Showing posts with label இன்று - 05.10.2017. Show all posts
Showing posts with label இன்று - 05.10.2017. Show all posts

Thursday, October 5, 2017

இன்று - 05.10.2017

இன்று -  05.10.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (மாத இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com

வாங்கி படிக்க தவறாதீர்கள்
இந்த வார ஜோதிடம் மாத இதழில்

குபேர செல்வம் தரும் லட்சுமி புஜை! -                               அழகரசன்
துலா குரு உலக அளவில் ஏற்படுத்தும் மாற்றங்கள்! -       அம்சி விவேகானந்தன்
முடக்குவாதத்திற்கு ஜோதிடப் பரிகாரங்கள்! –          அஸ்ட்ரோ சுந்தரராஜன்
உங்கள் எதிர்கால ஜோதிட வழிகாட்டி! -      முனைவர் முருகு பாலமுருகன்
தங்கம் விலை உயரும், வாகன விலை குறையும்!-           ஜி. ஸ்ரீனிவாசன்
அன்றாட வாழ்வில் அதிர்ஷ்டம் பெருக அற்புத வழிகள்?    -
கடகம் இராமசாமி
பிள்ளை ஜாதகம் தந்தையை தாங்குமா? தாக்குமா? -        
தோஷ சாம்யம்! -                                         பராசரி அய்யப்ப சர்மா
அக்டோபர் மாத பஞ்சாங்கம்!--                   முனைவர் முருகு பாலமுருகன்
சனி, செவ்வாயின் சம சப்தம நிலை!-                   எஸ். விஜய நரசிம்மன்
குமார சுவாமியம் கூறும் பன்னிரு பாவப் பலன்கள்! –
                                                   பி. ராஜசேகரன் M.Phil Astro
ஜென்ம பாவம் தீர்க்கும் பாத தரிசனம்! –           சித்தயோகி சிவதாசன் ரவி
தனயோகம் தரும் கிரக நிலைகள்! –                           அபிராமி சேகர்
காலத்தால் அழியாத ஜோதிடமும் காலத்தை வென்ற பரிகாரங்களும்! –  
ஜி.கே. முத்து குருக்கள்
தனம் பெருக்கும் திரயோதசி வழிபாடு-                          விசு அய்யர்
லக்னத்தில் கிரகங்கள் நின்ற பலன்கள்!- மன்னை ஸ்ரீமதி.வி. அகிலாண்டேஸ்வரி
12 லக்னப் பலன்கள்!-                               முனைவர் முருகு பாலமுருகன்
மருத்துவ ஜோதிடத்தின் மகத்துவங்கள்!-- -        -   டாக்டர் இரா. ரகு M,Sc Astro
பரணி நட்சத்திர சூட்சுமங்கள்!-                             ஜோதி ஷண்முகம்
சிவநயன யோகம் தரும் சிறப்பான பயன்கள்!-      ஜி. ஆர். வெங்கடேஸ்வரன்
அக்டோபர் மாத எண்கணிதப் பலன்கள்!-                 ஆம்புர் வேல்முருகன்
புகழ் தரும் சூரிய மேடு!-                               கைரேகைக் கலைஞன்
பஞ்சாங்கத்தில் திதி!-                                          ஜி. ஸ்ரீனிவாசன்
வெற்றிக்கு வழிகாட்டும் எண்கணிதம்!-    ஜே.வி.வி. பொன்தாமரைக் கண்ணன்
அக்டோபர் மாத ராசிபலன்!--                        முனைவர் முருகு பாலமுருகன்





இன்றைய  பஞ்சாங்கம்
05-10-2017, புரட்டாசி -19, வியாழக்கிழமை, பௌர்ணமி திதி இரவு 12.10 வரை பின்பு தேய்பிறை பிரதமை. உத்திரட்டாதி நட்சத்திரம் இரவு 08.50 வரை பின்பு ரேவதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம்- 2, ஜீவன்- 1. பௌர்ணமி விரதம்.
இராகு காலம் - மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.


சந்தி




 
திருக்கணித கிரக நிலை
05.10.2017

ராகு
கேது
செவ்
சுக்கி 

சனி 

குரு    
  சூரிய புதன்

இன்றைய ராசிப்பலன் -  05.10.2017
மேஷம்
இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகமாகும். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். புதிய பொருட்களை வாங்குவீர்கள்.
ரிஷபம்
இன்று குடும்பத்தில் சுப செலவுகள் உண்டாகும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கப் பெறும். வெளியூர் பயணங்களில் நல்ல அனுகூலப் பலன் கிடைக்கும். சிலர் ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வார்கள். வேலையில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்லவும்.
மிதுனம்
இன்று உங்களுக்கு திடீர் பணவரவுகள் உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கப்பெறும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். கடன் பிரச்சனை தீரும்.
கடகம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் நல்ல பலனைத் தரும். அரசு வழியில் எதிர்பார்க்கும் கடன் உதவி கிட்டும். புதிய நபரின் அறிமுகம் ஏற்படும்.
சிம்மம்
இன்று நீங்கள் சோர்வுடனும் மன உளைச்சலுடனும் காணப்படுவீர்கள். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலிலும் பொறுமையை கடை பிடிப்பது நல்லது. மற்றவர்கள் பிரச்சனையில் தலையிடாமல் இருப்பது உத்தமம். தொழில் ரீதியான புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
கன்னி
இன்று நீங்கள் எந்த காரியத்தையும் சிறப்புடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கப்பெறும். பொருளாதார தேவைகள் பூர்த்தியாகும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். சேமிப்பு உயரும்.
துலாம்
இன்று குடும்பத்தில் அமைதி நிலவும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சொத்துக்களை வாங்கவும் விற்கவும் அனுகூலமான நாளாகும். உடன்பிறப்புக்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கப்பெறும். வேலையில் பணிபுரிபவர்களுக்கு தகுதிக்கேற்ற பதவி உயர்வு உண்டாகும்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு பணப்புழக்கம் சற்று குறைவாக இருக்கும். உத்தியோகத்தில் எதிர்பாராத பிரச்சனைகள் ஏற்படலாம். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பண சிக்கலை தவிர்க்கலாம். வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.
தனுசு
இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். நண்பர்கள் முலம் எதிர்பார்த்த காரியங்கள் ஏமாற்றத்தை அளிக்கும். உடலில் சிறுசிறு உபாதைகள் ஏற்படும், ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் கிட்டும். தெய்வ வழிபாடு நல்லது.
மகரம்
இன்று வேலையில் உங்கள் திறமைகளுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். உற்றார் உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தொழில் சம்பந்தபட்ட வழக்கு விஷயங்களில் வெற்றி உண்டாகும். பணவரவு தாராளமாக இருக்கும்.
கும்பம்
இன்று உடல்நிலையில் சற்று சோர்வு, சுறுசுறுப்பின்மை ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். தொழிலில் சிறுசிறு மாறுதல்களை செய்தால் நல்ல லாபத்தை அடைய முடியும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
மீனம்

இன்று தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் நற்பலன்கள் உண்டாகும். சுப முயற்சிகளில் முன்னேற்றங்கள் ஏற்படும். ஆடை, ஆபரண சேர்க்கை ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணிச்சுமை குறையும். அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு அமையும்.