துக்களை வாங்கவும் விற்கவும் அனுகூலமான நாளாகும். வியாபாரத்தில் எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறி செயல்படுவார்கள்.
கடகம்
இன்று குடும்பத்தில் அமைதி குறையும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் உண்டாகும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப்பெறும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் விட்டு கொடுத்து செல்வது நல்லது.
சிம்மம்
இன்று உங்களின் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வீட்டுத் தேவைகள் எளிதில் பூர்த்தியாகும், வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு ஊதிய உயர்வு உண்டாகும்.
கன்னி
இன்று குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். உத்தியோகஸ்தர்கள் வேலையில் தங்கள் திறமைகளை வெளிபடுத்தி மேலதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். நீண்ட நாள் எதிர்பார்த்த உதவி இன்று கிடைக்கப்பெறும். சொத்து சம்பந்தபட்ட வழக்குகளில் வெற்றி கிட்டும்.
துலாம்
இன்று உங்கள் உடல்நிலையில் சற்று சோர்வு ஏற்படும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் குறைந்து காணப்படுவார்கள். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். தெய்வ வழிபாடு நன்மையை தரும்.
விருச்சிகம்
நீங்கள் இன்று சற்று குழப்பமாகவே காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு இன்று சந்திராஷ்டமம் நடைபெறுவதால் எந்த செயலையும் நிதானத்துடன் செய்வது நல்லது. மற்றவர்களிடம் பேசும் பொழுது கவனமாக பேச வேண்டும். வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் செல்வது நல்லது.
தனுசு
இன்று நீங்கள் எந்த விஷயத்திலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உடன்பிறந்தவர்கள் வழியாக சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். உத்தியோக ரீதியான மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் எடுப்பீர்கள். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.
மகரம்
உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் நல்ல பலனைத் தரும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன் கிட்டும்.
கும்பம்
இன்று குடும்பத்தில் தனவரவு தாராளமாக இருக்கும். பழைய கடன்கள் தீரும். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
மீனம்

இன்று எந்த காரியத்தை செய்தாலும் தடைகள் ஏற்படக் கூடும். உத்தியோகத்தில் சக நண்பர்களுடன் வீண் மனஸ்தாபங்கள் உண்டாகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் உடல் சோர்வு ஏற்படும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். பெரிய மனிதர்களின் சந்திப்பு புது தெம்பை தரும்.