Showing posts with label இன்று - 05.04.2017. Show all posts
Showing posts with label இன்று - 05.04.2017. Show all posts

Wednesday, April 5, 2017

இன்று - 05.04.2017


கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com


வாங்கி படிக்க தவறாதீர்கள்
இந்த வார ஜோதிடம் இதழில்

ராஜா, எஸ்.பி.பி மோதல் ஏன்?-             அம்சி விவேகானந்தன்

கும்பிட வேண்டிய குலதெய்வம் எது? (வாரம் ஒரு பரிகாரம்)-     விசு அய்யர்

உங்கள் எதிர்கால ஜோதிட வழிகாட்டி! -     -முனைவர் முருகு பாலமுருகன்

மருத்துவ ஜோதிடத்தின் மகத்துவங்கள்!-- -  -டாக்டர் இராரகு M,Sc Astro

கல்விக்கு ஜோதிடம் அவசியம்!-       சிவஸ்ரீ குருஜி ஜி.கே. முத்து குருக்கள்

அரிட்டமும் ஆயுளும்! குமார சுவாமியம் கூறும் பன்னிரு பாவப் பலன்கள்!
                                    -பிராஜசேகரன் M.Phil Astro

வேண்டுதல்களை நிறைவேற்றும் முத்திரைகள்! – சித்தயோகி சிவதாசன் ரவி

எமகண்டம், குளிகை காலம்!
-மன்னை ஸ்ரீமதி விஅகிலாண்டேஸ்வரி ஐயர் M.Phil Astro

அரசுப் பணியில் சேர ஜாதக அமைப்புகள்!-  -சரவணன் Gendral Sec ICAS

சித்திரை 1-ல் மலரும் “ஹேவிளம்பி” புத்தாண்டுப் பலன்கள்!-     -
முனைவர் முருகு பாலமுருகன்

திருவோணத்தினரின் திறன் பெருக்கும் பரிகாரங்கள்! நட்சத்திரப் பரிகாரங்கள்!
ஜோதிஷண்முகம்

இந்த வார பஞ்சாங்கம்!--                      முனைவர் முருகு பாலமுருகன்

வெளிநாடு செல்லும் யோகமுடையவர் யார்?- ஜோதிடச்சுடர் ந. ஞானரதம்

வார ராசிபலன் (09-04-2017 முதல் 15-04-2017 வரை) பங்குனி 27 முதல் சித்திரை 2 வரை

முனைவர் முருகு பாலமுருகன்

இன்றைய  பஞ்சாங்கம்
5.04.2017, பங்குனி - 23, புதன்கிழமை, நவமி திதி காலை 10.04 வரை பின்பு வளர்பிறை தசமி,             பூசம் நட்சத்திரம் இரவு 10.52 வரை பின்பு ஆயில்யம், நாள் முழுவதும் சித்தயோகம், நேத்திரம் 2, ஜீவன் 0, ஸ்ரீ ராம நவமி, ஆஞ்சநேயர் வழிபாடு உத்தமம், புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.

இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00

சூரிய
சுக்கி(வ)
செவ்
புதன்


கேது 
திருக்கணித கிரக நிலை
05.04.2017

சந்தி

ராகு
சனி
 

               
குரு  (வ)

இன்றைய ராசிப்பலன் -  05.04.2017

மேஷம்
இன்று பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்காக சிறு தொகை செலவிட நேரிடும். திருமண முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் பிரச்சனைகள் இருந்தாலும் உடன் பணிபுரிபவர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் இருந்த மன குழப்பங்கள் சற்று குறையும்.
ரிஷபம்
இன்று எந்த செயலிலும் புது உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். சிலருக்கு புதிய பொருட்கள் வாங்கும் யோகம் ஏற்படும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்பு கிடைக்கும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் லாபம் பெருகும்.
மிதுனம்
இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடித்து வெற்றி அடைவீர்கள். குடும்பத்தில் உற்றார் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கப்பெறும். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் திறமைகேற்ப புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலில் போட்டி பொறாமை குறைந்து லாபம் பெருகும்.
கடகம்
இன்று உங்களுக்கு அதிகாலையிலே ஆனந்தமான செய்திகள் கிடைக்கும். புத்திரர்களால் பெருமை சேரும். உத்தியோத்தில் புதிய நட்பு மகிழச்சி அளிக்கும். கடன் குறையும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். சுபகாரியங்கள் கைகூடும்.
சிம்மம்
இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் செய்யும் சூழ்நிலை ஏற்படும். பிள்ளைகளால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட கூடும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் சிறு தாமதத்திற்குப் பிறகு அனுகூலப்பலன் உண்டாகும். மனைவி வழி உறவினர்கள் மூலம் உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்கும்.
கன்னி
இன்று உத்தியோகத்தில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகள் படிப்பில் நல்ல ஆர்வம் காட்டுவார்கள். திருமண சுபமுயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி உண்டாகும். வியாபாரத்தில் இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும்.
துலாம்
இன்று நீங்கள் புது பொலிவுடனும், தெம்புடனும் காணப்படுவீர்கள். தொழில் வியாபாரத்தில் வெளிவட்டார நபர்கள் மூலம் அனுகூலப்பலன்கள் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும். உடன்பிறந்தவர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று குடும்பத்தில் சந்தோஷம் கூடும்.
விருச்சிகம்
இன்று குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். ஆடம்பர பொருள்கள் வாங்கி மகிழ்வீர்கள். நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழிலில் நண்பர்களின் ஆலோசனைகளால் நல்ல பலன் கிடைக்கும். சேமிப்பு உயரும்.
தனுசு
இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. மற்றவர்களின் பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பது உத்தமம். புது முயற்சிகளையும் வெளியூர் பயணங்களையும் தவிர்க்கவும்.
மகரம்
இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். பிள்ளைகள் அனுகூலமாக அமைவார்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். பழைய கடன்கள் தீரும்.
கும்பம்
இன்று உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கிட்டும். வெளியூர் பயணங்களால் அனுகூலப்பலன் உண்டாகும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை கூடும். தொழில் வியாபார ரீதியாக பொருளாதார நிலை அமோகமாக இருக்கும்.
மீனம்

இன்று பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். சேமிப்பு குறையும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் லாபம் பாதிப்படையாது. உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களின் உதவிகள் மூலம் கடன் பிரச்சனை தீரும். தெய்வ வழிபாடு நல்லது.