Showing posts with label இன்று - 05.08.2017. Show all posts
Showing posts with label இன்று - 05.08.2017. Show all posts

Saturday, August 5, 2017

இன்று - 05.08.2017

இன்று -  05.08.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (மாத இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com

இன்றைய  பஞ்சாங்கம்
05-08-2017, ஆடி- 20, சனிக்கிழமை, திரியோதசி திதி இரவு 08.51 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. பூராடம் நட்சத்திரம் இரவு 11.35 வரை பின்பு உத்திராடம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம்- 2, ஜீவன்- 1. சனிப் பிரதோஷம். சிவ வழிபாடு நல்லது. தனியநாள். கரிநாள். சுப முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் - காலை 09.00-10.30,  எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.




சுக்கி
கேது 
               
திருக்கணித கிரக நிலை
05.08.2017

சூரிய செவ்

புதன்
ராகு
சந்தி
சனி  (வ)

குரு 

இன்றைய ராசிப்பலன் -  05.08.2017
மேஷம்
இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் தோன்றி மன அமைதி குறையலாம். நண்பர்கள் ஆறுதலாக இருப்பார்கள். ஆரோக்கிய பாதிப்புகள் குறையும். வேலையில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பெரிய மனிதர்களின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு உதவும்.
ரிஷபம்
இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்த்தால் பிரச்சனைகள் குறையும். எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். சுபகாரியங்களை தவிர்க்கவும். பயணங்களில் கவனம் தேவை.
மிதுனம்
இன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவதன் மூலம் லாபம் பெருகும். புதிய பொருள் வீடு வந்து சேரும்.
கடகம்
இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி காணப்படும். பிள்ளைகள் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆடை ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து ஒற்றுமை கூடும்.
சிம்மம்
இன்று பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்காக சிறு தொகையை செலவிட நேரிடும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். பணப்பிரச்சனையிலிருந்து விடுபட சிக்கனமுடன் செயல்படவேண்டும். பிள்ளைகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கும்.
கன்னி
இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். கணவன் மனைவிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பெண்கள் வீட்டு தேவையை பூர்த்தி செய்வார்கள். அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகளால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.
துலாம்
இன்று வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். உத்தியோக சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். கடன் பிரச்சினை தீரும்.
விருச்சிகம்
இன்று உறவினர்களால் வீட்டில் ஒற்றுமை குறையும் சூழ்நிலை உருவாகும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும் நேரத்தில் இடையூறுகள் ஏற்படலாம். பெரியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் நிதானமாக நடந்து கொண்டால் உயர்வு கிட்டும்.
தனுசு
இன்று உங்களுக்கு திடீர் தனவரவு உண்டாகும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். புதிய பொருள் வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.
மகரம்
இன்று வியாபாரத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்திலும் மந்த நிலை உண்டாகும். சிக்கனமாக செயல்பட்டால் கடன் பிரச்சனைகள் ஓரளவு குறையும். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
கும்பம்
இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கி ஒற்றுமை நிலவும். பிள்ளைகள் பாசத்துடன் இருப்பார்கள். உறவினர்கள் வழியில் சுபசெலவுகள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். வராத கடன்கள் வசூலாகும். தர்ம காரியங்கள் செய்து மனமகிழ்ச்சி அடைவீர்கள்.
மீனம்

இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷமான விஷயங்கள் நடைபெறும். பெரிய மனிதர்களுடன் நட்பு உண்டாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். பணப்பிரச்சனைகள் குறைந்து நிம்மதி நிலவும்.