Showing posts with label இன்று - 03.05.2017. Show all posts
Showing posts with label இன்று - 03.05.2017. Show all posts

Wednesday, May 3, 2017

இன்று - 03.05.2017

இன்று -  03.05.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com
வாங்கி படிக்க தவறாதீர்கள்
இந்த வார ஜோதிடம் இதழில்

வர்ணிக்க முடியாத நற்பலன் தரும் தசை!-                                                                  முனைவர் முருகு பாலமுருகன்

நோய் தீர்க்கும் ஸ்ரீரங்கநாதர்! –   சித்தயோகி சிவதாசன் ரவி

உத்திரட்டாதியினர் உச்சம் தொட என்ன வழி! நட்சத்திரப் பரிகாரங்கள்!                                                       ஜோதிஷண்முகம்

உங்கள் எதிர்கால ஜோதிட வழிகாட்டி! -     -முனைவர் முருகு பாலமுருகன்

தேய்பிறையில் முகூர்த்தம் வைக்கலாமா?  அம்சி விவேகானந்தன்

இந்த வார பஞ்சாங்கம்!--                      முனைவர் முருகு பாலமுருகன்

அறிவியல் ஆன்மிகத்தை இணைக்கும் ஜோதிடம்!-- - -டாக்டர் இரா. ரகு M,Sc Astro

வேலைக்கு உலை வைக்குமா கோட்சார குரு?-  -. சரவணன் Gendral Sec ICAS

பெரும் பிரச்சனை தரும் பிரம்மஹத்தி தோஷம்! – தீர்க்கும் பரிகாரம்? (வாரம் ஒரு பரிகாரம்)-                                 விசு அய்யர்

வருமுன் காக்கும் வழி! –             ஜோதிடச்சுடர் ந. ஞானரதம் M.Phil Astro

ஆயிரம் பொன் பெறும் அதிர்ஷ்ட ஜாதகம்! -     பி. ராஜசேகரன் M.Phil Astro

27 நட்சத்திரங்களின் தன்மைகள்!
&மன்னை ஸ்ரீமதி வி. அகிலாண்டேஸ்வரி ஐயர் M.Phil Astro

சகுனத்தால் வென்ற சத்ரபதி!-         சிவஸ்ரீ குருஜி ஜி.கே. முத்து குருக்கள்

வார ராசிபலன் (07-05-2017 முதல் 13-05-2017 வரை) சித்திரை 24 முதல் 30 வரை

முனைவர் முருகு பாலமுருகன்


இன்றைய  பஞ்சாங்கம்
03-05-2017, சித்திரை-20, புதன்கிழமை, அஷ்டமி திதி இரவு 07.52 வரை பின்பு வளர்பிறை நவமி. ஆயில்யம் நட்சத்திரம் பின்இரவு 04.28 வரை பின்பு மகம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. நவகிரக வழிபாடு உத்தமம். தனிய நாள். சுப முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00

சுக்கி

சூரிய
புதன்(வ)
செவ்

கேது 
திருக்கணித கிரக நிலை
03.05.2017

சந்தி

ராகு
சனி(வ)
 

               
குரு  (வ)

இன்றைய ராசிப்பலன் - 03.05.2017

மேஷம்
இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும். வேலையில் தேவையில்லாத அலைச்சலால் மன நிம்மதி கெடும். பணவரவு சுமாராக இருந்தாலும் வீட்டு தேவைகள் நிறைவேறும். சிக்கனமாக செயல்பட்டால் கடன்கள் ஓரளவு குறையும். நண்பர்களின் மூலம் உதவிகள் கிடைக்கும்.
ரிஷபம்
இன்று பிள்ளைகளால் வீட்டில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் மறையும். கடன் பிரச்சனைகள் தீரும்.
மிதுனம்
இன்று நீங்கள் கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடித்து விடுவீர்கள். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் உண்டாகும். சிலருக்கு புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும்.
கடகம்
இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். சகோதர, சகோதரிகள் மூலம் அனுகூலம் கிட்டும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் இதுவரை எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறி செயல்படுவார்கள். புதிய பொருள்கள் வாங்கி மகிழ்வார்கள்.
சிம்மம்
இன்று குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும். உறவினர்களுக்கிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். வியாபாரத்தில் உங்களின் அலட்சியத்தால் எதிர்பாராத வீண் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எந்த விஷயத்திலும் நிதானமாக நடந்து கொள்வது நல்லது.
கன்னி
இன்று நீங்கள் மனமகிழ்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் காணப்படுவீர்கள். சிலருக்கு கொடுக்கல் வாங்கலில் லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். புதியபொருள் வீடு வந்து சேரும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சுபகாரியங்கள் கைகூடும்.
துலாம்
இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். தொழில் சம்பந்தபட்ட நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். திருமண பேச்சுவார்த்தைகள் கைகூடும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும்.
விருச்சிகம்
இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் அடைவீர்கள்.
தனுசு
இன்று தொழில் வியாபாரத்தில் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வண்டி வாகனங்களில் சற்று எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. பணம் சம்பந்தப்பட்ட கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது.
மகரம்
இன்று நீங்கள் நினைத்த காரியத்தை செய்து முடித்து வெற்றி பெறுவீர்கள். சுப முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கி ஒற்றுமை கூடும். வெளியூர் பயணங்களில் புதிய நட்பு உண்டாகும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். சேமிப்பு உயரும்.
கும்பம்
இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். உறவினர்கள் உங்கள் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுவர்கள். தொழில் ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியாக லாபம் கிட்டும்.
மீனம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியற்ற சூழ்நிலை உருவாகும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் தடைபடும். நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம். உடன் பிறந்தவர்கள் தேவையறிந்து உதவுவார்கள்.