Showing posts with label இன்று - 07.02.2017. Show all posts
Showing posts with label இன்று - 07.02.2017. Show all posts

Tuesday, February 7, 2017

இன்று - 07.02.2017


கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com



இன்றைய  பஞ்சாங்கம்
07.02.2017, தை 25, செவ்வாய்கிழமை, ஏகாதசி திதி பகல் 01.47 வரை பின்பு வளர்பிறை துவாதசி, மிருகசீரிஷம் நட்சத்திரம் பகல் 01.49 வரை பின்பு திருவாதிரை, சித்தயோகம் பகல் 01.49 வரை பின்பு மரணயோகம், நேத்திரம் 2, ஜீவன் 1, ஏகாதசி விரதம், பெருமாள் வழிபாடு நல்லது.
இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

செவ்
சுக்கி  


சந்தி
கேது 
திருக்கணித கிரக நிலை
07.02.2017

சூரிய புதன்
ராகு
சனி
 

               
குரு  (வ)


இன்றைய ராசிப்பலன் -  07.02.2017
மேஷம்  
இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபடுவீர்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். வெளியூர், செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் புதிய நபரின் அறிமுகத்தால் நன்மை ஏற்படும்.

ரிஷபம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக தான் இருக்கும். பூர்வீக சொத்துக்களை வழியில் அலைச்சல் அதிகரித்தாலும் ஓரளவு லாபமே கிடைக்கும். வீண் செலவுகள் ஏற்படும். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்வார்கள். நண்பர்கள் உதவுவார்கள்.
மிதுனம்
இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் தொடர்பான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நல்ல பலனை தரும். சுப காரியங்களுக்கான முயற்ச்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். சேமிப்பு உயரும்.
கடகம்
இன்று உங்களுக்கு உறவினர் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பங்கள் நடைபெற்றாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் தொழில் பாதிப்படையாது. தெய்வ வழிபாடு மூலம் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.    கடன் பிரச்சனை தீரும்.
சிம்மம்
உங்கள் குடும்பத்தில் இன்று மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். வீட்டிற்கு தேவையான பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் படிப்பு சிறப்பாக இருக்கும். அலுவலகத்தில் உடன் பணி புரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும்.
கன்னி
இன்று குடும்பத்தில் உள்ளவர்களுக்கிடையே ஒற்றுமை நல்லபடியாக இருக்கும். உறவினர்கள் வழியாக உதவிகள் கிடைக்கும். திடீர் என்று நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பல போட்டிகளுக்கிடையே வெற்றி ஏற்படும். புதிய பொருட்களை வாங்குவீர்கள். மதியத்திற்கு பிறகு மன அமைதி ஏற்படும்.
துலாம்
இன்று உங்களுக்கு மனதில் குழப்பமும் கவலையும் உண்டாகும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படும் சூழ்நிலை உருவாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.
விருச்சிகம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் வேலைகளில் தடங்கல்கள் ஏற்படும். வியாபார விஷயத்தில் கொடுக்கல் வாங்கலில் நிதானமாக செயல்படுவது உத்தமம். வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. பணியில் கவனம் தேவை.
தனுசு
இன்று இல்லத்தில் தாராள தன வரவும், லஷ்மி கடாட்சமும் உண்டாகும். உத்தியோகத்தில் ஒரு சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் போட்டி பொறாமைகள் குறையும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.
மகரம்
இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். அரசு துறையில் பணிபுரிபவர்க்கு கௌரவ பதவிகள் அமையும். இதுவரை எதிரியாக இருந்தவர் கூட நண்பராக மாறி செயல்படுவார். தொழில் ரீதியாக வெளிநாட்டு நபர்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
கும்பம்
இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். உடன்பிறந்தவர்களுக்கிடையே ஒற்றுமை குறையும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சற்று பாதிப்புகள் ஏற்படும். நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
மீனம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். வியாபாரத்தில் ஈடுபடுவோர் பிரச்சனைகளை சமாளிக்க பிறரிடம் கடன் வாங்க நேரிடும். சிக்கனமாக செயல்பட்டால் பணப்பிரச்சனையை தவிர்க்கலாம். உறவினர்கள் சாதகமாக அமைவார்கள். குடும்பத்தில் உள்ள நெருகக்கடிகள் குறையும்.