Showing posts with label இன்று - 05.03.2017. Show all posts
Showing posts with label இன்று - 05.03.2017. Show all posts

Sunday, March 5, 2017

இன்று - 05.03.2017

இன்று -  05.03.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com



இன்றைய  பஞ்சாங்கம்
05.03.2017, மாசி 21, ஞாயிற்றுக்கிழமை, அஷ்டமி திதி பின்இரவு 03.59 வளர்பிறை நவமி, ரோகிணி நட்சத்திரம் இரவு 09.00 வரை பின்பு மிருகசீரிஷம், நாள் முழுவதும் சித்தயோகம், நேத்திரம் 1, ஜீவன் 1/2, சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் - மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் -  பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00,  மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00,

சுக்கி(வ)
செவ்
சந்தி

சூரிய கேது 
புதன் 
திருக்கணித கிரக நிலை
05.03.2017



ராகு
சனி 

               
குரு  (வ)


இன்றைய ராசிப்பலன் -  05.03.2017
மேஷம்
இன்று உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பங்கள் நடைபெற்றாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்காக சிறு தொகையை செலவிட நேரிடும். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் சற்று குறையும்.
ரிஷபம்
இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தினருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். தர்ம காரியங்கள் செய்து மனமகிழ்ச்சி அடைவீர்கள்.
மிதுனம்
இன்று நீங்கள் பணப்பிரச்சனையிலிருந்து விடுபட சிக்கனமுடன் செயல்படவேண்டும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படும். பெரியோர்களின் மன கஷ்டத்திற்கு ஆளாவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து பண உதவிகள் கிடைக்கும்.
கடகம்
இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷமான விஷயங்கள் நடைபெறும். சுப செலவுகள் தோன்றும். பெரிய மனிதர்களுடன் நட்பு உண்டாகும். அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.
சிம்மம்
இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கி ஒற்றுமை நிலவும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். பெண்கள் வீட்டு தேவையை பூர்த்தி செய்வார்கள். திருமணம் சம்பந்தமான காரியங்களில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள்.
கன்னி
இன்று வீட்டில் ஒற்றுமை குறையும் சூழ்நிலை உருவாகும். திருமண பேச்சுவார்த்தைகள் கைகூடும் நேரத்தில் இடையூறுகள் ஏற்படும். பிள்ளைகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள். குடும்பத்தோடு தெய்வ தரிசனத்திற்காக மேற்கொள்ளும் பயணங்கள் மனதிற்கு நிம்மதியை தரும்.
துலாம்
இன்று உங்களுக்கு மனகுழப்பம் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். சுப முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. அறிமுகம் இல்லாதவர்களிடம் பேசுவதை தவிர்த்தால் பிரச்சனைகள் குறையும். உடல்நிலையில் கவனம் தேவை.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்.
தனுசு
இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி காணப்படும். பிள்ளைகள் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும்.
மகரம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். உடல்நிலையில் சோர்வும், சுறுசுறுப்பின்மையும் உண்டாகும். செலவுகள் அதிகமாகும். சிக்கனமாக செயல்பட்டால் கடன் பிரச்சனைகள் ஓரளவு குறையும். வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதால் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும்.
கும்பம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். பிள்ளைகள் மூலம் வீண் செலவுகள் ஏற்படும். திருமண முயற்சிகளில் சில தடங்கலுக்குப் பின் முன்னேற்றம் உண்டாகும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம். எந்த செயலிலும் நிதானம் தேவை.
மீனம்     


இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பழைய நண்பர்களை சந்திப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் இருக்கும்.