Showing posts with label இன்று - 06.05.2017. Show all posts
Showing posts with label இன்று - 06.05.2017. Show all posts

Saturday, May 6, 2017

இன்று - 06.05.2017


கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com
வாங்கி படிக்க தவறாதீர்கள்
இந்த வார ஜோதிடம் இதழில்

வர்ணிக்க முடியாத நற்பலன் தரும் தசை!-                                                                  முனைவர் முருகு பாலமுருகன்

நோய் தீர்க்கும் ஸ்ரீரங்கநாதர்! –   சித்தயோகி சிவதாசன் ரவி

உத்திரட்டாதியினர் உச்சம் தொட என்ன வழி! நட்சத்திரப் பரிகாரங்கள்!                                                       ஜோதிஷண்முகம்

உங்கள் எதிர்கால ஜோதிட வழிகாட்டி! -     -முனைவர் முருகுபாலமுருகன்

தேய்பிறையில் முகூர்த்தம் வைக்கலாமா?  அம்சி விவேகானந்தன்

இந்த வார பஞ்சாங்கம்!--                      முனைவர் முருகுபாலமுருகன்

அறிவியல் ஆன்மிகத்தை இணைக்கும் ஜோதிடம்!-- - -டாக்டர் இரா.ரகு M,Sc Astro

வேலைக்கு உலை வைக்குமா கோட்சார குரு?-  -சரவணன் Gendral Sec ICAS

பெரும் பிரச்சனை தரும் பிரம்மஹத்தி தோஷம்! – தீர்க்கும் பரிகாரம்? (வாரம் ஒரு பரிகாரம்)-                                 விசு அய்யர்

வருமுன் காக்கும் வழி! –             ஜோதிடச்சுடர் ந. ஞானரதம் M.Phil Astro

ஆயிரம் பொன் பெறும் அதிர்ஷ்ட ஜாதகம்! -     பிராஜசேகரன் M.Phil Astro

27 நட்சத்திரங்களின் தன்மைகள்!
&மன்னை ஸ்ரீமதி விஅகிலாண்டேஸ்வரி ஐயர் M.Phil Astro

சகுனத்தால் வென்ற சத்ரபதி!-         சிவஸ்ரீ குருஜி ஜி.கே. முத்து குருக்கள்

வார ராசிபலன் (07-05-2017 முதல் 13-05-2017 வரை) சித்திரை 24 முதல் 30 வரை

முனைவர் முருகுபாலமுருகன்



இன்றைய  பஞ்சாங்கம்
06-05-2017, சித்திரை-23, சனிக்கிழமை, ஏகாதசி திதி இரவு 08.30 வரை பின்பு வளர்பிறை துவாதசி. பூரம் நட்சத்திரம் காலை 06.09 வரை பின்பு உத்திரம். சித்தயோகம் காலை 06.09 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 0. ஏகாதசி. பெருமாள் வழிபாடு நல்லதுசுப முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் - காலை 09.00-10.30,  எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள்- காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு09.00-10.00.

சுக்கி

சூரிய
புதன்
செவ்

கேது 
திருக்கணித கிரக நிலை
06.05.2017



ராகு
சந்தி
சனி(வ)
 

               
குரு(வ) 

இன்றைய ராசிப்பலன் -  06.05.2017

மேஷம்
இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
தொழிலில் நண்பர்களின் ஆலோசனைகளால் நல்ல பலன் கிடைக்கும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். கடன் பிரச்சனைகள் தீரும். உடல்நிலை சீராகும்.
ரிஷபம்
இன்று உங்களுக்கு உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். பிள்ளைகளின் படிப்பில் சற்று மந்த நிலை இருக்கும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் அனுகூலமான பலன் ஏற்பட இடையூறு இருந்தாலும் லாபம் கிட்டும். இதுவரை இருந்த பிரச்சனைகள் விலகும். நண்பர்களால் உதவி கிடைக்கும்.
மிதுனம்
இன்று குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகள் மூலம் மன மகிழ்ச்சி ஏற்படும். பணி புரிவோர்களுக்கு அவர்கள் திறமைகேற்ப பதவி உயர்வு கிடைக்கும். தொழிலில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். உறவினர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள்.
கடகம்
இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் பெரியவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடு மறைந்து ஒற்றுமை நிலவும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வியாபாரத்தில் இதுவரை வராத பழைய பாக்கிகள் இன்று வசூலாகும். சேமிப்பு உயரும்.
சிம்மம்
இன்று நீங்கள் புது பொலிவுடனும், தெம்புடனும் காணப்படுவீர்கள். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்பு கிட்டும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஆதரவாய் இருப்பார்கள். புதிய பொருள் வாங்கி மகிழ்வீர்கள்.
கன்னி
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராகத்தான் இருக்கும். பணிபுரிபவர்களுக்கு உத்தியோகத்தில் அதிகாரிகளால் நெருக்கடிகள் ஏற்படக்கூடும். பிள்ளைகளின் உடல்நிலையில் சிறுசிறு உபாதைகள் ஏற்பட்டாலும் பாதிப்புகள் உண்டாகாது. அரசு வழி உதவிகள் கிடைக்கப்பெறும். கடன்கள் குறையும்.
துலாம்
இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். ஒரு சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். தொழில் ரீதியான வெளியூர் பயணங்களில் அனுகூலப் பலன் கிட்டும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு அதிகாலையிலே சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளால் உங்கள் மதிப்பு கூடும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறையும். விலை உயர்ந்த பொருள்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும்.
தனுசு
இன்று உங்களுக்கு திடீர் பணவரவுகள் உண்டாகும். வியாபார ரீதியாக வெளிமாநில நபர்கள் மூலம் அனுகூலப்பலன்கள் பெறுவர். கடன் பிரச்சனைகள் தீரும். குடும்பத்தில் பிள்ளைகளுடன் -ருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
மகரம்
இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு மதியம் 12.30 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. தெய்வ வழிபாடு மன அமைதியை தரும்.
கும்பம்
இன்று உங்கள் ராசிக்கு மதியம் 12.30 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற மனகுழப்பம் ஏற்படும். மற்றவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது உத்தமம். வாகனங்களில் செல்லும் பொழுது அதிக கவனம் தேவை.
மீனம்


இன்று வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறும். திருமண முயற்சிகளில் அனுகூலப்பலன் கிட்டும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்கள் செய்து நல்ல லாபத்தை அடைவீர்கள். நண்பர்களின் உதவி கிடைக்கும். வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.