Showing posts with label இன்று - 07.07.2017. Show all posts
Showing posts with label இன்று - 07.07.2017. Show all posts

Friday, July 7, 2017

இன்று - 07.07.2017

இன்று -  07.07.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com
வாங்கி படிக்க தவறாதீர்கள் 
ஜுலை 2017 ஓம்சரவணபவா இதழுடன்
ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2017 - 2019
(12 ராசிகளுக்கும் பொதுப்பலன்,பரிகாரம்,
 அதிர்ஷ்டக்குறிப்புகள் அடங்கியது)  
96 பக்கம் இலவச இனைப்பு
இப்படிக்கு
ஜோதிட மாமணி, 
முனைவர் முருகு பாலமுருகன்
ஆசிரியர் - இந்த வார ஜோதிடம்




இன்றைய  பஞ்சாங்கம்
07-07-2017, ஆனி- 23, வெள்ளிக்கிழமை, நாள் முழுவதும்சதுர்த்தசி திதி. கேட்டை நட்சத்திரம் பகல் 11.21 வரை பின்பு மூலம். மரணயோகம் பகல் 11.21 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம்- 2, ஜீவன்- 1. அம்மன் வழிபாடு நல்லது.
இராகு காலம் - பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00   




சுக்கி
சூரிய செவ்
கேது 
திருக்கணித கிரக நிலை
07.07.2017

புதன்

ராகு

சந்தி சனி  (வ)
               
குரு 

இன்றைய ராசிப்பலன் -  07.07.2017

மேஷம்
இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். மற்றவர்கள் மீது தேவையற்ற கோபம் எரிச்சல் உண்டாகும். உங்கள் ராசிக்கு பகல் 11.21 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் முடிந்த வரை பொறுமையுடன் இருப்பது நல்லது. சுபகாரியங்களையும், பயணங்களையும் தவிர்ப்பது உத்தமம்.
ரிஷபம்
இன்று உங்களுக்கு மன அமைதி குறையும். உங்கள் ராசிக்கு பகல் 11.21 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகும். எதிலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது உத்தமம்.
மிதுனம்
இன்று தொழில் ரீதியாக பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் தீர்ந்து மகிழ்ச்சி நிலவும். சிலருக்கு பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் உள்ள போட்டி பொறாமைகள் குறையும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும்.
கடகம்
இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். சுப முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் கூட்டாளிகளுக்கிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். வேலையில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த உதவி கிட்டும்.
சிம்மம்
இன்று தொழில் வியாபாரத்தில் அமோகமான லாபம் பெருகும். மாணவர்கள் படிப்பில் தங்கள் திறமைகளை வெளிபடுத்தி பாராட்டுதல்களை பெறுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமண சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கடன்கள் தீரும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும்.
கன்னி
இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடன் பிறந்தவர்களுக்கிடையே இருந்த மனக்கசப்புகள் நீங்கி ஒற்றுமை கூடும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். தொழில் ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிட்டும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
துலாம்
இன்று தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை காணப்படும். உறவினர்கள் வருகையால் செலவுகள் அதிகரிக்கும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிட்டும். கடன் பிரச்சனைகள் குறையும். தெய்வ வழிபாடு நல்லது.
விருச்சிகம்
இன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் செயல்படுவார்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் தொழிலில் உள்ள பிரச்சனை குறையும். சிலருக்கு ஆடம்பர பொருள் வாங்கும் யோகம் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன் கிடைக்கும்.
தனுசு
இன்று உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் தேவையில்லாத பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு புது தெம்பை தரும். தொழிலில் ஓரளவு லாபம் கிட்டும்.
மகரம்
இன்று நீங்கள் தொட்ட காரியம் எல்லாம் வெற்றியை கொடுக்கும். குடும்பத்தில் பணவரவு தாராளமாக இருக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.
கும்பம்
இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் அனுகூலமாக இருப்பார்கள். தொழிலில் உங்கள் பெயர் புகழ் செல்வாக்கு கொடி கட்டி பறக்கும். பொன் பொருள் சேரும்.
மீனம்

இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் வரக்கூடும். தொழில் ரீதியான செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். பிள்ளைகளின் படிப்பில் சற்று ஆர்வம் குறையும். பணவரவு  சுமாராக இருக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.