Showing posts with label இன்று - 08.02.2017. Show all posts
Showing posts with label இன்று - 08.02.2017. Show all posts

Wednesday, February 8, 2017

இன்று - 08.02.2017


கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com


இன்றைய  பஞ்சாங்கம்
08.02.2017, தை 26, புதன்கிழமைதுவாதசி திதி பகல் 11.29 வரை பின்பு வளர்பிறை திரியோதசி, திருவாதிரை நட்சத்திரம் பகல் 12.13 வரை பின்பு புனர்பூசம், நாள் முழுவதும் சித்தயோகம், நேத்திரம் 2, ஜீவன் 1, பிரதோஷம் சிவ வழிபாடு நல்லது-.
இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00

செவ்
சுக்கி


சந்தி
கேது 
திருக்கணித கிரக நிலை
08.02.2017


சூரிய புதன்
ராகு
சனி 

               
குரு (வ)


இன்றைய ராசிப்பலன் -  08.02.2017
மேஷம்  
இன்று உங்களுக்கு அமோகமான பலனை தரும் நாளாக இருக்கும். தொழிலில் உங்கள் பெயர் புகழ் செல்வாக்கு கொடி கட்டி பறக்கும். உங்கள் குடும்பத்தில் தாராள பண வரவும், லஷ்மி கடாட்சமும் உண்டாகும். திருமண சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும்.


ரிஷபம்
இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காவிட்டாலும் பொருட்தேக்கம் இருக்காது. உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பங்கள் நடைபெற்றாலும் அவர்களால் வீண் செலவுகளும் ஏற்படும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை.
மிதுனம்
உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பொன்பொருள் வாங்கும் யோகம் சிலருக்கு உண்டு. குடும்பத்தில் உள்ள பிரச்சனை தீர்ந்து மகிழ்ச்சி நிலவும். தொழிலில் உள்ள போட்டி பொறாமைகள் குறையும். எதிலும் தெம்போடு செயல்படுவீர்கள். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை கொடுக்கும்.
கடகம்
உறவினர்களால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படும். சுபமுயற்சிகளில் தாமதநிலை உண்டாகும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் வீண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். குடும்பத்தில் பிள்ளைகளால் சந்தோஷம் உண்டாகும். தெய்வ வழிபாடுகள் மனதிற்கு நிம்மதியை கொடுக்கும்.
சிம்மம்
இன்று நீங்கள் வேலையில் புது உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் தங்கள் திறமைகளை வெளிபடுத்த புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வேலையில் சக ஊழியர்களுடன் சுமூக உறவு ஏற்படும். வருமானம் பெருகும்.
கன்னி
இன்று நீங்கள் வேலையில் புது பொலிவுடனும், தெம்புடனும் செயல்படுவீர்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் உங்கள் பிரச்சனைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு அவர்கள் தகுதிக்கேற்ற பதவி உயர்வு உண்டாகும். வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும்.
துலாம்
இன்று பணவரவு ஓரளவு சுமாராக இருக்கும். வீண் செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். வேலையில் பொறுப்புடன் நடந்து கொள்வதன் மூலம் உங்களின் மதிப்பு உயரும். வேலைபளு சற்று குறையும்.
விருச்சிகம்
இன்று குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படும். எதிலும் நிம்மதியில்லாத நிலை தோன்றும். வெளியிலிருந்து வர வேண்டிய தொகை கைக்கு கிடைப்பதில் காலதாமதமா-கும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த ஒரு செயலிலும் நிதானமாக செயல்படுவது நல்லது.
தனுசு
இன்று உங்களுக்கு உடல் நிலை மிக சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் உங்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சிலருக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். தொழில் தொடங்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன் கிடைக்கும்.
மகரம்
இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடன்பிறப்புகள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். தொழில் புரிவோர்களுக்கு வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன்கள் உண்டாகும். கடன் பிரச்சனைகள் தீரும். மன அமைதி இருக்கும். பெற்றோரின் அன்பை பெறுவர்.
கும்பம்
இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்தில் ஏற்படும் தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். தொழிலில் உள்ள மந்தநிலை மாறும். வேலையாட்கள் சாதகமாக இருப்பார்கள். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும்.
மீனம்
இன்று குடும்பத்தில் எதிர்பாராத மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். திருமண சுப முயற்சிகளில் மந்த நிலை ஏற்படும். அலுவலகத்தில் உடனிருப்பவர்களால் வீண் பிரச்சனைகள் ஏற்படும். கூட்டாளிகளின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.