Showing posts with label இன்று - 04.07.2017. Show all posts
Showing posts with label இன்று - 04.07.2017. Show all posts

Tuesday, July 4, 2017

இன்று - 04.07.2017

இன்று -  04.07.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com

 வாங்கி படிக்க தவறாதீர்கள் 
ஜுலை 2017 ஓம்சரவணபவா இதழுடன்
ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2017 - 2019
(12 ராசிகளுக்கும் பொதுப்பலன்,பரிகாரம்,
 அதிர்ஷ்டக்குறிப்புகள் அடங்கியது)  
96 பக்கம் இலவச இனைப்பு
இப்படிக்கு
ஜோதிட மாமணி, 
முனைவர் முருகு பாலமுருகன்
ஆசிரியர் - இந்த வார ஜோதிடம்



இன்றைய  பஞ்சாங்கம்
04-07-2017, ஆனி- 20, செவ்வாய்கிழமை, ஏகாதசி திதி இரவு 12.29 வரை பின்பு வளர்பிறை துவாதசி. விசாகம் நட்சத்திரம் பின்இரவு 05.26 வரை பின்பு அனுஷம். மரணயோகம் பின்இரவு 05.26 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம்- 2, ஜீவன்- 1. ஏகாதசி. பெருமாள் - முருக வழிபாடு நல்லது. சுப முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.




சுக்கி
சூரிய செவ்
கேது 
திருக்கணித கிரக நிலை
04.07.2017

புதன்

ராகு

சனி  (வ)
சந்தி  
குரு 

இன்றைய ராசிப்பலன் -  04.07.2017

மேஷம்
இன்று இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் எதிர்பாராத வகையில் புதிய மாற்றங்கள் உண்டாகும். உறவினர்களுடன் இருந்த பிரச்சனைகள் குறையும். பூர்வீக சொத்துக்களால்  அனுகூலப் பலன்கள் கிட்டும். தொழில் ரீதியான நவீன கருவி வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும்.
ரிஷபம்
இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். சுபகாரியங்கள் கைகூடும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும்.
மிதுனம்
இன்று குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படக்கூடும். உறவினர்களுக்கிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். தொழில் வியாபாரத்தில் மறைமுக பிரச்சனைகள் வந்தாலும் லாபம் பாதிப்படையாது. சிக்கனமாக செயல் படுவது நல்லது. நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
கடகம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருந்தாலும் உங்கள் தேவைகள் நிறைவேறும். பிள்ளைகளால் தேவையற்ற வீண் செலவுகள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்கள் வேலையில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம். எதிலும் கவனம் தேவை.
சிம்மம்
இன்று எந்த காரியத்திலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உற்றார் உறவினர் வருகையினால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் கிட்டும். தொழில் ரீதியாக வெளிவட்டார நட்பு ஏற்படும். சேமிப்பு உயரும்.
கன்னி
இன்று வியாபாரத்தில் உங்களின் பெயர் புகழ் செல்வாக்கு மேலோங்கி இருக்கும். வேலையில் மிக கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் துணிச்சல் உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நிகழக்கூடிய சூழ்நிலை உருவாகும். திடீர் பணவரவு கிடைத்து கடன்கள் குறையும்.
துலாம்
இன்று குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். சகோதர, சகோதரிகள் வழியில் அனுகூலம் கிட்டும். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு தகுதிக்கேற்ற பதவி உயர்வு உண்டாகும். தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.
விருச்சிகம்
இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். திருமண முயற்சிகளில் தாமத நிலை ஏற்படக்கூடும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.
தனுசு
இன்று குடும்பத்தில் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் அமையும். தொழில் வியாபாரத்தில் பல போட்டிகளுக்கிடையே வெற்றி கிட்டும். அலுவலகங்களில் உடன் பணிபுரிபவர்கள் அனுகூலமாக இருப்பார்கள். வருமானம் பெருகும்.
மகரம்
இன்று வீட்டில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும். திடீர் உதவிகள் கிடைக்கப்பெற்று ஆனந்தம் அடைவீர்கள். கடன் பிரச்சனை தீரும். புதிய பொருள் சேரும்.
கும்பம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் ஆர்வமின்றி ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் பிள்ளைகளால் அமைதி குறையக்கூடும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணங்களால் அனுகூலம் கிட்டும். கொடுக்கல்& வாங்கலில் கவனம் தேவை. அரசு வழியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வருமானம் பெருகும்.
மீனம்


இன்று நீங்கள் சற்று குழப்பமுடன் மன உளைச்சலுடனும் காணப்படுவீர்கள். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலிலும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். வெளி நபர்களிடம் அதிகம் பேசாமல் இருந்தால் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம். உடல்நிலையில் கவனம் தேவை.