Showing posts with label இன்று - 09.01.2017. Show all posts
Showing posts with label இன்று - 09.01.2017. Show all posts

Monday, January 9, 2017

இன்று - 09.01.2017


இன்று -  09.01.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com

இன்றைய  பஞ்சாங்கம்
09.01.2017, மார்கழி 25, திங்கட்கிழமை, துவாதசி திதி பின் இரவு 02.01 வரை பின்பு திரியோதசி, கிருத்திகை நட்சத்திரம் காலை 10.16 வரை பின்பு ரோகிணி, மரணயோகம் காலை 10.16 வரை பின்பு அமிர்தயோகம்,     நேத்திரம் 2, ஜீவன் 1.
இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.




சந்தி

கேது  செவ்
சுக்கி  
               
திருக்கணித கிரக நிலை
  09.01.2017





ராகு
புதன்
சூரிய
சனி 

               
குரு 


இன்றைய ராசிப்பலன் -  09.01.2017
மேஷம்
இன்று உங்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். உறவினர்கள் வழியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க சற்று காலதாமதமாகும். வேலை செய்யும் இடங்களில் சக தொழிலாளர்களிடம் விட்டு கொடுத்து செயல்படுவதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
ரிஷபம்          
இன்று உங்களுக்கு காலையிலே மனமகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். உங்கள் பிரச்சனைகள் தீர உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வீட்டின் பொருளாதார நிலை மிகச்சிறப்பாக இருக்கும். சிலருக்கு மேற்படிப்பிற்காக வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் அமையும்.
மிதுனம்
இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். உறவினர்களுக்கிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரிக்கும். வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணத்தால் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படும்.
கடகம்
இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். நீண்ட நாட்களாக வராத கடன்கள் இன்று வந்து சேரும். வியாபாரிகளுக்கு அவர்கள் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்ற நிலை உருவாகும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.
சிம்மம்
இன்று நீங்கள் செய்யும் வேலைகளில் ஆர்வத்தோடு ஈடுபடுவீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சிலருக்கு அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். திருமண சுப முயறச்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.
கன்னி
இன்று உங்களுக்கு உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். உறவினர்களால் மகிழ்ச்சி தரும் சம்பங்கள் நடைபெறும், வீண் செலவுகள் உண்டாகும். பிள்ளைகளுக்கு படிப்பில் ஈடுபாடு சற்று குறைந்து காணப்படும். வெளியூர் பயணங்களால் சாதகமான பலன்கள் ஏற்படும்.
துலாம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் வேலைகளில் தடங்கல்கள் ஏற்படும். வியாபார விஷயத்தில் கொடுக்கல் வாங்கலில் நிதானமாக செயல்படுவது உத்தமம். வாகனங்களில் செல்லும் பொழுது சற்று எச்சரிக்கையுடன் செல்வது நல்லது.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராகத் தான் இருக்கும். குடும்பத்தில் பிள்ளைகள் வழியாக இன்று நல்லது நடக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளால் எதிர்பாராத வீண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும் இருப்பினும் உடனிருப்பவர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.
தனுசு
இன்று நீங்கள் ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உறவினர்களின் வருகையால்  மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். ஒரு சிலருக்கு புத்திர வழியில் நல்ல செய்தி கிடைக்கும். தொழில் புரிவோர்க்கு வெளியூர் பயணங்களால் நல்ல அனுகூலமான பலன்கள் உண்டாகும்.
மகரம்
இன்று நீங்கள் எந்த வேலையிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படும். வியாபாரத்தில் மறைமுக எதிரிகளால் தொல்லைகள் உண்டாகும். ஒருசிலருக்கு செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். திருமண முயற்சிகளில் தாமதநிலை ஏற்படும்.
கும்பம்
இன்று நீங்கள் மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். தொழிலில் மந்த நிலை காணப்படும். அரசு வழியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் சற்று தாமதநிலை ஏற்படும். உத்தியோகத்தில் வேலைபளு சற்று அதிகமாகும். தெய்வ வழிபாடு செய்வதன் மூலம் நன்மை அடையலாம்.
மீனம்

இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். குடும்ப உறவுகளுக்கிடையே நல்ல ஒற்றுமை நிலவும். அரசு துறையில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும். தொழில் சம்பந்தபட்ட வழக்கு விஷயங்களில் வெற்றி வாய்ப்புகள் கிட்டும்.