Showing posts with label இன்று - 03.06.2017. Show all posts
Showing posts with label இன்று - 03.06.2017. Show all posts

Saturday, June 3, 2017

இன்று - 03.06.2017

இன்று -  03.06.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com


வாங்கி படிக்க தவறாதீர்கள்
இந்த வார ஜோதிடம் இதழில்

சூரியன் ஏற்படுத்தும் அஸ்தங்கத விளைவு! -     கே.பி. ஐயப்ப சர்மா

உங்கள் எதிர்கால ஜோதிட வழிகாட்டி! -     -முனைவர் முருகுபாலமுருகன்

குலம் காக்கும் தெய்வம் எது? – ஆரூடம் சொல்லும்! - அம்சி விவேகானந்தன்

ரோகிணி தரும் பலன்கள்!-- -          -டாக்டர் இராரகு M,Sc Astro

12 லக்னப் பலன்கள்!-                       முனைவர் முருகுபாலமுருகன்

நவதானியப் பரிகாரத்தின் அறிவியல் விளக்கம்! –      ஜோதி ஷண்முகம்

நோயின்றி வாழச் செய்யும் சந்திர தரிசனம்! – (வாரம் ஒரு பரிகாரம்)-
விசுஅய்யர்

வள்ளல் குணம் யாருக்கு? -          பிராஜசேகரன் M.Phil Astro

சாதனைக்குத் துணை நிற்கும் வாழ்க்கைத் துணை!-
சிவஸ்ரீ குருஜி ஜி.கே. முத்து குருக்கள்

இந்த வார பஞ்சாங்கம்!--                      முனைவர் முருகுபாலமுருகன்

ஜீவ ஆற்றல் தரும் அரச மரம்! –      சித்தயோகி சிவதாசன் ரவி

வார ராசிபலன் (04-06-2017 முதல் 10-06-2017 வரை) வைகாசி 21 முதல் 27 வரை

முனைவர் முருகுபாலமுருகன்




இன்றைய  பஞ்சாங்கம்
03-06-2017, வைகாசி -20, சனிக்கிழமை, நவமி திதி காலை 06.51 வரை பின்பு வளர்பிறை தசமி. உத்திரம் நட்சத்திரம் பகல் 01.26 வரை பின்பு அஸ்தம். நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் - 2, ஜீவன் - 1/2. சனிப்ரிதி நல்லது. சுப முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் - காலை 09.00-10.30,  எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள்- காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு09.00-10.00.


புதன்
சுக்கி
சூரிய
செவ்
கேது 
திருக்கணித கிரக நிலை
03.06.2017



ராகு
சனி(வ)
 

               
சந்தி
குரு (வ)

இன்றைய ராசிப்பலன் -  03.06.2017

மேஷம்
இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் திறமைக்கேற்ப பதவி உயர்வுகள் கிடைக்கும். நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சிலர் ஆடம்பர பொருள்கள் வாங்கி மகிழ்வார்கள். சுபகாரியங்கள் கைகூடும்.
ரிஷபம்
இன்று உடல்நிலையில் சற்று சோர்வு, சுறுசுறுப்பின்மை ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பணிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தினர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.
மிதுனம்
இன்று உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். சுப முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படும். தேவையற்ற செலவுகளால் கடன் வாங்க நேரிடும். தொழிலில் சிறுசிறு மாறுதல்களை செய்தால் நல்ல லாபத்தை அடைய முடியும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
கடகம்
இன்று உங்களுக்கு திடீர் பணவரவுகள் உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கப்பெறும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பொருளாதார தேவைகள் பூர்த்தியாகும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். சேமிப்பு உயரும்.
சிம்மம்
இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வேலையில் பணி நிமித்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். கடன் பிரச்சனை தீரும்.
கன்னி
இன்று நீங்கள் எந்த காரியத்தையும் சிறப்புடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கப்பெறும். உடன்பிறப்புகள் மூலம் உதவிகள் கிடைக்கும். வேலையில் பணிபுரிபவர்களுக்கு தகுதிக்கேற்ற பதவி உயர்வு உண்டாகும்.
துலாம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராகத்தான் இருக்கும். நண்பர்கள் முலம் எதிர்பார்த்த காரியங்கள் ஏமாற்றத்தை அளிக்கும். உடலில் சிறுசிறு உபாதைகள் ஏற்படும், ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிக்கனமாக செயல்பட்டால் பணப்பிரச்சனையை தவிர்க்கலாம். உறவினர்களால் அனுகூலம் கிட்டும்.
விருச்சிகம்
இன்று குடும்பத்தில் அமைதி நிலவும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சொத்துக்களை வாங்கவும் விற்கவும் அனுகூலமான நாளாகும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் நல்ல பலனைத் தரும். அரசு வழியில் எதிர்பார்க்கும் கடன் உதவி கிட்டும். புதிய நபரின் அறிமுகம் ஏற்படும்.
தனுசு
இன்று குடும்பத்தில் சுப செலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கப்பெறும். வெளியூர் பயணங்களில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். பிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகமாகும். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். வியாபாரம் சிறப்பாக நடைபெறும்.
மகரம்
இன்று உங்களுக்கு பணப்புழக்கம் சற்று குறைவாக இருக்கும். வேலையில் எதிர்பாராத பிரச்சனைகள் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் கிட்டும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.
கும்பம்
இன்று நீங்கள் சோர்வுடனும் மன உளைச்சலுடனும் காணப்படுவீர்கள். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலிலும் பொறுமையை கடை பிடிப்பது நல்லது. மற்றவர்கள் பிரச்சனையில் தலையிடாமல் இருப்பது உத்தமம். தொழில் ரீதியான புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
மீனம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். தொழில் சம்பந்தபட்ட வழக்கு விஷயங்களில் வெற்றி உண்டாகும். பணவரவு தாராளமாக இருக்கும். ஆடை ஆபரண பொருட் சேர்க்கை உண்டாகும்.