Showing posts with label இன்று - 07.03.2017. Show all posts
Showing posts with label இன்று - 07.03.2017. Show all posts

Tuesday, March 7, 2017

இன்று - 07.03.2017


கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com


இன்றைய  பஞ்சாங்கம்
07.03.2017, மாசி 23, செவ்வாய்கிழமை, தசமி திதி இரவு 12.18 வரை  பின்பு வளர்பிறை ஏகாதசி, திருவாதிரை நட்சத்திரம் மாலை 06.36 வரை பின்பு புனர்பூசம், மரணயோகம் மாலை 06.36 வரை  பின்பு சித்தயோகம், நேத்திரம் 2, ஜீவன் 1, முருக வழிபாடு நல்லது.
இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

சுக்கி (வ)
செவ்

சந்தி
சூரிய கேது  புதன்
திருக்கணித கிரக நிலை
07.03.2017




ராகு
சனி
 

               
குரு  (வ)

இன்றைய ராசிப்பலன் -  07.03.2017
மேஷம்
இன்று வேலையில் சக ஊழியர்களுக்கிடையே ஒற்றுமை நல்லபடியாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்கள் வழியாக நல்ல செய்தி வரும். தொழில் ரீதியாக வெளிநாட்டு நபர்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.
ரிஷபம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். தேவையற்ற செலவுகளை சமாளிக்க பிறரிடம் கடன் வாங்க நேரிடும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் வியாபாரம் பாதிப்படையாது. கடன் பிரச்சனை தீரும். தெய்வ வழிபாட்டினை மேற்கொண்டால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
மிதுனம்
இன்று குடும்பத்தில் தாராள பணவரவு இருக்கும். உடன் பிறந்தவர்களுக்கிடையே ஒற்றுமை பலப்படும். உத்தியோகத்தில் ஒரு சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் புதிய நபரின் அறிமுகத்தால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
கடகம்
இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கிடையே ஒற்றுமை குறையும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் தடைகள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.
சிம்மம்
இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவீர்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். புதிய பொருட்களை வாங்குவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். சேமிப்பு உயரும்.
கன்னி
இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். அரசு துறையில் பணிபுரிபவர்க்கு கௌரவ பதவிகள் அமையும். இதுவரை எதிரியாக இருந்தவர்கள் கூட நண்பராக மாறி செயல்படுவார்கள். தொழில் தொடர்பான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நல்ல பலனை தரும்.
துலாம்
இன்று வியாபாரத்தில் லாபம் சுமாராக தான் இருக்கும். பூர்வீக சொத்துக்கள் தொடர்பாக அலைச்சல் உண்டாகும். வீண் செலவுகள் அதிகரிக்கும். சிக்கனமாக செயல்பட்டால் பணப்பிரச்சனையை தவிர்க்கலாம். உறவினர்கள் சாதகமாக அமைவார்கள். அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது.
விருச்சிகம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படும். வேலையில் வீண் பிரச்சனைகள் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகையை பிறரை நம்பி கொடுக்காமல் இருப்பது உத்தமம். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது.
தனுசு
உங்கள் குடும்பத்தில் இன்று மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். வீட்டிற்கு தேவையான பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் படிப்பு சிறப்பாக இருக்கும். சுப காரியங்களுக்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.
மகரம்
இன்று பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். தொழிலில் போட்டி பொறாமைகள் குறையும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். பொன் பொருள் சேரும்.
கும்பம்
இன்று குடும்பத்தில் உறவினர் வருகையால் வீண் செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். தொழிலில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் நெருக்கடிகள் குறையும். நண்பர்கள் உதவுவார்கள்.
மீனம்


இன்று உங்களுக்கு மனக்குழப்பம் உண்டாகும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும். தொழிலில் கூட்டாளிகளுக்கிடையே மாற்று கருத்துகள் ஏற்படும். உங்களின் புதிய முயற்சிகளுக்கு பெரியவர்களின் ஆதரவு கிடைக்கும். பணகஷ்டம் சற்று குறையும்.