Showing posts with label இன்று - 10.01.2017. Show all posts
Showing posts with label இன்று - 10.01.2017. Show all posts

Tuesday, January 10, 2017

இன்று - 10.01.2017


இன்று -  10.01.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com

இன்றைய  பஞ்சாங்கம்
10.01.2017, மார்கழி 26, செவ்வாய்கிழமை, திரியோதசி திதி இரவு 10.54 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி, ரோகிணி நட்சத்திரம் காலை 07.56 வரை பின்பு மிருகசீரிஷம்,   பின்இரவு 05.32 திருவாதிரை, அமிர்தயோகம் காலை 07.56 வரை பின்பு சித்தயோகம் பின்இரவு 05.32 மரணயோகம், நேத்திரம் 2, ஜீவன் 1, பிரதோஷம், நடராஜர் அபிஷேகம், சிவ வழிபாடு நல்லது, தணியனாள், சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.




சந்தி

கேது  செவ்
சுக்கி  
               
திருக்கணித கிரக நிலை
10.01.2017





ராகு
புதன்
சூரிய
சனி 

               
குரு 


இன்றைய ராசிப்பலன்  -  10.01.2017
மேஷம்
இன்று உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்தமும் உண்டாகும். பிள்ளைகளுக்காக சிறு தொகை செலவிட நேரிடும். வியாபாரத்தில் நண்பர்களால் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். அலுவலகத்தில் உடன் பணி புரிபவர்கள் சாதகமாக இருப்பார்கள். கடன் பிரச்சனைகள் ஓரளவு குறையும்.
ரிஷபம்
இன்று நீங்கள் செய்யும் செயலில் புது பொலிவுடனும், தெம்புடனும் செயல்படுவீர்கள். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.
மிதுனம்
இன்று உங்களுக்கு பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். குடும்பத்தினருடன் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் நிதானமாக இருப்பது நல்லது. சுபமுயற்சிகளில் தடங்கல்கள் ஏற்படும். வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணம் அனுகூலமாக இருக்கும்.
கடகம்
இன்று நீங்கள் ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும்.
சிம்மம்
இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்ற நிலை ஏற்படும். பணி புரிபவர்களுக்கு அவர்கள் தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.
கன்னி
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சற்று தாமதநிலை ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்கள் ஆதரவாக இருப்பார்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
துலாம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற மனகுழப்பம் ஏற்படும். மற்றவர்களிடம் அதிகம் பேசுவதை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது உத்தமம். வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் இருப்பது சிறப்பு.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு நண்பர்கள் மூலம் அனுகூலமான பலன் கிடைக்கும். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். பழைய கடன்கள் வசூலாகும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும்.
தனுசு
இன்று உங்களுக்கு சுபசெலவுகள் செய்யகூடிய வாய்ப்பு உண்டாகும். உறவினர்கள் ஆதரவாய் இருப்பார்கள். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அலுவலகத்தில் உடன் பணி புரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். தொழில் ரீதியாக லாபம் அடைவீர்கள்.
மகரம்
இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் அதிக செலவுகள் ஏற்படும். குடும்பத்தினருக்கிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றும். தொழில் சம்பந்தபட்ட வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலமான பலன் ஏற்படும். இதுவரை இருந்த பிரச்சனைகள் சற்று குறையும்.
கும்பம்
உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றியை தரும்.
மீனம்

இன்று உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஒரு சிலருக்கு உத்தியோகத்தில் உயர்பதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் இதுவரை எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறி  நன்மை செய்வார்கள்.