Showing posts with label இன்று - 06.01.2017. Show all posts
Showing posts with label இன்று - 06.01.2017. Show all posts

Friday, January 6, 2017

இன்று - 06.01.2017

இன்று -  06.01.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com

இன்றைய  பஞ்சாங்கம்
06.01.2017, மார்கழி 22, வெள்ளிக்கிழமை, அஷ்டமி திதி பகல் 12.25 வரை பின்பு வளர்பிறை நவமி, ரேவதி நட்சத்திரம் பகல் 03.45 வரை பின்பு அஸ்வினி, சித்த யோகம் பகல் 03.45 வரை பின்பு  அமிர்தயோகம், நேத்திரம் &  1, ஜீவன் & 1/2 , இராகு காலம் - பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00 அம்மன் வழிபாடு நல்லது, சுப முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.    


சந்தி



கேது  செவ்
சுக்கி  
               
திருக்கணித கிரக நிலை
06.01.2017





ராகு
புதன் (வ)
சூரிய
சனி 

               
குரு 


இன்றைய ராசிப்பலன் -  06.01.2017

மேஷம் இன்று நீங்கள் குடும்பத்தில் பொறுப்புடனும், சிக்கனத்துடனும் நடந்து கொள்வது அவசியம். உற்றார் உறவினர்கள் உங்களுக்கு சாதகமாக அமைவார்கள். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் தொழில் பாதிப்படையாது. தெய்வ வழிபாடு மூலம் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
ரிஷபம் உங்கள் குடும்பத்தில் இன்று மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். வீட்டிற்கு தேவையான பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் படிப்பு சிறப்பாக இருக்கும். வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் புதிய நபரின் அறிமுகத்தால் நன்மை ஏற்படும்.
மிதுனம்  இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். அரசு துறையில் பணிபுரிபவர்க்கு கௌரவ பதவிகள் அமையும். தொழில் தொடர்பான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நல்ல பலனை தரும். சுப காரியங்களுக்கான முயற்ச்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்.
கடகம்  இன்று உங்களுக்கு பணவரவு சுமாராகதான் இருக்கும். பூர்வீக சொத்துக்களை விற்பதில் அலைச்சல் அதிகரித்தாலும் ஓரளவு லாபமே கிடைக்கும். வியாபாரத்தில் ஈடுபடுவோர் பிரச்சனைகளை சமாளிக்க பிறரிடம் கடன் வாங்க நேரிடும். குடும்பத்தில் இதுவரை இருந்த நெருகக்கடிகள் சற்று குறையும்.
சிம்மம் இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் பகல் 03.45 வரை இருப்பதால் நீங்கள் சற்று மனகுழப்பத்துடன் காணப்படுவீர்கள். நீங்கள் பிறரை நம்பி பெரிய தொகையை கொடுப்பது, அல்லது மற்றவர் விஷேயத்தில் தலையிடு செய்வதை இன்று தவிர்ப்பது உத்தமம்.
கன்னி இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபடுவீர்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். வியாபாரத்தில் பல போட்டிகளுக்கிடையே வெற்றி ஏற்படும். மதியத்திற்கு பிறகு மன அமைதி குறையும்.
துலாம் இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அலுவலகத்தில் உடன் பணி புரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். புதிய பொருட்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும்.
விருச்சிகம் இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். உடன்பிறந்தவர்களுக்கிடையே ஒற்றுமை குறைந்து பிரச்சனை ஏற்படும் சூழ்நிலை உருவாகும். வேலையில் எவ்வளவு தான் பாடுபட்டாலும் நல்ல பெயர் எடுக்க முடியாது. பூர்வீக சொத்துக்களால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படும்.
தனுசு இன்று உங்களுக்கு உற்றார் உறவினர் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பங்கள் நடைபெற்றாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்வார்கள். பணவரவு ஓரளவு இருக்கும்.
மகரம் இன்று உங்களுக்கு தாராள தன வரவும், லஷ்மி கடாட்சமும் உண்டாகும். அரசு துறையில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். இதுவரை எதிரியாக இருந்தவர் கூட நண்பராக மாறி செயல்படுவார். தொழில் ரீதியாக வெளிநாட்டு நபர்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும்.
கும்பம் இன்று உங்களுக்கு மனதில் குழப்பமும் கவலையும் உண்டாகும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படும் சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளால் உங்களுக்கு மனநிம்மதி குறையும். நீங்கள் எடுக்கும் புதிய முயற்ச்சிகளுக்கு உடனிருப்பவர்களே தடையாக அமைவார்கள்.
மீனம் உறவினர்கள் வழியாக உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கிடையே ஒற்றுமை நல்லபடியாக இருக்கும். திடீர் என்று நல்ல செய்தி வரும், சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் போட்டி பொறாமைகள் குறையும். மன அமைதி இருக்கும், சுறுசுறுப்பாக இருப்பீர்கள்