Showing posts with label இன்று - 05.01.2017. Show all posts
Showing posts with label இன்று - 05.01.2017. Show all posts

Thursday, January 5, 2017

இன்று - 05.01.2017

இன்று -  05.01.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com

இன்றைய  பஞ்சாங்கம்
05.01.2017, மார்கழி 21, வியாழக்கிழமை, சப்தமி திதி பகல் 02.01 வரை பின்பு வளர்பிறை அஷ்டமிஉத்திரட்டாதி நட்சத்திரம் மாலை 04.45 வரை பின்பு ரேவதி, நாள் முழுவதும் சித்தயோகம், நேத்திரம் &  1, ஜீவன் & 1/2 , இராகு காலம் - மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.  சுப நாள் சகல சுபமுயற்சிகளுக்கும் ஏற்ற நாள்.

சந்தி



கேது  செவ்
சுக்கி  
               
திருக்கணித கிரக நிலை
05.01.2017






ராகு
புதன் (வ)
சூரிய
சனி 

               
குரு 


இன்றைய ராசிப்பலன் -  05.01.2017

மேஷம்           இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகள் ஏற்படும் சூழ்நிலையும் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. இதுவரை இருந்த பிரச்சனைகள் இன்று சற்று குறையும்.
ரிஷபம்           இன்று உங்களுக்கு அதிகாலையிலே சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். புத்திரர்களால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சகோதர, சகோதரிகள் ஆதரவாய் இருப்பார்கள். வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறையும்.
மிதுனம்         இன்று நீங்கள் புது பொலிவுடனும், தெம்புடனும் காணப்படுவீர்கள். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனம் ஆனந்தப்படுவீர்கள். பணி புரிவோர்களுக்கு பணியில் உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். கடன் பிரச்சனைகள் தீரும்.
கடகம்              உங்கள் உடல்நிலையில் சற்று சோர் இருக்கும், சிறுசிறு உபாதைகள் ஏற்பட்டாலும் பெரிய பாதிப்புகள் உண்டாகாது. அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எளிதில் முடியவேண்டிய செயல்கள் தாமதமாகும். கடன் பிரச்சனைகளை தவிர்க்க சற்று சிக்கனமுடன் நடந்து கொள்வது நல்லது.
சிம்மம் இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மற்றவர்களிடம் பேசும்பொழுது கவனமுடன் பேச வேண்டும். புது முயற்சிகளை தவிர்க்கவும்.
கன்னி              உங்களுக்கு பிள்ளைகளால் இன்று வீண் செலவுகள் ஏற்பட்டாலும் அனுகூலமாக இருப்பார்கள். தொழில் புரிவோர்க்கு அவர்கள் தொழிலில் சற்று மந்த நிலை ஏற்படும். அலுவலகத்தில் வேலை செய்பவர் சக தொழிலாளர்களிடம் விட்டு கொடுத்து செயல்படுவதன் மூலம் பிரச்சனைகள் குறையும்.
துலாம்            இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். சிலருக்கு புதிய பொருட்கள் வாங்கும் யோகம் ஏற்படும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்பு கிடைக்கும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும்.
விருச்சிகம்                இன்று உங்களுக்கு பணவரவு சுமாராகத்தான் இருக்கும். பணிபுரிபவர்களுக்கு உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் சக ஊழியர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். தொழில் செய்வோர் தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் நல்ல லாபத்தை அடைய முடியும்.
தனுசு இன்று உங்களின் பிள்ளைகளின் படிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரிடும். திருமண முயற்சிகளில் சற்று மந்த நிலை ஏற்படும். தொழில் புரிவோர் தொழில் சம்பந்தமாக வெளியூர் வெளிநாட்டு நபர்கள் மூலம் அனுகூலப்பலன்கள் பெறுவர். கடன் சுமை ஓரளவு குறையும்.
மகரம்              இன்று மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகள் படிப்பில் நல்ல ஆர்வம் காட்டுவார்கள். திருமண சுப முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் புதிய கூட்டாளிகள் கிடைக்கப் பெறுவார்கள்.
கும்பம் இன்று உங்களுக்கு குடும்பத்தில் உள்ளவர்களுக்கு மருத்துவ செலவுகள் செய்யும் சூழ்நிலை ஏற்படும். பிள்ளைகளால் குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்ச்சிகளில் அனுகூலமற்ற பலன் கிடைக்கும். வியாபாரத்தில் சற்று லாபம் இருக்கும்.

மீனம் இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிக்கும் நாளாக இந்த நாள் அமையும். தொழிலில் நண்பர்களின் ஆலோசனைகளால் நல்ல பலன் கிடைக்கும். ஒரு சிலருக்கு திடீர் பயணம் உண்டாகும். வியாபாரத்தில் இதுவரை வராத பழைய பாக்கிகள் இன்று வசூலாகும்.