Showing posts with label இன்று - 06.02.2017. Show all posts
Showing posts with label இன்று - 06.02.2017. Show all posts

Monday, February 6, 2017

இன்று - 06.02.2017

இன்று -  06.02.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com


இன்றைய  பஞ்சாங்கம்
06.02.2017, தை 24, திங்கட்கிழமை, தசமி திதி மாலை 04.09 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி, ரோகிணி நட்சத்திரம் பகல் 03.29 வரை பின்பு மிருகசீரிஷம், அமிர்தயோகம் பகல் 03.29 வரை பின்பு சித்த யோகம், நேத்திரம் 2, ஜீவன் 0, சுபமுகூர்த்த நாள் சகல சுப முயற்சிகளுக்கும் ஏற்ற நாள்.
இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.

செவ்
சுக்கி

சந்தி

கேது 
திருக்கணித கிரக நிலை
06.02.2017



சூரிய புதன்
ராகு
சனி 


               
குரு 


இன்றைய ராசிப்பலன் -  06.02.2017
மேஷம்  
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராகத்தான் இருக்கும். பணிபுரிபவர்களுக்கு உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் சக ஊழியர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். கடன் பிரச்சனைகளை தவிர்க்க சிக்கனமுடன் நடந்து கொள்வது நல்லது. தெய்வவழிபாடு நிம்மதியை தரும்.

ரிஷபம்
இன்று நீங்கள் புது பொலிவுடனும், தெம்புடனும் காணப்படுவீர்கள். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனம் ஆனந்தப்படுவீர்கள். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்பு கிடைக்கும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். கடன் பிரச்சனைகள் தீரும்.
மிதுனம்
இன்று உங்களின் பிள்ளைகளின் படிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரிடும். திருமண முயற்சிகளில் சற்று மந்த நிலை ஏற்படும். சேமிப்பு குறையும். உங்கள் உடல்நிலையில் சிறுசிறு உபாதைகள் ஏற்பட்டாலும் பாதிப்புகள் உண்டாகாது. அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
கடகம்
இன்று உங்களுக்கு அதிகாலையிலே சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். புத்திரர்களால் உங்கள் மதிப்பு கூடும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் புதிய கூட்டாளிகள் கிடைக்கப் பெறுவார்கள். உறவினர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பர்.
சிம்மம்
இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். புதிய பொருட்கள் வாங்கும் யோகம் ஏற்படும். ஒரு சிலருக்கு திடீர் பயணம் உண்டாகும். வியாபாரத்தில் இதுவரை வராத பழைய பாக்கிகள் இன்று வசூலாகும். திருமண சுப முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும்.
கன்னி
இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகள் ஏற்படும். தொழில் புரிவோர் தொழில் சம்பந்தமாக வெளிமாநில நபர்கள் மூலம் அனுகூலப்பலன்கள் பெறுவர். கடன் சுமை ஓரளவு குறையும். எளிதில் முடியவேண்டிய செயல்கள் காலதாமதமாகும். நண்பர்கள் துணை நிற்ப்பர்.
துலாம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற மனகுழப்பம் ஏற்படும். மற்றவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது உத்தமம். வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் இருப்பது சிறப்பு. சுபகாரியங்களை தவிர்க்கவும்.
விருச்சிகம்
இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தொழிலில் நண்பர்களின் ஆலோசனைகளால் நல்ல பலன் கிடைக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஆதரவாய் இருப்பார்கள். புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும்.
தனுசு
இன்று மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகள் படிப்பில் நல்ல ஆர்வம் காட்டுவார்கள். பணி புரிவோர்களுக்கு அவர்கள் திறமைகேற்ப பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறையும். புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும்.
மகரம்
உங்களுக்கு பிள்ளைகளால் இன்று வீண் செலவுகள் ஏற்படும். தொழிலில் சற்று மந்த நிலை ஏற்படும். வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் நல்ல லாபத்தை அடைய முடியும். நண்பர்களின் உதவி கிடைக்கும். பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு புது நம்பிக்கையை கொடுக்கும்.
கும்பம்
இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். பிள்ளைகளால் குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் அனுகூலமான பலன் ஏற்பட இடையூறு இருந்தாலும் லாபம் ஏற்படும். இதுவரை இருந்த பிரச்சனைகள் விலகும்
மீனம்
இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கிடையே ஒற்றுமை நிலவும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களில் அனுகூலப் பலன் உண்டாகும். வருமானம் பெருகும்.