Showing posts with label இன்று - 09.02.2017. Show all posts
Showing posts with label இன்று - 09.02.2017. Show all posts

Thursday, February 9, 2017

இன்று - 09.02.2017


கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com


இன்றைய  பஞ்சாங்கம்
09.02.2017, தை 27, வியாழக்கிழமை, திரியோதசி திதி காலை 09.22 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி, புனர்பூசம் நட்சத்திரம் காலை 10.48 வரை பின்பு பூசம், அமிர்தயோகம் காலை 10.48 வரை பின்பு சித்த யோகம், நேத்திரம் 2, ஜீவன் 1,  தைப்பூசம் வடலூர்ஜோதி தரிசனம் முருக வழிபாடு நல்லது, சுபமுகூர்த்த நாள் சகல சுப முயற்சிகளுக்கும் ஏற்ற நாள்.
இராகு காலம் - மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.

செவ்
சுக்கி



கேது 
திருக்கணித கிரக நிலை
09.02.2017
சந்தி
சூரிய புதன்

ராகு
சனி
 

               
குரு  (வ)


இன்றைய ராசிப்பலன் -  09.02.2017
மேஷம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் தாமதநிலை ஏற்படும். சுபமுயற்சிகளில் நற்செய்தி கிடைக்கும். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணம் அனுகூலமாக இருக்கும்.
ரிஷபம்
இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்ற நிலை ஏற்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். பொன்பொருள் சேரும்.
மிதுனம்
இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். குடும்பத்தினருக்கிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றும். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.
கடகம்
இன்று உங்களுக்கு சுபசெலவுகள் செய்யகூடிய வாய்ப்பு உண்டாகும். உறவினர்கள் ஆதரவாய் இருப்பார்கள். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பணி புரிபவர்களுக்கு அவர்கள் தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும்.
சிம்மம்
இன்று நீங்கள் செய்யும் செயலில் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். நண்பர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்ச்சியை தரும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.
கன்னி
இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். சுபமுயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றியை தரும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். வங்கி சேமிப்பு உயரும்.
துலாம்
இன்று உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். தொழில் ரீதியாக லாபம் அடைவீர்கள். உடல் ஆரோக்கியம் சீராகும்.
விருச்சிகம்
இன்று உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்தமும் உண்டாகும். பிள்ளைகளுக்காக சிறு தொகை செலவிட நேரிடும். வியாபாரத்தில் நண்பர்களால் முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலமான பலன் உண்டாகும்.
தனுசு
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பத்தில் உள்ளவர்களிடம் பேசும் பொழுது கவனமாக பேச வேண்டும். வியாபாரத்தில் மற்றவர்களுக்கு கடன் கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம். மன அமைதி குறையும்.
மகரம்
இன்று உங்களுக்கு நண்பர்கள் மூலம் அனுகூலமான பலன் கிடைக்கும். பிள்ளைகளுடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும். பழைய கடன்கள் வசூலாகும். வியாபாரத்தில் எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறி  நன்மை செய்வார்கள். பொன் பொருள் சேரும்.
கும்பம்
உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
மீனம்
இன்று உங்களுக்கு பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். குடும்பத்தினருடன் தேவையற்ற பிரச்சனைகள் தோன்றும். எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக இருப்பார்கள். கடன் பிரச்சனைகள் ஓரளவு குறையும்.