Showing posts with label இன்று - 06.09.2017. Show all posts
Showing posts with label இன்று - 06.09.2017. Show all posts

Wednesday, September 6, 2017

இன்று - 06.09.2017

இன்று -  06.09.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (மாத இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com

இன்றைய  பஞ்சாங்கம்
06-09-2017, ஆவணி- 21, புதன்கிழமை, பௌர்ணமி திதி பகல் 12.33 வரை பின்பு தேய்பிறை பிரதமை. சதயம் நட்சத்திரம் பகல் 12.56 வரை பின்பு பூரட்டாதி. சித்தயோகம் பகல் 12.56 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம்- 2, ஜீவன்- 1.
இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00





சந்தி
திருக்கணித கிரக நிலை
06.09.2017

ராகு
சுக்கி
கேது
சூரிய செவ்
புதன்

சனி 

குரு 

இன்றைய ராசிப்பலன் -  06.09.2017
மேஷம்
இன்று மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகள் படிப்பில் நல்ல ஆர்வம் காட்டுவார்கள். பணி புரிவோர்களுக்கு அவர்கள் திறமைகேற்ப பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறையும். புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும்.
ரிஷபம்
இன்று உங்களுக்கு அதிகாலையிலே சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். புத்திரர்களால் உங்கள் மதிப்பு கூடும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் புதிய கூட்டாளிகள் கிடைக்கப் பெறுவார்கள். உறவினர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள்.
மிதுனம்
இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தொழிலில் நண்பர்களின் ஆலோசனைகளால் நல்ல பலன் கிடைக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். திடீர் பயணம் செல்ல நேரிடும்.
கடகம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற மனகுழப்பம் ஏற்படும். மற்றவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது உத்தமம். வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் இருப்பது சிறப்பு. சுபகாரியங்களை தவிர்க்கவும்.
சிம்மம்
இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கிடையே ஒற்றுமை நிலவும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களில் அனுகூலப் பலன் உண்டாகும். வருமானம் பெருகும்.
கன்னி
இன்று நீங்கள் புது பொலிவுடனும், தெம்புடனும் காணப்படுவீர்கள். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனம் ஆனந்தப்படுவீர்கள். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்பு கிடைக்கும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி கிடைக்கும். கடன் பிரச்சனைகள் தீரும்.
துலாம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராகத்தான் இருக்கும். பணிபுரிபவர்களுக்கு உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் சக ஊழியர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். கடன் பிரச்சனைகளை தவிர்க்க சிக்கனமுடன் நடந்து கொள்வது நல்லது. தெய்வவழிபாடு மன நிம்மதியை தரும்.
விருச்சிகம்
இன்று நீங்கள் பிள்ளைகளின் படிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரிடும். புதிய முயற்சிகளில் சற்று மந்த நிலை ஏற்படும். சேமிப்பு குறையும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு உபாதைகள் ஏற்படலாம். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கப்பெறும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும்.
தனுசு
இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். புதிய பொருட்கள் வாங்கும் யோகம் ஏற்படும். ஒரு சிலருக்கு திடீர் பயணம் உண்டாகும். வியாபாரத்தில் இதுவரை வராத பழைய பாக்கிகள்  வசூலாகும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
மகரம்
இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். பிள்ளைகளால் குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் அனுகூலமான பலன் ஏற்பட இடையூறு இருந்தாலும் லாபம் கிடைக்கும். வேலையில் இதுவரை இருந்த பிரச்சனைகள் விலகும்.
கும்பம்
இன்று உங்களுக்கு பிள்ளைகள் வழியில் சுப செய்திகள் கிடைக்கும். தொழிலில் இருந்த மந்த நிலை மறைந்து முன்னேற்றம் ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். சேமிப்பு உயரும்.
மீனம்

இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தொழில் சம்பந்தமாக வெளிமாநில நபர்கள் மூலம் அனுகூலப்பலன்கள் பெறுவர். கடன் சுமை ஓரளவு குறையும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். உத்தியோகத்தில் புதிய நபர்கள் அறிமுகம் உண்டாகும்.