Showing posts with label இன்று - 09.06.2017. Show all posts
Showing posts with label இன்று - 09.06.2017. Show all posts

Friday, June 9, 2017

இன்று - 09.06.2017

இன்று -  09.06.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com

வாங்கி படிக்க தவறாதீர்கள்
இந்த வார ஜோதிடம் இதழில்


12 லக்னப் பலன்கள்!-                       முனைவர் முருகுபாலமுருகன்

வார ராசிபலன் (11-06-2017 முதல் 17-06-2017 வரை) வைகாசி 28 முதல் ஆனி 03 வரை
முனைவர் முருகுபாலமுருகன்

மகப்பேறு தரும் சிம்மக் குறியீடு! –    சித்தயோகி சிவதாசன் ரவி

உலக அரங்கில் புகழ் பெறுபவர்!-           சிவஸ்ரீ குருஜி ஜி.கே. முத்து குருக்கள்

மணமுறிவுகளைத் தவிர்க்கும் மார்க்கம்! – (வாரம் ஒரு பரிகாரம்)-
விசுஅய்யர்

செல்வம் பெருக 29 அற்புத வழிகள்!   -     கடகம் இராமசாமி

ராகு தோஷ நிவர்த்திக்கு எளிய பரிகாரம்! –      ஜோதி ஷண்முகம்

வழக்கில் வெற்றி தரும் நட்சத்திரம்!-- -           -டாக்டர் இரா.ரகு M,Sc Astro

நீர் ராசிகள்! -                             கே.பிஐயப்ப சர்மா

புதன் தரும் பாண்டித்ய யோகம்! -          அம்சி விவேகானந்தன்

இந்த வார பஞ்சாங்கம்!--                      முனைவர் முருகுபாலமுருகன்

ஹோரை அமைந்தது எப்படி? -             ஜி. ஆர். வெங்கடேஸ்வரன்


உங்கள் எதிர்கால ஜோதிட வழிகாட்டி! -     -முனைவர் முருகுபாலமுருகன்



இன்றைய  பஞ்சாங்கம்
09-06-2017, வைகாசி -26, வெள்ளிக்கிழமை, பௌர்ணமி திதி மாலை 06.39 வரை பின்பு தேய்பிறை பிரதமை. கேட்டை நட்சத்திரம் பின்இரவு 05.11 வரை பின்பு மூலம். மரணயோகம் பின்இரவு 05.11 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் - 2, ஜீவன் - 1. பௌர்ணமி. அம்மன் வழிபாடு நல்லது. சுப முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் - பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00   



சுக்கி
சூரிய புதன்
செவ்
கேது 
திருக்கணித கிரக நிலை
09.06.2017



ராகு
சனி(வ)
  சந்தி

குரு (வ)

இன்றைய ராசிப்பலன் -  09.06.2017
மேஷம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடங்கல்கள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன அமைதி குறையும். வேலையில் உடனிருப்பவர்களிடம் பேசும் பொழுது கவனமாக பேச வேண்டும். வியாபாரத்தில் மற்றவர்களுக்கு கடன் கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம்.
ரிஷபம்
இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் கிட்டும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். லாபம் பெருகும்.
மிதுனம்
இன்று வியாபாரத்தில் நண்பர்கள் மூலம் அனுகூலமான பலன் கிடைக்கும். பிள்ளைகளுடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் எதிர்பார்த்த சலுகைகள் கிட்டும். வெளியூர் பயணங்களில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும்.
கடகம்
இன்று வியாபாரத்தில் மந்த நிலை ஏற்படும். வரவேண்டிய தொகை கிடைப்பதில் கால தாமதம் உண்டாகும். பிள்ளைகளுக்காக சிறு தொகை செலவிட நேரிடும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். நண்பர்களின் ஆதரவு கிட்டும்.
சிம்மம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். பொன் பொருள் சேரும். உடல் ஆரோக்கியம் சீராகும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். வருமானம் பெருகும்.
கன்னி
இன்று குடும்பத்தில் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். தொழில் ரீதியாக லாபம் பெருகும். உடல் ஆரோக்கியம் சீராகும். நண்பர்கள் அனுகூலமாய் இருப்பார்கள்.
துலாம்
இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை மந்தமாக இருக்கும். சுபமுயற்சிகளில் தடங்கல்கள் ஏற்படக்கூடும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் தாமதநிலை ஏற்படும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். கொடுக்கல் வாங்கல் ஓரளவுக்கு லாபகரமாக இருக்கும். பணக் கஷ்டம் குறையும்.
விருச்சிகம்
இன்று நீங்கள் எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் ஒப்பந்தமாகும். ஆடை ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். சேமிப்பு உயரும்.
தனுசு
இன்று குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். உறவினர்களுடன் தேவையற்ற பிரச்சனைகள் தோன்றும். உத்தியோகத்தில் வேலைபளு கூடும். எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக இருப்பார்கள். கடன் பிரச்சனைகள் குறையும்.
மகரம்
இன்று குடும்பத்தில் அன்பும் அமைதியும் நிலவும். உறவினர்கள் மூலம் சுப செய்திகள் வந்து சேரும். பணிபுரிபவர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். புதிய வாகனம் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். கடன் பிரச்சனை தீரும்.
கும்பம்
இன்று பணவரவுகள் சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
மீனம்

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் எல்லாம் வெற்றி உண்டாகும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணங்கள் அனுகூலமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். உடல் நிலை சீராகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.