Showing posts with label இன்று - 06.03.2017. Show all posts
Showing posts with label இன்று - 06.03.2017. Show all posts

Monday, March 6, 2017

இன்று - 06.03.2017

இன்று -  06.03.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com



இன்றைய  பஞ்சாங்கம்
06.03.2017, மாசி 22, திங்கட்கிழமை, நவமி திதி பின்இரவு 02.02 வரை பின்பு வளர்பிறை தசமி, மிருகசீரிஷம் நட்சத்திரம்  இரவு 07.42 வரை பின்பு திருவாதிரை, நாள் முழுவதும் சித்தயோகம், நேத்திரம் 1, ஜீவன்  1/2, வாஸ்து நாள் காலை 10.30 - 11.06,  சுப முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.
இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.

சுக்கி(வ)
செவ்
சந்தி

சூரிய கேது புதன் 
திருக்கணித கிரக நிலை
06.03.2017




ராகு
சனி

               
குரு  (வ)


இன்றைய ராசிப்பலன் - 06.03.2017
மேஷம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமண சுப முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். தொழிலில் நண்பர்களின் ஆலோசனைகளால் நல்ல பலன் கிடைக்கும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். பொன் பொருள் சேரும்.
ரிஷபம்
இன்று குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் செலவுகள் ஏற்படும். வியாபார முன்னேற்றத்திற்கான திட்டங்களில் சில இடையூறுகள் உண்டா-கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு புது நம்பிக்கையை தரும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.
மிதுனம்
இன்று உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனம் ஆனந்தப்படுவீர்கள். உடல் நிலை புது பொலிவுடனும், தெம்புடனும் காணப்படும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறையும். புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும்.
கடகம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராகத்தான் இருக்கும். எளிதில் முடிய வேண்டிய செயல்கள் காலதாமதமாகும். பணிபுரிபவர்களுக்கு உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் சக ஊழியர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். கடன் சுமை ஓரளவு குறையும். நண்பர்கள் துணை நிற்பர்.
சிம்மம்
இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியை தரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கிடையே ஒற்றுமை நிலவும். தொழிலில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். உறவினர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பர்.
கன்னி
இன்று குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகள் படிப்பில் நல்ல ஆர்வம் காட்டுவார்கள். பணி புரிவோர்களுக்கு அவர்கள் திறமைகேற்ப பதவி உயர்வு கிடைக்கும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். கடன் பிரச்சனைகள் தீரும்.
துலாம்
உங்களுக்கு பிள்ளைகளால் இன்று வீண் செலவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் சற்று மந்த நிலை ஏற்படும். வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் நல்ல லாபத்தை அடைய முடியும். கடன் பிரச்சனைகளை தவிர்க்க சிக்கனமுடன் நடந்து கொள்வது நல்லது. தெய்வவழிபாடு நிம்மதியை தரும்.
விருச்சிகம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற மனகுழப்பம் ஏற்படும். மற்றவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது உத்தமம். வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் இருப்பது சிறப்பு. சுபகாரியங்களை தவிர்க்கவும்.
தனுசு
இன்று உங்களுக்கு அதிகாலையிலே சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளால் உங்கள் மதிப்பு கூடும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் குடும்பத்தினர் ஆதரவாய் இருப்பார்கள். புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும்.
மகரம்
இன்று நீங்கள் எந்த செயலையும் உற்சாகத்தோடு செய்வீர்கள். சிலருக்கு புதிய பொருட்கள் வாங்கும் யோகம் ஏற்படும். குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களில் அனுகூலப் பலன் கிடைக்கும். வருமானம் பெருகும். பொருளாதார நிலை உயரும்.
கும்பம்
இன்று பிள்ளைகளின் படிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரிடும். திருமண முயற்சிகளில் சற்று மந்த நிலை ஏற்படும். சேமிப்பு குறையும். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சனைகள் சற்று விலகும். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
மீனம்
இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். பிள்ளைகளால் குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் அனுகூலமான பலன் கிடைக்கும். உடல்நிலையில் சிறுசிறு உபாதைகள் ஏற்பட்டாலும் பெரிய பாதிப்புகள் உண்டாகாது.