Showing posts with label இன்று - 09.07.2017. Show all posts
Showing posts with label இன்று - 09.07.2017. Show all posts

Sunday, July 9, 2017

இன்று - 09.07.2017

இன்று -  09.07.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com


இன்றைய  பஞ்சாங்கம்
09-07-2017, ஆனி- 25, ஞாயிற்றுக்கிழமை, பௌர்ணமி திதி காலை 09.36 வரை பின்பு தேய்பிறை பிரதமை. பூராடம் நட்சத்திரம் மாலை 04.48 வரை பின்பு உத்திராடம். சித்தயோகம் மாலை 04.48 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம்- 2, ஜீவன்- 1.
இராகு காலம் - மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் -  பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00,  மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00,




சுக்கி
சூரிய செவ்
கேது  
திருக்கணித கிரக நிலை
09.07.2017

புதன்

ராகு
சந்தி
சனி  (வ)
               
குரு 

இன்றைய ராசிப்பலன் -  09.07.2017
மேஷம்
இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். புதிய செயல்களை தொடங்க அனுகூலமான நாளாகும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகமாகும்.
ரிஷபம்
இன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகள் உண்டாகும். பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். வெளியூர் பயணங்களையும், புதிய முயற்சிகளையும் தவிர்ப்பது நல்லது.
மிதுனம்
இன்று தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். குடும்பத்தோடு வெளியூர் பயணம் செல்ல நேரிடும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடன் பிறந்தவர்களிடமிருந்த மனஸ்தாபங்கள் விலகும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும். பழைய பாக்கிகள் வசூலாகும்.
கடகம்
இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வியாபாரம் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உற்றார் உறவினர்கள் வழியில் சுப செய்திகள் வரும். கடன்கள் குறையும்.
சிம்மம்
இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். கடன் பிரச்சனைகள் ஓரளவு தீரும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும்.
கன்னி
இன்று குடும்பத்தில் எதிர்பார்க்காத செலவுகள் தோன்றி சேமிப்பு குறையும். வியாபாரத்தில் கூட்டாளிகளால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப்பிரச்சனை ஓரளவு குறையும். எதையும் செய்வதற்கு முன் சிந்தித்து செயல்படுவது நல்லது.
துலாம்
இன்று எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பெரிய மனிதர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். புதிய பொருள் சேரும்.
விருச்சிகம்
இன்று உடன் பிறந்தவர்களுக்கிடையே மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடும். பிள்ளைகளால் வீண் செலவுகள் உண்டாகலாம். பெண்களுக்கு வீட்டில் வேலை பளு அதிகரிக்க கூடும். உங்களின் பிரச்சனைகளுக்கு மனைவி வழியில் அனுகூலம் கிட்டும். வியாபாரத்தில் உள்ள மந்த நிலை நீங்கும்.
தனுசு
இன்று உங்கள் மனதில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் அனுகூலமாக இருப்பார்கள். சிலருக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிட்டும். திருமண முயற்சிகள் தொடங்க நல்ல அனுகூலமான நாளாகும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள்.
மகரம்
இன்று பிள்ளைகள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் கூடும். உங்களின் அறிவுத் திறமையால் வியாபாரத்தில் வளர்ச்சி அடைய கூடிய வாய்ப்புகள் உருவாகும். உற்றார் உறவினர்கள் வழியில் இருந்த பிரச்சனை குறையும். எதிர்பாராத உதவி கிட்டும்.
கும்பம்
இன்று குடும்பத்தில் வியக்க வைக்கும் இனிய சம்பவங்கள் நடைபெறும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். சிலருக்கு பொன்பொருள் வாங்கும் யோகம் உண்டாகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். பிள்ளைகள் விரும்பியதை வாங்கி மகிழ்வார்கள். பணவரவு சிறப்பாக இருக்கும்.
மீனம்

இன்று குடும்பத்தில் புத்திர வழியில் சுப செலவுகள் ஏற்படும். எதிர்பார்த்த இடத்தலிருந்து உதவிகள் கிடைக்கும். உடனிருப்பவர்களால் அனுகூலம் கிட்டும். திருமண முயற்சிகளில் தடைகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். கொடுத்த கடன் வசூலாகும்.