Showing posts with label இன்று - 08.03.2017. Show all posts
Showing posts with label இன்று - 08.03.2017. Show all posts

Wednesday, March 8, 2017

இன்று - 08.03.2017


கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com



இன்றைய  பஞ்சாங்கம்
08.03.2017, மாசி 24, புதன்கிழமை, ஏகாதசி திதி  இரவு 10.49 வரை பின்பு வளர்பிறை துவாதசி, புனர்பூசம் நட்சத்திரம் மாலை 05.45 வரை பின்பு பூசம், நாள் முழுவதும் சித்தயோகம், நேத்திரம் 2, ஜீவன் 0, ஏகாதசி விரதம், பெருமாள் வழிபாடு நல்லது, தனியனாள், சுப முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00
சுக்கி(வ)
செவ்

சந்தி
சூரிய கேது 
புதன் 
திருக்கணித கிரக நிலை
08.03.2017



ராகு
சனி
 

               
குரு  (வ)

இன்றைய ராசிப்பலன் - 08.03.2017
மேஷம்
இன்று இல்லத்தில் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். நண்பர்களின் ஆலோசனைகளால் உங்கள் பிரச்சனைக்கு நல்ல தீர்வு உண்டாகும். சிலருக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். தொழில் தொடங்கும் முயற்சிகளில் அனுகூலப் பலன் கிடைக்கும். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும்.
ரிஷபம்
இன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் புது உற்சாகத்தோடு செயல்படுவார்கள். குடும்பத்தில் உள்ளவர்களுக்கிடையே அன்பும் ஆதரவும் பெருகும். மாணவர்கள் படிப்பில் தங்கள் திறமைகளை வெளிபடுத்த புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பு மன மகிழ்ச்சியை கொடுக்கும்.
மிதுனம்
இன்று பிள்ளைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். பண வரவு தாராளமாக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் புதிய வாய்ப்புகள் அமையும். பூர்வீக சொத்துகளை விற்பதில் எதிர்பார்த்த லாபம் கிட்டும்.
கடகம்
இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்தில் ஏற்படும் தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்குவீர்கள். தொழிலில் உள்ள மந்த நிலை மாறும். வேலையில் பொறுப்புடன் நடந்து கொள்வதன் மூலம் உங்களின் மதிப்பு உயரும். பணி சுமை குறையும்.
சிம்மம்
இன்று உங்களுக்கு அமோகமான பலன்கள் உண்டாகும். தொழிலில் உங்கள் பெயர் புகழ் செல்வாக்கு கொடி கட்டி பறக்கும். அரசு ஊழியர்களுக்கு அவர்கள் தகுதிக்கேற்ற பதவி உயர்வு உண்டாகும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
கன்னி
இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பொன்பொருள் வாங்கும் யோகம் சிலருக்கு உண்டு. குடும்பத்தில் உள்ள நெருக்கடிகள் தீர்ந்து மகிழ்ச்சி நிலவும். கடன் பிரச்சனைகள் தீரும். மன அமைதி இருக்கும். பெற்றோரின் அன்பை பெறுவர். தொழிலில் போட்டி பொறாமைகள் குறையும்.
துலாம்
இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடன்பிறப்புகள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். தொழில் புரிவோர்களுக்கு வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன்கள் உண்டாகும். வேலையில் சக ஊழியர்களுடன் சுமூக உறவு ஏற்படும். வருமானம் பெருகும்.
விருச்சிகம்
இன்று குடும்பத்தில் உள்ளவர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். உங்கள் ராசிக்கு மதியம் 11.56 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். சுபமுயற்சிகளை தள்ளிவைப்பது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது.
தனுசு
இன்று குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படும். உங்கள் ராசிக்கு மதியம் 11.56க்கு பின் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிம்மதியில்லாத நிலை தோன்றும். வெளியிலிருந்து வர வேண்டிய தொகை கைக்கு கிடைப்பதில் காலதாமதமாகும். எந்த செயலையும் நிதானமாக செய்வது நல்லது.
மகரம்
இன்று அலுவலகத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலம் கிட்டும். தொழிலில் கூட்டாளிகளின் ஆலோசனைகளால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வேலையாட்கள் சாதகமாக இருப்பார்கள். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் பிள்ளைகளால் சந்தோஷம் உண்டாகும்.
கும்பம்
இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். திருமண சுபமுயற்சிகளில் மந்த நிலை ஏற்படும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் வீண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதியை தரும்.
மீனம்

இன்று நீங்கள் எந்த ஒரு செயலையும் செய்வதற்கு கடினமாக உழைப்பு வேண்டும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காவிட்டாலும் பொருட்தேக்கம் இருக்காது. குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நண்பர்கள் உங்களின் வளர்ச்சிக்கு துணையாக இருப்பார்கள்.