Showing posts with label இன்று - 10.02.2017. Show all posts
Showing posts with label இன்று - 10.02.2017. Show all posts

Friday, February 10, 2017

இன்று - 10.02.2017

இன்று -  10.02.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com


இன்றைய  பஞ்சாங்கம்
10.02.2017, தை 28 வெள்ளிக்கிழமை, வளர்பிறை சதுர்த்தசி திதி காலை 07.30 வரை பின்பு பௌர்ணமி பின்இரவு 06.03 பின்பு பிரதமை, பூசம் நட்சத்திரம் காலை 09.39 வரை  பின்பு ஆயில்யம், நாள் முழுவதும் மரணயோகம், நேத்திரம் 2, ஜீவன் 1, பௌர்ணமி பூஜை நவகிரக வழிபாடு நல்லது. சுப முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் - பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00  

செவ்
சுக்கி  



கேது  
திருக்கணித கிரக நிலை
10.02.2017

சந்தி
சூரிய புதன்
ராகு
சனி 


               
குரு  (வ)


இன்றைய ராசிப்பலன் -  10.02.2017
மேஷம்  
இன்று உங்களுக்கு உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். பிள்ளைகளால் வீண் செலவுகள் உண்டாகும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பங்கள் நடைபெறும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். தெய்வ வழிபாடு செய்வதன் மூலம் நன்மை அடையலாம்.

ரிஷபம்
இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். நீண்ட நாட்களாக வராத கடன்கள் இன்று வசூலாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் புரிவோர்க்கு வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.
மிதுனம்
இன்று நீங்கள் எந்த வேலையிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படும். வியாபாரத்தில் மறைமுக எதிரிகளால் தொல்லைகள் உண்டாகும். தொழில் விஷயமாக மேற்கொள்ளும் பயணத்தால் நல்ல பலன்கள் ஏற்படும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
கடகம்
இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். குடும்ப உறவுகளுக்கிடையே நல்ல ஒற்றுமை நிலவும். வீட்டின் பொருளாதார நிலை மிகச்சிறப்பாக இருக்கும். சிலருக்கு மேற்படிப்பிற்காக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.
சிம்மம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். உறவினர்கள் வழியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க சற்று காலதாமதமாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளால் எதிர்பாராத வீண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். குடும்பத்தினர் உறுதுணையாக இருப்பார்கள்.
கன்னி
இன்று நீங்கள் செய்யும் வேலைகளில் ஆர்வத்தோடு ஈடுபடுவீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும். தொழில் சம்பந்தபட்ட வழக்குகளில் வெற்றி கிட்டும்.
துலாம்
இன்று உங்களுக்கு காலையிலே மனமகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். உங்கள் பிரச்சனைகள் தீர உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். புதிய பொருள் வாங்குவீர்கள்.
விருச்சிகம்
இன்று நீங்கள் மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். தொழிலில் மந்த நிலை காணப்படும். அரசு வழியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் சற்று தாமதநிலை ஏற்படும். வேலை செய்யும் இடங்களில் சக தொழிலாளர்களிடம் விட்டு கொடுத்து செயல்படுவதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
தனுசு
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் சற்று மனகுழப்பத்துடன் காணப்படுவீர்கள்பிறரை நம்பி பெரிய தொகையை கொடுப்பதை, அல்லது மற்றவர்களிடமிருந்து கடன் வாங்குவதை தவிர்ப்பது உத்தமம். மற்றவர் விஷயங்களில் தலையிடாமல் இருந்தால் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
மகரம்
இன்று நீங்கள் ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உறவினர்களின் வருகையால்  மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். சிலருக்கு அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். திருமண சுப முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். பிள்ளைகள் அனுகூலமாக அமைவார்கள்.
கும்பம்
இன்று புதிய முயற்சிகள் செய்வதற்கு அனுகூலமான நாளாகும். பிள்ளைகள் தம் பொறுப்பறிந்து செயல்படுவர். உடன்பிறந்தவர்களால் இல்லத்தில் மகிழ்ச்சி கூடும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் பெருகும்.
மீனம்
இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். உறவினர்களுக்கிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரிக்கும். குடும்பத்தில் மனைவி வழியாக இன்று நல்லது நடக்கும். வியாபாரத்தில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும்.