Showing posts with label இன்று - 04.08.2017. Show all posts
Showing posts with label இன்று - 04.08.2017. Show all posts

Friday, August 4, 2017

இன்று - 04.08.2017

இன்று -  04.08.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (மாத இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com

வாங்கி படிக்க தவறாதீர்கள்

ஆகஸ்ட் 2017 ஓம்சரவணபவா இதழுடன்
குரு பெயர்ச்சி பலன்கள் 2017 & 2018
(12 ராசிகளுக்கும் பொதுப்பலன்,பரிகாரம்,
 அதிர்ஷ்டக்குறிப்புகள் அடங்கியது
96 பக்கம் இலவச இனைப்பு

இப்படிக்கு
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பாலமுருகன்

ஆசிரியர் & இந்த வார ஜோதிடம் மாத இதழ்





இன்றைய  பஞ்சாங்கம்
04-08-2017, ஆடி- 19, வெள்ளிக்கிழமை, துவாதசி திதி மாலை 06.52 வரை பின்பு வளர்பிறை திரியோதசி. மூலம் நட்சத்திரம் இரவு 09.02 வரை பின்பு பூராடம். அமிர்தயோகம் இரவு 09.02 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம். நேத்திரம்- 2, ஜீவன்- 1. வரலட்சுமி விரதம். சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் - பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00   




சுக்கி
கேது 
               
திருக்கணித கிரக நிலை
04.08.2017

சூரிய செவ்

புதன்
ராகு
சந்தி
சனி  (வ)

குரு 

இன்றைய ராசிப்பலன் -  04.08.2017
மேஷம்
இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். பெற்றோருடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும். குடும்பத்தில் தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்த்தால் ஒற்றுமையாக இருக்கலாம். புத்திர வழியில் அனுகூலம் கிட்டும். பழைய கடன்கள் குறையும்.
ரிஷபம்
இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படும். செய்யும் செயல்களில் தாமத நிலை உண்டாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானம் தேவை. அறிமுகம் இல்லாதவர்களிடம் வீண் வாக்கு வாதங்களை தவிர்க்கவும். புதிய முயற்சிகளை தள்ளிவைப்பது உத்தமம்.
மிதுனம்
இன்று உங்களுக்கு குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். பிள்ளைகள் படிப்பில் அதிகம் ஆர்வம் காட்டுவார்கள். வழக்கு சம்மந்தமான விஷயங்களில் வெற்றி உண்டாகும். பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு தெம்பை கொடுக்கும். நண்பர்களின் ஆலோசனையால் தொழிலில் நல்ல பலன் கிடைக்கும்.
கடகம்
இன்று உங்களுக்கு அதிகாலையிலே ஆனந்தமான செய்தி வந்து சேரும். திருமண சுப முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். பொன்பொருள் சேர்க்கை மனதிற்கு மகிழ்ச்சி தரும். ஒரு சிலருக்கு வெளி மாநிலங்களில் பணிபுரியும் வாய்ப்பு கிட்டும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும்.
சிம்மம்
இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் மந்த நிலை ஏற்படும். ஆடம்பர செலவுகளால் கையிருப்பு குறையலாம். உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். வியாபாரத்தில் வெளியூர் பயணங்களால் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.
கன்னி
இன்று உங்களுக்கு தீடீர் பணவரவு உண்டாகும். ஆடம்பர பொருள்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெண்களுக்கு இன்று அனு-கூலமான பலன்கள் கிட்டும். சுபகாரியம் கைகூடும்.
துலாம்
இன்று குடும்பத்தில் உள்ளவர்கள் ஒற்றுமையாக இருப்பார்கள். உறவினர்கள் வழியாக மகிழ்ச்சி தரும் செய்திகள் வரும். நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் தடையின்றி கிடைக்கும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். வருமானம் பெருகும்.
விருச்சிகம்
இன்று உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். வெளியூர் பயணங்களால் வீண் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வியாபாரத்தில் முன்னேற்றம் காணலாம். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும்.
தனுசு
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வேலையில் இருந்த பிரச்சனைகள் சுமூகமாக முடியும். தொழில் ரீதியாக எதிர்பார்த்த வங்கிகடன் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும்.
மகரம்
இன்று எந்த ஒரு செயலிலும் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். உடன்பிறப்பிடம் ஒற்றுமை குறையும். பொறுப்புடன் செயல்படுவதன் மூலம் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும்.
கும்பம்
இன்று வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். ஒரு சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் விலகும். பிள்ளைகள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். நினைத்த காரியம் நிறைவேறும். நிம்மதி நிலவும்.
மீனம்

இன்று குடும்பத்தில் உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சிலருக்கு தெய்வ தரிசனத்திற்காக தூர பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.