Showing posts with label இன்று - 08.01.2017. Show all posts
Showing posts with label இன்று - 08.01.2017. Show all posts

Sunday, January 8, 2017

இன்று - 08.01.2017

இன்று -  08.01.2017

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com

இன்றைய  பஞ்சாங்கம்
08.01.2017, மார்கழி 24, ஞாயிற்றுகிழமை, தசமிதிதி காலை 07.52 வரை பின்பு ஏகாதசி திதி பின்இரவு 05.03 வரை பின்பு வளர்பிறை துவாதசி, பரணி நட்சத்திரம் பகல் 12.26 வரை பின்பு கிருத்திகை, பிரபலாரிஷ்டயோகம் பகல் 12.26 வரை பின்பு சித்தயோகம், நேத்திரம் 2, ஜீவன் 0, கிருத்திகை, வைகுண்ட ஏகாதசி  முருக பெருமாள் வழிபாடு நல்லது.
 இராகு காலம் - மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் -  பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00,  மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00,



சந்தி


கேது  செவ்
சுக்கி  
திருக்கணித கிரக நிலை
  08.01.2017





ராகு
புதன் (வ)
சூரிய
சனி 

               
குரு 


இன்றைய ராசிப்பலன் -  08.01.2017
மேஷம்
இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷமான விஷயங்கள் நடைபெறும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் இருக்கும், தொழிலில் அதிக லாபம் கிடைக்கும்.
ரிஷபம்
இன்று நீங்கள் பணப்பிரச்சனையிலிருந்து விடுபட சிக்கனமுடன் செயல்படவேண்டும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படும். பெரியோர்களின் மன கஷ்டத்திற்கு ஆளாவீர்கள். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து பண உதவிகள் கிடைக்கும்.
மிதுனம்
இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கி ஒற்றுமை நிலவும். பெண்கள் வீட்டு தேவையை பூர்த்தி செய்வார்கள். நண்பர்களோடு தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். வராத கடன்கள் வசூலாகும்.
கடகம்
இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். விலை உயர்ந்த பொருள்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நண்பர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள்.
சிம்மம்
இன்று உறவினர் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பங்கள் நடைபெற்றாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்காக சிறு தொகையை செலவிட நேரிடும். வியாபாரிகள் வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும்.
கன்னி
இன்று குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படும். எதிலும் நிம்மதியில்லாத நிலை தோன்றும். வெளியிலிருந்து வர வேண்டிய தொகை கைக்கு கிடைப்பதில் காலதாமதமாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த ஒரு செயலிலும் நிதானமாக செயல்படுவது நல்லது.
துலாம்
இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி காணப்படும். பிள்ளைகள் படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தர்ம காரியங்கள் செய்து மனமகிழ்ச்சி அடைவீர்கள்.
விருச்சிகம்
இன்று வீட்டில் ஒற்றுமை குறையும் சூழ்நிலை உருவாகும். திருமண பேச்சுவார்த்தைகள் கைகூடும் நேரத்தில் இடையூறுகள் ஏற்படும். பிள்ளைகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
தனுசு
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். உடல்நிலையில் சோர்வும், சுறுசுறுப்பின்மையும் உண்டாகும். குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படும். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் இதுவரை இருந்த பிரச்சனைகள் சற்று குறையும்.
மகரம்
இன்று உங்களுக்கு வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும். திருமண சுபமுயற்சிகளில் சற்று தாமதநிலை ஏற்படும். வியாபாரத்தில் பொறுப்புடன் செயல்படுவதன் மூலம் கடன்கள் குறையும். குடும்பத்தோடு தெய்வ தரிசனத்திற்காக மேற்கொள்ளும் பயணங்கள் மனதிற்கு நிம்மதியை தரும்.
கும்பம்
இன்று சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தினருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பெரிய மனிதர்களுடன் நட்பு உண்டாகும். உடன்பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.
மீனம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காவிட்டாலும் வியாபாரம் ஓரளவு சுமாராக இருக்கும். உடல்நிலையில் சிறு பாதிப்புகள் ஏற்படும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன் பிரச்சனைகள் ஓரளவு குறையும்.