Showing posts with label இன்று - 09.03.2017. Show all posts
Showing posts with label இன்று - 09.03.2017. Show all posts

Thursday, March 9, 2017

இன்று - 09.03.2017

இன்று -  09.03.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com



இன்றைய  பஞ்சாங்கம்
09.03.2017, மாசி 25, வியாழக்கிழமை, துவாதசி திதி இரவு 09.39 வரை பின்பு வளர்பிறை திரியோதசி, பூசம் நட்சத்திரம் மாலை 05.12 வரை பின்பு ஆயில்யம், நாள் முழுவதும் சித்தயோகம், நேத்திரம் 2, ஜீவன் 1, சுபமுகூர்த்த நாள் சகல சுப முயற்சிகளுக்கும் ஏற்ற நாள்.
இராகு காலம் - மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.
சுக்கி(வ)
செவ்


சூரிய கேது  புதன் 
திருக்கணித கிரக நிலை
09.03.2017

சந்தி

ராகு
சனி
 

               
குரு  (வ)

இன்றைய ராசிப்பலன் -  09.03.2017
மேஷம்
இன்று வியாபாரத்தில் மந்த நிலை ஏற்படும். வர வேண்டிய தொகை கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். பிள்ளைகளுக்காக சிறு தொகை செலவிட நேரிடும். உத்தியோகஸ்தர்கள் வேலையில் மேலதிகாரிகளை அனுசரித்து சென்றால் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
ரிஷபம்
இன்று நீங்கள் எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் ஒப்பந்தமாகும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். பொன் பொருள் சேரும். உடல் ஆரோக்கியம் சீராகும்.
மிதுனம்
இன்று குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். உறவினர்களுடன் தேவையற்ற பிரச்சனைகள் தோன்றும். உத்தியோகத்தில் வேலைபளு கூடும். எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணம் அனுகூலமாக இருக்கும்.
கடகம்
இன்று குடும்பத்தில் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். லாபம் பெருகும். மன அமைதி இருக்கும்
சிம்மம்
இன்று வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். உற்றார்  உறவினர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழிலில் வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலமான பலன் உண்டாகும்.
கன்னி
இன்று வியாபாரத்தில் நண்பர்கள் மூலம் அனுகூலமான பலன் கிடைக்கும். பிள்ளைகளுடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் எதிர்பார்த்த சலுகைகள் கிட்டும். புதிய வாகனம் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். கடன் பிரச்சனை தீரும்.
துலாம்
இன்று குடும்பத்தில் அன்பும் அமைதியும் நிலவும். பணிபுரிபவர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். உங்கள் திறமைக்கேற்ப பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும்.
விருச்சிகம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் மந்த நிலை உண்டாகும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை அளிக்கும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்ச்சியை தரும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். பண கஷ்டம் குறையும்.
தனுசு
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடங்கல்கள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வேலையில் உடனிருப்பவர்களிடம் பேசும் பொழுது கவனமாக பேச வேண்டும். வியாபாரத்தில் மற்றவர்களுக்கு கடன் கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம். மன அமைதி குறையும்.
மகரம்
இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். ஆடை ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள். தொழிலில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.
கும்பம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். தொழில் ரீதியாக லாபம் பெருகும். உடல் ஆரோக்கியம் சீராகும். நண்பர்கள் உதவுவார்கள்.
மீனம்

இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை மந்தமாக இருக்கும். சுபமுயற்சிகளில் தடங்கல்கள் ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் தாமதநிலை ஏற்படும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக இருப்பார்கள். கடன் பிரச்சனைகள் ஓரளவு குறையும்.