Showing posts with label இன்று - 07.04.2017. Show all posts
Showing posts with label இன்று - 07.04.2017. Show all posts

Friday, April 7, 2017

இன்று - 07.04.2017

இன்று -  07.04.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com


வாங்கி படிக்க தவறாதீர்கள்
இந்த வார ஜோதிடம் இதழில்

ராஜா, எஸ்.பி.பி மோதல் ஏன்?-             அம்சி விவேகானந்தன்

கும்பிட வேண்டிய குலதெய்வம் எது? (வாரம் ஒரு பரிகாரம்)-     விசு அய்யர்

உங்கள் எதிர்கால ஜோதிட வழிகாட்டி! -     -முனைவர் முருகு பாலமுருகன்

மருத்துவ ஜோதிடத்தின் மகத்துவங்கள்!-- -  -டாக்டர் இராரகு M,Sc Astro

கல்விக்கு ஜோதிடம் அவசியம்!-       சிவஸ்ரீ குருஜி ஜி.கே. முத்து குருக்கள்

அரிட்டமும் ஆயுளும்! குமார சுவாமியம் கூறும் பன்னிரு பாவப் பலன்கள்!
                                    -பிராஜசேகரன் M.Phil Astro

வேண்டுதல்களை நிறைவேற்றும் முத்திரைகள்! – சித்தயோகி சிவதாசன் ரவி

எமகண்டம், குளிகை காலம்!
-மன்னை ஸ்ரீமதி விஅகிலாண்டேஸ்வரி ஐயர் M.Phil Astro

அரசுப் பணியில் சேர ஜாதக அமைப்புகள்!-  -சரவணன் Gendral Sec ICAS

சித்திரை 1-ல் மலரும் “ஹேவிளம்பி” புத்தாண்டுப் பலன்கள்!-     -
முனைவர் முருகு பாலமுருகன்

திருவோணத்தினரின் திறன் பெருக்கும் பரிகாரங்கள்! நட்சத்திரப் பரிகாரங்கள்!
ஜோதிஷண்முகம்

இந்த வார பஞ்சாங்கம்!--                      முனைவர் முருகு பாலமுருகன்

வெளிநாடு செல்லும் யோகமுடையவர் யார்?- ஜோதிடச்சுடர் ந. ஞானரதம்

வார ராசிபலன் (09-04-2017 முதல் 15-04-2017 வரை) பங்குனி 27 முதல் சித்திரை 2 வரை

முனைவர் முருகு பாலமுருகன்
இன்றைய  பஞ்சாங்கம்
7.04.2017, பங்குனி - 25, வெள்ளிக்கிழமை, ஏகாதசி திதி காலை 08.55 வரை பின்பு வளர்பிறை துவாதசி, மகம் நட்சத்திரம் இரவு 11.34 வரை பின்பு பூரம், மரணயோகம் இரவு 11.34 வரை பின்பு சித்தயோகம், நேத்திரம் 2, ஜீவன் 1, ஏகாதசி பெருமாள் வழிபாடு உத்தமம், புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் - பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00   

சூரிய
சுக்கி   (வ)
செவ்
புதன்


கேது 
திருக்கணித கிரக நிலை
07.04.2017



ராகு சந்தி
சனி(வ)
 

               
குரு  (வ)

இன்றைய ராசிப்பலன் -  07.04.2017

மேஷம்
இன்று தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை காணப்படும். குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் செலவுகள் அதிகமாகும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு புது தெம்பை தரும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை.
ரிஷபம்
இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் வரக்கூடும். தொழில் ரீதியான செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். பிள்ளைகளின் படிப்பில் சற்று ஆர்வம் குறையும். உத்தியோகத்தில் உடன் பணிபரிபவர்கள் சாதகமாக இருப்பார்கள். மனைவியால் நற்பலன் ஏற்படும்.
மிதுனம்
இன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் செயல்படுவார்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் தொழிலில் உள்ள பிரச்சனை குறையும். சிலருக்கு ஆடம்பர பொருள் வாங்கும் யோகம் உண்டாகும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன் கிடைக்கும்.
கடகம்
இன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படும். சுபமுயற்சிகளில் தாமதநிலை உண்டாகும். உறவினர்கள் உங்கள் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பார்கள். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலங்கள் இருக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிட்டும்.
சிம்மம்
இன்று நீங்கள் தொட்ட காரியம் எல்லாம் வெற்றியை கொடுக்கும். குடும்பத்தில் பணவரவு தாராளமாக இருக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். சுபசெலவுகள் ஏற்படும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை வந்து சேரும். தொழிலில் உள்ள போட்டி பொறாமை குறைந்து லாபம் பெருகும்.
கன்னி
இன்று உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் தேவையில்லாத பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப்பிரச்சனையை தவிர்க்கலாம். நண்பர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். தொழிலில் ஓரளவு லாபம் இருக்கும்.
துலாம்
இன்று உடல் நிலை மிக சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் உங்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் அனுகூலமாக இருப்பார்கள். திருமண சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பழைய கடன்கள் தீரும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடன்பிறந்தவர்களுக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகத்தில் சிலருக்கு அவர்கள் தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். தொழிலில் உங்கள் பெயர் புகழ் செல்வாக்கு கொடி கட்டி பறக்கும். வருமானம் பெருகும்.
தனுசு
இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். சுப முயற்சிகளில் தாமத நிலை ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். பணவரவு  சுமாராக இருக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
மகரம்
இன்று உங்களுக்கு மன அமைதி குறையும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எளிதில் முடிய வேண்டிய செயல்கள் கூட கால தாமதமாகும். எதிலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது உத்தமம். பணியில் கவனம் தேவை.
கும்பம்
இன்று தொழில் வியாபாரத்தில் அமோகமான பலன் கிட்டும். மாணவர்களுக்கு படிப்பில் தங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் கூடும். கடன் பிரச்சனைகள் தீரும். பெரியவர்களின் அறிமுகம் கிடைக்கும்.
மீனம்

இன்று தொழில் ரீதியாக பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் தீர்ந்து மகிழ்ச்சி நிலவும். சிலருக்கு பொன்பொருள் வாங்கும் யோகம் உண்டு. பழைய பாக்கிகள் வசூலாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.