Showing posts with label இன்று - 03.07.2017. Show all posts
Showing posts with label இன்று - 03.07.2017. Show all posts

Monday, July 3, 2017

இன்று - 03.07.2017


கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com
வாங்கி படிக்க தவறாதீர்கள் 
ஜுலை 2017 ஓம்சரவணபவா இதழுடன்
ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2017 - 2019
(12 ராசிகளுக்கும் பொதுப்பலன்,பரிகாரம்,
 அதிர்ஷ்டக்குறிப்புகள் அடங்கியது)  
96 பக்கம் இலவச இனைப்பு
இப்படிக்கு
ஜோதிட மாமணி, 
முனைவர் முருகு பாலமுருகன்
ஆசிரியர் - இந்த வார ஜோதிடம்




இன்றைய  பஞ்சாங்கம்
03-07-2017, ஆனி- 19, திங்கட்கிழமை, தசமி திதி இரவு 10.15 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி. சுவாதி நட்சத்திரம் பின்இரவு 02.35 வரை பின்பு விசாகம். அமிர்தயோகம் பின்இரவு 02.35 வரை பின்பு மரணயோகம். நேத்திரம்- 2, ஜீவன்- 0. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.




சுக்கி
சூரிய செவ்
கேது 
திருக்கணித கிரக நிலை
03.07.2017

புதன்

ராகு

சனி  (வ)
சந்தி  
குரு 

இன்றைய ராசிப்பலன் -  03.07.2017

மேஷம்
இன்று உங்களின் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வீட்டுத் தேவைகள் எளிதில் பூர்த்தியாகும். உத்தியோக ரீதியான பயணங்களில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன் கிட்டும்.
ரிஷபம்
இன்று குடும்பத்தில் தனவரவு தாராளமாக இருக்கும். பழைய கடன்கள் தீரும். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். சேமிப்பு உயரும்.
மிதுனம்
இன்று எந்த காரியத்தை செய்தாலும் தடைகள் ஏற்படக் கூடும். உத்தியோகத்தில் சக நண்பர்களுடன் வீண் மன ஸ்தாபங்கள் உண்டாகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் உடல் சோர்வு ஏற்படும். நண்பர்கள் வழியாக உதவிகள் கிடைக்கப்பெறும். பெரிய மனிதர்களின் சந்திப்பு புது தெம்பை தரும்.
கடகம்
இன்று குடும்பத்தில் அமைதியில்லாத சூழ்நிலை ஏற்படக்கூடும். பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்காக சிறு தொகை செலவிட நேரிடும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் நல்ல பலனைத் தரும். பணவரவு சிறப்பாக இருப்பதால் கடன்கள் குறையும். உடன்பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
சிம்மம்
இன்று உங்களுக்கு திடீர் பணவரவுகள் உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கப்பெறும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். நீண்ட நாள் எதிர்பார்த்த உதவி இன்று கிடைக்கப்பெறும். வழக்கு விஷயங்களில் வெற்றி கிட்டும். வருமானம் இரட்டிப்பாகும்.
கன்னி
இன்று குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் சிறுசிறு மாறுதல்களை செய்து லாபத்தை அடைவீர்கள். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும்-.
துலாம்
இன்று நீங்கள் எந்த விஷயத்திலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உடன்பிறந்தவர்கள் வழியாக சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
விருச்சிகம்
இன்று குடும்பத்தில் நிம்மதி குறையக்கூடிய சூழ்நிலை உருவாகும். உடல் ஆரோக்கியத்திலும் சிறு பாதிப்புகள் உண்டாகலாம். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும்.
தனுசு
இன்று குடும்பத்தில் தாராள தனவரவு உண்டாகும். கடன் பிரச்சனைகள் தீரும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். உத்தியோக ரீதியான பயணங்களில் வெளிவட்டார நட்பு கிட்டும்.
மகரம்
இன்று குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வமுடன் ஈடுபடுவார்கள். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் மேலதிகாரிகளால் மதிக்கப்படும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் தொழிலில் அனுகூலம் கிட்டும்.
கும்பம்
இன்று உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்தநிலை ஏற்படலாம். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் குறைந்து காணப்படுவார்கள். தொழில் ரீதியான புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். எதிர்பாராத உதவி கிட்டும். கடன்கள் குறையும். தெய்வ வழிபாடு நன்மையை தரும்.
மீனம்
நீங்கள் இன்று சற்று குழப்பமாகவே காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு இன்று சந்திராஷ்டமம் நடைபெறுவதால் எந்த செயலையும் நிதானத்துடன் செய்வது நல்லது. மற்றவர்களிடம் பேசும் பொழுது கவனமாக பேச வேண்டும். வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் செல்வது நல்லது.