Showing posts with label இன்று - 06.07.2017. Show all posts
Showing posts with label இன்று - 06.07.2017. Show all posts

Thursday, July 6, 2017

இன்று - 06.07.2017

இன்று -  06.07.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com
\வாங்கி படிக்க தவறாதீர்கள் 
ஜுலை 2017 ஓம்சரவணபவா இதழுடன்
ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2017 - 2019
(12 ராசிகளுக்கும் பொதுப்பலன்,பரிகாரம்,
 அதிர்ஷ்டக்குறிப்புகள் அடங்கியது)  
96 பக்கம் இலவச இனைப்பு
இப்படிக்கு
ஜோதிட மாமணி, 
முனைவர் முருகு பாலமுருகன்
ஆசிரியர் - இந்த வார ஜோதிடம்




இன்றைய  பஞ்சாங்கம்
06-07-2017, ஆனி- 22, வியாழக்கிழமை, திரியோதசி திதி பின்இரவு 05.15 வரை பின்பு வளர்பிறைசதுர்த்தசி. அனுஷம் நட்சத்திரம் காலை 08.24 வரை பின்பு கேட்டை. சித்தயோகம் காலை 08.24 வரை பின்பு பிரபலாரிஷ்டயோகம். நேத்திரம்- 2, ஜீவன்- 1. பிரதோஷம். சிவ வழிபாடு நல்லது. தனிய நாள். சுப முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் - மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.




சுக்கி
சூரிய செவ்
கேது 
திருக்கணித கிரக நிலை
06.07.2017

புதன்

ராகு

சந்தி சனி  (வ)
               
குரு 

இன்றைய ராசிப்பலன் - 06.07.2017

மேஷம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சற்று மனகுழப்பத்துடன் காணப்படுவீர்கள்பிறரை நம்பி பெரிய தொகையை கொடுப்பது, அல்லது கடன் பெறுவதை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் வேலையில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
ரிஷபம்
இன்று தொழில் தொடர்பான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நல்ல பலனை தரும். திடீர் என்று நல்ல செய்தி வரும், சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இதுவரை இருந்த எதிர்ப்புகள் குறைந்து முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படக்கூடும்.
மிதுனம்
இன்று உடல்நிலையில் புது தெம்பும் உற்சாகமும் உண்டாகும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் அமையும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும்.
கடகம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக தான் இருக்கும். உத்தியோகத்தில் சுலபமான காரியங்கள் கூட காலதாமதமாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பூர்வீக சொத்துக்களை வழியில் அலைச்சலுக்கேற்ப அனுகூலமான பலன் கிடைக்கும். நண்பர்களின் ஆதரவு கிட்டும்.
சிம்மம்
இன்று குடும்பத்தில் தாராள தன வரவு உண்டாகும். உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். அரசு துறை ஊழியர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் கிட்டும். போட்டி பொறாமைகள் குறையும். சேமிப்பு உயரும்.
கன்னி
இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவதன் மூலம் மன அமைதி கிடைக்கும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். தொழில் ரீதியாக பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும்.
துலாம்
இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படும். பிள்ளைகளால் மனநிம்மதி குறையும். சேமிப்பு குறையும். வியாபாரத்தில் லாபம் ஓரளவு இருக்கும். உத்தியோகத்தில் இதுவரை இருந்த நெருகக்கடிகள் சற்று குறையும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
விருச்சிகம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். வீட்டிற்கு தேவையான பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் படிப்பு சிறப்பாக இருக்கும். உறவினர்கள் அனுகூலமாக இருப்பார்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்.
தனுசு
இன்று குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படக்கூடும். நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு உடனிருப்பவர்களே தடையாக அமைவார்கள். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெறும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலம் கிட்டும்.
மகரம்
இன்று எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு கௌரவ பதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கிடையே ஒற்றுமை பலப்படும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். மனஅமைதி இருக்கும்.
கும்பம்
இன்று உற்றார் உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பங்கள் நடைபெறும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். பூர்வீக சொத்துகளால் அனுகூலப்பலன் கிட்டும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.
மீனம்

இன்று குடும்பத்தில் உடன்பிறந்தவர்களுக்கிடையே ஒற்றுமை குறைந்து பிரச்சனை ஏற்படும் சூழ்நிலை உருவாகும்வியாபார ரீதியான செலவுகளை சமாளிக்க கடன் வாங்க நேரிடும். உற்றார் உறவினர்கள்  சாதகமாக இருப்பார்கள். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும்.