Showing posts with label இன்று - 08.09.2017. Show all posts
Showing posts with label இன்று - 08.09.2017. Show all posts

Friday, September 8, 2017

இன்று - 08.09.2017

இன்று -  08.09.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (மாத இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com

இன்றைய  பஞ்சாங்கம்
08-09-2017, ஆவணி- 23, வெள்ளிக்கிழமை, துதியை திதி பகல் 10.44 வரை பின்பு தேய்பிறை திரிதியை. உத்திரட்டாதி நட்சத்திரம் பகல் 12.31 வரை பின்பு ரேவதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம்- 2, ஜீவன்- 1. அம்மன் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் - பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00   

சந்தி




திருக்கணித கிரக நிலை
08.09.2017

ராகு
சுக்கி
கேது
சூரிய செவ்
புதன்

சனி 

குரு 

இன்றைய ராசிப்பலன் - 08.09.2017
மேஷம்
இன்று பணவரவு ஓரளவு சுமாராக இருக்கும். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தினர் இடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். உத்தியோகத்தில் பொறுப்புடன் நடந்து கொள்வதன் மூலம் உங்களின் மதிப்பு உயரும். பழைய பாக்கிகள் வசூலாகும்.
ரிஷபம்
இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடன்பிறப்புகள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். தொழில் வியாபாரத்தில் வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன்கள் உண்டாகும். கடன் பிரச்சனைகள் தீரும். மன அமைதி இருக்கும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள்.
மிதுனம்
இன்று நீங்கள் வேலையில் புது பொலிவுடனும், தெம்புடனும் செயல்படுவீர்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் உங்கள் பிரச்சனைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு அவர்கள் தகுதிக்கேற்ற பதவி உயர்வு உண்டாகும். வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும்.
கடகம்
இன்று குடும்பத்தில் எதிர்பாராத வீண் செலவுகள் செய்ய நேரிடும். சுபகாரிய முயற்சிகளில் மந்த நிலை ஏற்படும். வேலையில் உடனிருப்பவர்களால் வீண் பிரச்சனைகள் ஏற்படலாம். எதிலும் கவனம் தேவை. கூட்டாளிகளின் ஒத்துழைப்போடு வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள்.
சிம்மம்
இன்று குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படும். எதிலும் நிம்மதியில்லாத நிலை தோன்றும். வெளியிலிருந்து வர வேண்டிய தொகை கைக்கு கிடைப்பதில் காலதாமதமா-கும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த ஒரு செயலிலும் நிதானமாக செயல்படுவது நல்லது.
கன்னி
இன்று உங்களுக்கு அமோகமான பலனை தரும் நாளாக இருக்கும். தொழிலில் உங்கள் பெயர் புகழ் செல்வாக்கு கொடி கட்டி பறக்கும். குடும்பத்தில் தாராள பண வரவும், லஷ்மி கடாட்சமும் உண்டாகும். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உறவினர்கள் வழியில் அனுகூலம் கிட்டும்.
துலாம்
இன்று உங்களுக்கு உடல் நிலை மிக சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சிலருக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். தொழில் தொடங்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன் ஏற்படும். வருமானம் பெருகும்.
விருச்சிகம்
இன்று உறவினர்களால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படலாம். கொடுத்த கடன் திரும்ப பெறுவதில்  தாமதநிலை உண்டாகும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். குடும்பத்தில் பிள்ளைகளால் சந்தோஷம் உண்டாகும். தெய்வ வழிபாடுகள் மனதிற்கு நிம்மதியை கொடுக்கும்.
தனுசு
இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் உண்டாகலாம். குடும்பத்தில் ஏற்படும் தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். தொழிலில் உள்ள மந்தநிலை மாறும். வேலையாட்கள் சாதகமாக இருப்பார்கள். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும்.
மகரம்
உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பொன்பொருள் வாங்கும் யோகம் சிலருக்கு உண்டு. குடும்பத்தில் உள்ள பிரச்சனை தீர்ந்து மகிழ்ச்சி நிலவும். தொழிலில் உள்ள போட்டி பொறாமைகள் குறையும். எதிலும் தெம்போடு செயல்படுவீர்கள். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை கொடுக்கும்.
கும்பம்
இன்று பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் சில இடையூறுகள் ஏற்படலாம். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பங்கள் நடைபெறும். பெரிய மனிதர்களின் ஆறுதல் வார்த்தைகளால் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும்.
மீனம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் புது உற்சாகத்தோடு ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் தங்கள் திறமைகளை வெளிபடுத்த புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வேலையில் சக ஊழியர்களுடன் சுமூக உறவு ஏற்படும். வருமானம் பெருகும்.