Showing posts with label இன்று - 07.06.2017. Show all posts
Showing posts with label இன்று - 07.06.2017. Show all posts

Wednesday, June 7, 2017

இன்று - 07.06.2017

இன்று -  07.06.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com
வாங்கி படிக்க தவறாதீர்கள்
இந்த வார ஜோதிடம் இதழில்


12 லக்னப் பலன்கள்!-                       முனைவர் முருகுபாலமுருகன்

வார ராசிபலன் (11-06-2017 முதல் 17-06-2017 வரை) வைகாசி 28 முதல் ஆனி 03 வரை
முனைவர் முருகுபாலமுருகன்

மகப்பேறு தரும் சிம்மக் குறியீடு! –    சித்தயோகி சிவதாசன் ரவி

உலக அரங்கில் புகழ் பெறுபவர்!-           சிவஸ்ரீ குருஜி ஜி.கே. முத்து குருக்கள்

மணமுறிவுகளைத் தவிர்க்கும் மார்க்கம்! – (வாரம் ஒரு பரிகாரம்)-
விசுஅய்யர்

செல்வம் பெருக 29 அற்புத வழிகள்!   -     கடகம் இராமசாமி

ராகு தோஷ நிவர்த்திக்கு எளிய பரிகாரம்! –      ஜோதி ஷண்முகம்

வழக்கில் வெற்றி தரும் நட்சத்திரம்!-- -           -டாக்டர் இரா.ரகு M,Sc Astro

நீர் ராசிகள்! -                             கே.பிஐயப்ப சர்மா

புதன் தரும் பாண்டித்ய யோகம்! -          அம்சி விவேகானந்தன்

இந்த வார பஞ்சாங்கம்!--                      முனைவர் முருகுபாலமுருகன்

ஹோரை அமைந்தது எப்படி? -             ஜி. ஆர். வெங்கடேஸ்வரன்


உங்கள் எதிர்கால ஜோதிட வழிகாட்டி! -     -முனைவர் முருகுபாலமுருகன்



இன்றைய  பஞ்சாங்கம்
07-06-2017, வைகாசி -24, புதன்கிழமை, திரியோதசி திதி பகல் 01.56 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. விசாகம் நட்சத்திரம் இரவு 11.18 வரை பின்பு அனுஷம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 2, ஜீவன் - 1. வைகாசி விசாகம். முருக வழிபாடு நல்லது.
இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00



சுக்கி
சூரிய புதன்
செவ்
கேது 
திருக்கணித கிரக நிலை
07.06.2017



ராகு
சனி(வ)
 

சந்தி
குரு (வ)

இன்றைய ராசிப்பலன் -  07.06.2017
மேஷம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். வீட்டிற்கு தேவையான பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் புதிய நபரின் அறிமுகத்தால் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இன்று மாலை 04.34 மணி முதல் சந்திராஷ்டமம் இருப்பதால் அதன் பின் மன உளைச்சல் அதிகமாகும்.
ரிஷபம்
இன்று பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.
மிதுனம்
இன்று வியாபாரத்தில் லாபம் சுமாராக தான் இருக்கும். பூர்வீக சொத்துக்கள் தொடர்பாக அலைச்சல் உண்டாகலாம். வீண் செலவுகள் அதிகரிக்கும். சிக்கனமாக செயல்பட்டால் பணப்பிரச்சனையை தவிர்க்கலாம். உறவினர்கள் சாதகமாக அமைவார்கள். அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது.
கடகம்
இன்று குடும்பத்தில் உறவினர் வருகையால் வீண் பிரச்சனைகள் உண்டாகலாம். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்ககூடும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.
சிம்மம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்கள் வழியாக நல்ல செய்தி வரும். வேலையில் சக ஊழியர்களுக்கிடையே ஒற்றுமை நல்லபடியாக இருக்கும். எதிரியாக இருந்தவர் கூட நண்பராக மாறி செயல்படுவார்கள். தொழில் ரீதியான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும்.
கன்னி
இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவீர்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். சுப காரியங்களுக்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வெளியூர் பயணங்களால் -னுகூலப்பலன் உண்டாகும்.
துலாம்
இன்று குடும்பத்தில் தாராள பணவரவு இருக்கும். உடன் பிறந்தவர்களுக்கிடையே ஒற்றுமை பலப்படும். உத்தியோகத்தில் சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். தொழிலில் போட்டி பொறாமைகள் குறையும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். தேவையற்ற செலவுகளை சமாளிக்க பிறரிடம் கடன் வாங்க நேரிடும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் வியாபாரம் பாதிப்படையாதுஉடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் நெருக்கடிகள் குறையும். நண்பர்கள் உதவுவார்கள்.
தனுசு
இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். பிள்ளைகள் மூலம் சுபசெலவுகள் ஏற்படும். அரசு துறையில் பணிபுரிபவர்க்கு கௌரவ பதவிகள் அமையும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.
மகரம்
இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை அளிக்கும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சனைகள் விலகி சுமூகநிலை உருவாகும். தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமை பலப்படும். பழைய கடன்கள் வசூலாகும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும்.
கும்பம்
இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கிடையே ஒற்றுமை குறையும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உங்களின் புதிய முயற்சிகளுக்கு பெரியவர்களின் ஆதரவு கிட்டும். நண்பர்களின் உதவியால் பணகஷ்டம் குறையும்.
மீனம்

இன்று உங்கள் ராசிக்கு மாலை 04.34 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படும். வேலையில் வீண் பிரச்சனைகள் உண்டாகும். பெரிய தொகையை பிறரை நம்பி கொடுக்காமல் இருப்பது உத்தமம். புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது.