Showing posts with label இன்று - 07.08.2017. Show all posts
Showing posts with label இன்று - 07.08.2017. Show all posts

Monday, August 7, 2017

இன்று - 07.08.2017

இன்று -  07.08.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (மாத இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com




இன்றைய  பஞ்சாங்கம்
07-08-2017, ஆடி- 22, திங்கட்கிழமை, பௌர்ணமி திதி இரவு 11.40 வரை பின்பு தேய்பிறை பிரதமை. திருவோணம் நட்சத்திரம் பின்இரவு 03.32 வரை பின்பு அவிட்டம். அமிர்தயோகம் பின்இரவு 03.32 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம்- 2, ஜீவன்- 1. பௌர்ணமி. ஹயக்ரீவருக்கு உகந்த நாள்.
சந்திர கிரகணம் இரவு 10.52 முதல் 12.49 வரை.
இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.




சுக்கி  
கேது 
               
திருக்கணித கிரக நிலை
07.08.2017

சூரிய செவ்
சந்தி
புதன்
ராகு

சனி  (வ)
               
குரு

இன்றைய ராசிப்பலன் -  07.08.2017
மேஷம்
இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். ஒரு சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். தொழில் ரீதியாக வெளியூர் பயணங்களில் லாபகரமான பலன்கள் கிட்டும். குடும்பத்தில் அமைதி நிலவும். உறவினர்களால் உங்களுக்கு அனுகூலங்கள் உண்டாகும்.
ரிஷபம்
இன்று உங்களுக்கு திடீர் பணவரவுகள் உண்டாகும். கடன் பிரச்சனைகள் தீரும். குடும்பத்தில் அமைதி இருக்கும். வியாபாரத்தில் வெளிமாநில நபர்கள் மூலம் அனுகூலப்பலன்கள் பெறுவர். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சுபகாரியங்கள் கைகூடும்.
மிதுனம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற மனகுழப்பம் ஏற்படும். மற்றவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது உத்தமம். வாகனங்களில் செல்லும் பொழுது அதிக கவனம் தேவை. சுபகாரியங்களை தவிர்ப்பது நல்லது.
கடகம்
இன்று வீட்டில் சுபகாரிய பேச்சுவார்த்தைகள் தொடங்க அனுகூலமான நாளாகும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் பணிபுரிபவர்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். கடன் பிரச்சனைகள் தீரும்.
சிம்மம்
இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் பெரியவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடு மறைந்து ஒற்றுமை நிலவும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வியாபாரத்தில் கொடுக்கல்& வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.
கன்னி
இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தொழிலில் நண்பர்களின் ஆலோசனைகளால் நல்ல பலன் உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். இதுவரை வராத பழைய பாக்கிகள் இன்று வசூலாகும். சேமிப்பு உயரும்.
துலாம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராகத்தான் இருக்கும். பணிபுரிபவர்களுக்கு உத்தியோகத்தில் அதிகாரிகளால் நெருக்கடிகள் ஏற்படலாம். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இதுவரை இருந்த பிரச்சனைகள் விலகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்தெய்வ வழிபாடு மன அமைதியை தரும்.
விருச்சிகம்
இன்று குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் அவர்கள் திறமைகேற்ப பதவி உயர்வு கிட்டும். வியாபார ரீதியான புதிய கருவிகள் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். வருமானம் பெருகும்.
தனுசு
இன்று உங்களுக்கு உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகளின் படிப்பில் சற்று மந்த நிலை இருக்கும். தொழில் ரீதியான புதிய முயற்சிகளில் சிறு இடையூறுக்குப் பின் அனுகூலமான பலன் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் வேலையில் நிதானத்துடன் கவனமாக செயல்படுவது உத்தமம்.
மகரம்
இன்று நீங்கள் புது பொலிவுடனும், தெம்புடனும் காணப்படுவீர்கள். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்பு கிட்டும். வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறையும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
கும்பம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகலாம். குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படும். பிள்ளைகளின் உடல்நிலையில் சிறுசிறு உபாதைகள் ஏற்பட்டாலும் பாதிப்புகள் உண்டாகாது. உத்தியோகஸ்தர்களுக்கு அரசு வழி உதவிகள் கிடைக்கப்பெறும். கடன்கள் குறையும்.
மீனம்
இன்று உங்களுக்கு அதிகாலையிலே சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளால் உங்கள் மதிப்பு கூடும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். புதிய பொருள் வாங்கி மகிழ்வீர்கள். கொடுத்த கடன்கள் வசூலாகும்.