Showing posts with label இன்று - 08.04.2017. Show all posts
Showing posts with label இன்று - 08.04.2017. Show all posts

Saturday, April 8, 2017

இன்று - 08.04.2017


கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com


வாங்கி படிக்க தவறாதீர்கள்
இந்த வார ஜோதிடம் இதழில்

ராஜா, எஸ்.பி.பி மோதல் ஏன்?-             அம்சி விவேகானந்தன்

கும்பிட வேண்டிய குலதெய்வம் எது? (வாரம் ஒரு பரிகாரம்)-     விசு அய்யர்

உங்கள் எதிர்கால ஜோதிட வழிகாட்டி! -     -முனைவர் முருகு பாலமுருகன்

மருத்துவ ஜோதிடத்தின் மகத்துவங்கள்!-- -  -டாக்டர் இராரகு M,Sc Astro

கல்விக்கு ஜோதிடம் அவசியம்!-       சிவஸ்ரீ குருஜி ஜி.கே. முத்து குருக்கள்

அரிட்டமும் ஆயுளும்! குமார சுவாமியம் கூறும் பன்னிரு பாவப் பலன்கள்!
                                    -பிராஜசேகரன் M.Phil Astro

வேண்டுதல்களை நிறைவேற்றும் முத்திரைகள்! – சித்தயோகி சிவதாசன் ரவி

எமகண்டம், குளிகை காலம்!
-மன்னை ஸ்ரீமதி விஅகிலாண்டேஸ்வரி ஐயர் M.Phil Astro

அரசுப் பணியில் சேர ஜாதக அமைப்புகள்!-  -சரவணன் Gendral Sec ICAS

சித்திரை 1-ல் மலரும் “ஹேவிளம்பி” புத்தாண்டுப் பலன்கள்!-     -
முனைவர் முருகு பாலமுருகன்

திருவோணத்தினரின் திறன் பெருக்கும் பரிகாரங்கள்! நட்சத்திரப் பரிகாரங்கள்!
ஜோதிஷண்முகம்

இந்த வார பஞ்சாங்கம்!--                      முனைவர் முருகு பாலமுருகன்

வெளிநாடு செல்லும் யோகமுடையவர் யார்?- ஜோதிடச்சுடர் ந. ஞானரதம்

வார ராசிபலன் (09-04-2017 முதல் 15-04-2017 வரை) பங்குனி 27 முதல் சித்திரை 2 வரை

முனைவர் முருகு பாலமுருகன்

இன்றைய  பஞ்சாங்கம்
8.04.2017, பங்குனி - 26, சனிக்கிழமை, துவாதசி திதி காலை 09.00 வரை பின்பு வளர்பிறை திரியோதசி, பூரம் நட்சத்திரம் இரவு 12.32 வரை பின்பு உத்திரம், சித்தயோகம் இரவு 12.32 வரை பின்பு மரணயோகம், நேத்திரம் 2, ஜீவன் 1, சனி பிரதோஷம், சிவ வழிபாடு உத்தமம்.        
இராகு காலம் - காலை 09.00-10.30,  எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள்- காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு09.00-10.00.

சூரிய
சுக்கி   (வ)
செவ்
புதன்


கேது 
திருக்கணித கிரக நிலை
08.04.2017



ராகு
சந்தி
சனி(வ)
 

               
குரு  (வ)

இன்றைய ராசிப்பலன் -  08.04.2017

மேஷம்
இன்று உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெறுவதில் காலதாமதம் ஏற்படும்குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்பட கூடும். திருமண முயற்சிகளில் சிறு தடைகளுக்குப் பின் அனுகூலப் பலன் கிட்டும். நண்பர்களின் மூலம் உதவிகள் கிடைக்கும்.
ரிஷபம்
இன்று வெளியூர் பயணங்களால் அலைச்சலும் உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை அளிக்கும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும்.
மிதுனம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். பொன் பொருள் சேரும்.
கடகம்
இன்று பிள்ளைகளுக்கு வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும். தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். உத்தியோகத்தில் புதிய நபர்களால் வீண் பிரச்சனைகள் ஏற்படலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களால் அனுகூலம் கிட்டும்.
சிம்மம்
இன்று குடும்பத்தினருக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை கூடும். உற்றார் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். சொந்த தொழில் புரிவோர்க்கு வெளிநாட்டு தொடர்பு கிட்டும். புதிய சொத்துக்களை வாங்கி மகிழ்வீர்கள். சுபகாரியங்கள் கைகூடும்.
கன்னி
இன்று குடும்பத்தில் உற்றார் உறவினர்களுக்கிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படக் கூடும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். எடுக்கும் முயற்சிகளுக்கு நண்பர்களின் ஓத்துழைப்பு கிட்டும். தொழில் சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி உண்டாகும்.
துலாம்
இன்று குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். சிலருக்கு புத்திர வழியில் அனுகூலம் உண்டாகும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் இதுவரை இருந்த பிரச்சனைகள் சுமூகமாக முடியும். பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். பழைய கடனகள் தீரும்.
விருச்சிகம்
இன்று தொழில் ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலப் பலன்கள் ஏற்படும். எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கும், பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். பணப்பிரச்சனைகள் குறையும்
தனுசு
இன்று பிள்ளைகளால் குடும்பத்தில் தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் மனஸ்தாபம் ஏற்படக் கூடும். எதிலும் கவனம் தேவை. ஆடம்பர செலவுகளை குறைப்பதன் மூலம் பணப்பிரச்சனையை தவிர்க்கலாம். தெய்வ வழிபாடு மனஅமைதியை தரும்
மகரம்
இன்று எதிலும் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது சிறப்பு. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடனும் நிதானத்துடனும் செல்வது நல்லது.
கும்பம்
இன்று பிள்ளைகள் மூலம் ஆனந்தமான செய்தி வந்து சேரும். உறவினர்களால் உதவி கிடைக்கும். பொன்பொருள் சேர்க்கை மனதிற்கு மகிழ்சி தரும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல பலன் கிடைக்கும். பெரிய மனிதர்களுடன் நட்பு ஏற்படும். பணவரவு தாரளமாக இருக்கும்.
மீனம்

இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் சிலருக்கு வெளிநாடுகளில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும். நண்பர்களின் மூலமாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனு-கூலமான பலன் உண்டாகும். சேமிப்பு உயரும்.